நாதக கூட்டத்தில் ஒலித்த டிவிகே கோஷம்.. டீயாடா விக்கிறாய்? தற்குறிகள்! டென்ஷனான சீமான்..ஒரே பரபரப்பு
சென்னை: சீமான் இன்று புதுவை மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தபோது அப்பகுதியில் வாக்கு சேகரித்து வந்த தவெக தொண்டர்களில் சில டிவிகே.. டிவிகே என கத்தினார். இதை பார்த்த சீமான் கோபமடைந்து, டீயாடா விக்கிறாய்.. என விமர்சித்தார். மேலும் நாம் தமிழர் தம்பிகள் அறிவார்ந்த பிள்ளைகள் என்றும், கோஷமிட்ட தவெக தொண்டர்களை தற்குறிகள் எனவும் விமர்சித்து பேசினார். மேலும் நாம் தமிழர் தொண்டர்களும் அந்த நபரை தாக்கி முயன்றதால் அங்கு பரபரப்பு உண்டானது.
தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளாமல் கண்ட இடத்தில் எல்லாம் டிவிகே.. டிவிகே என கூச்சலிட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. பொது இடங்கள் என்றும் பாராமல் இவ்வாறு நடந்துகொள்வதாக பொதுமக்களும் குற்றச்சாட்டு தெரிவித்து வருகிறார்கள்.

டிவிகே.. டிவிகே என கத்திய தொண்டர்
இதேபோன்று தவெக தலைவர் விஜய் பொதுக்கூட்டங்களுக்கும், பரப்புரைகளுக்கும் செல்லும் போதும் அவரது வாகனத்தை பின் தொடர்வது, வாகனத்தின் மீது ஏறி கூச்சலிடுவது, மரத்தின் மீது ஏறுவது போன்ற சம்பவங்கள் தொடர்கின்றன. விஜய் கேட்டுக்கொண்ட பிறகும், அவரது வாகனத்தை தவெக கட்சியினர் தொடர்வது நடந்தேறி வருகிறது.
விஜய் பேச்சை அவரது தொண்டர்களே மதிப்பதில்லை என்ற விமர்சனமும் எழுந்து வருகிறது. இந்த நிலையில் தான் புதுவையில் சீமான் பிரச்சாரம் மேற்கொண்ட போது அங்கு வந்த தவெக தொண்டர் ஒருவர் டிவிகே.. டிவிகே என கத்தி கூச்சலிட்டதை கேட்டு டென்ஷன் ஆன சீமான், அவரை தற்குறி என விமர்சித்தார். மேலும் டீ விக்கிறியாடா.. இங்கே வந்து டீ விற்று காமிடா என்றும் பேசினார்.
கடும் கோபமடைந்த சீமான்
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் அனல் பறக்கும் பிரச்சாரம் நடந்து வருகிறது. அந்த வகையில் தான் நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் இன்று பரப்புரை மேற்கொண்டார். புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த தவெக தொண்டர்கள் சிலர் டிவிகே, டிவிகே என கோஷமிட்டப்படி சென்றனர். இதைப் பார்த்த சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் கடும் கோபமடைந்தனர். அப்போது சீமான் பிரச்சார வாகனத்தில் இருந்தபடியே டேய்.. டீ விக்குறியா.. இங்க வந்து டீ விக்குறியாடா.. இங்க வந்து டீ வித்துட்டு போடா என்று வாக்குவாதம் செய்தார். அப்போது அங்கு நின்ற நாம் தமிழர் கட்சியினரும், கோஷமிட்ட நபரை நோக்கி பாய்ந்து அவரை தாக்க முயன்றனர்.
தற்குறி, கோமாளிகள்
உடனே அங்கிருந்த போலீசார் தடுத்தனர். எனினும் சீமான் தனது உரையை தொடங்கி பேசினார். மேலும் நாம் தமிழர் கட்சி தொண்டர்களை போதும் போதும்.. நாம் தமிழர் தம்பிகள் அறிவார்ந்த பிள்ளைகள்.. அவன் தற்குறி.. கோமாளிகள் என்று விமர்சித்து பேச்சை தொடங்கினார். இதையடுத்து அந்த நபரை போலீசார் அங்கிருந்து கிளம்ப வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு உண்டானது.
-
2500 ரூபாய் மகளிர் உரிமை தொகை.. சட்டசபையில் விஜய் வெளியிடுவாரா.. அமைச்சர் வன்னியரசு பேட்டி -
இடைத்தேர்தலில் யாருடன் கூட்டணி? முதல்வர் விஜய்யை சந்தித்த பிறகு வைகோ கொடுத்த பதில் -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
இது மட்டும் நடந்தால்..அடுத்ததும் விஜய் தான் சிஎம்! மகளிருக்கு மாதம் ரூ.2,500.. கோட்டையில் பரபர ப்ளான் -
சிரிக்க கூட முடியாத அளவிற்கு.. அப்செட்டான விஜய்.. மனசை குடையும் 2 விஷயங்கள்! என்ன நடந்தது? -
தவெகவில் சேர்ந்த 2 நாளில்! விஜய் விவாகரத்து வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்! யார் இந்த ப்ரீத்தி ஷெட்டி? -
தவெக அரசுக்கு எதிராக நூதன போராட்டம்... முதல்வருக்கு பார்சலில் அனுப்பிய ஹியரிங் எய்டு! -
இவ்வளவு பெரிய விஷயமா! அதிமுக கூடாரத்தை விஜய் காலி செய்வதற்குப் பின்னால் இருக்கும் மாஸ்டர் பிளான்! -
மாஸ்டர் மகேந்திரன் திடீரென்று மன்னிப்பு கேட்ட காரணம் இதுதானா? பின்னணியில் விழுந்த "டோஸ்”! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்?












Click it and Unblock the Notifications