Vijay Parandur Speech: அரிட்டாபட்டிக்கு ஒரு நியாயம், பரந்தூருக்கு வேறு நியாயமா.. தமிழக அரசுக்கு விஜய் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பரந்தூரில் இருந்து எனது கள அரசியல் தொடங்குகிறது என்று நடிகரும் தவெக தலைவருமான விஜய் தெரிவித்தார். பரந்தூர் விமான நிலையத்தை அமைப்பதில் அரசுக்கு ஏதோ லாபம் இருக்கு என்றும் விஜய் விமர்சித்திருந்தார்.

இதுகுறித்து தவெக தலைவர் விஜய் விவசாயிகளின் மனதில் கூறியிருப்பதாவது: கிட்டத்தட்ட 910 நாளுக்கு மேல் போராடி வருகிறீர்கள். உங்களுக்காக நான் துணை நிற்பேன். ராகுல் என்ற சிறுவன் பேசிய வீடியோ என் மனதை உருக்கியது. உடனே உங்கள் எல்லாரையும் பார்க்க வேண்டும் என தோன்றியது.

parandur vijay tvk

வீட்டுக்கு பெரியவங்கதான் முக்கியமானவங்க, அது போல் நாட்டுக்கு முக்கியமானவங்க உங்களை போன்ற விவசாயிகள். விவசாயிகளின் காலடி மண்ணை தொட்டு கும்பிட்டுவிட்டுதான் என் பயணத்தை தொடங்க முடிவு செய்தேன். அதற்கு இதுதான் சரியான இடம் என எனக்கு தோன்றியது. எனது கள அரசியல் பயணம் உங்கள் ஆசியுடன் இங்கிருந்து தொடங்குகிறது.

மாநில மாநாட்டில் கட்சி கொள்கையை நான் எடுத்து சொன்னேன். அதில் ஒன்று இயற்கை வள பாதுகாப்பு, விவசாய நிலங்கள் பாதுகாப்பு என்ற தீர்மானத்தையும் நான் சொன்னேன். இதை நான் இங்கு சொல்வதற்கு காரணம் ஓட்டு அரசியலுக்காக அல்ல. பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுப்பேன் என கூறியிருந்தேன்.

இவற்றை தடுக்க சட்ட ரீதியில் நடத்தவும் தயங்கமாட்டேன் என கூறியிருந்தேன். நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல. ஏர்போர்ட் வரக் கூடாதுனு சொல்லலை. ஆனால் விவசாய நிலங்களை அழித்துவிட்டு பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை ஏற்க முடியாது. எல்லா உயிர்களையும் புவி வெப்பமயமாதல் என்பது பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.

ஒரு அறிவியல் ஆய்வு கூறுவது என்னவென்றால், சதுப்பு நிலங்களை அழித்ததுதான் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு காரணமாம். 90 சதவீதம் நீர் நிலையையும் விவசாயத்தையும் அழித்துவிட்டு வளர்ச்சி திட்டத்தை கொண்டு வரும் எந்த அரசாக இருந்தாலும் அது மக்கள் விரோத அரசாகத்தான் இருக்க முடியும்.

அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்த்து தமிழக அரசு தீர்மானம் எடுத்த போது அந்த நிலைப்பாட்டை நான் வரவேற்கிறேன். ஆனால் அதே நிலைப்பாட்டை பரந்தூரிலும் தமிழக அரசு எடுத்திருக்கணும், எடுக்கணும்.

அரிட்டாபட்டி மக்கள் எப்படி நம் மக்களோ, அது போல் பரந்தூர் மக்களும் நம் மக்கள்தான். பரந்தூர் விமான நிலையத்தை கொண்டு வருவதில் அரசுக்கு ஏதோ லாபம் இருக்கு என தெரிகிறது. இதை மக்கள் தெளிவாக புரிந்து கொண்டுதான் போராட்டம் நடத்துகிறார்கள்.

ஆட்சியாளர்களுக்கு ஒரு கேள்வி! 8 வழிச்சாலை, காட்டுப்பள்ளி துறைமுகத்தை எதிர்த்தீர்கள், அதே நிலைப்பாட்டை தானே பரந்தூரில் எடுக்கணும். எதிர்க்கட்சியாக இருக்கும் போது விவசாயிகளுக்கு ஆதரவு, ஆளும் கட்சியாக இருக்கும் போது விவசாயிகளுக்கு எதிராக செயல்படுவதா. எனக்கு புரியவில்லையே! என தெரிவித்தார் விஜய்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+