விஜய் தேர்தலில் தோற்றுப்போனால்.. குழந்தைகளை சமாளிப்பது எப்படி? பெற்றோருக்கான முக்கிய டிப்ஸ்!
சென்னை: தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக வாக்களிக்க கோரி ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் அவர்களின் பெற்றோரை நச்சரித்த நிலையில், தேர்தல் முடிவுகள் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. ஒருவேளை தேர்தலில் விஜய் தோல்வி அடைந்தால், அவர்களை சமாளிக்க எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
"குட்டீஸ்களே... உங்களுக்கு ஏதாவது வேணும்னா அடம்பிடிச்சு அதை சாதிக்கிறீங்கல்ல... அதே மாதிரி இந்த விஜய் மாமா' ஜெயிக்கறதுக்காக உங்க வீட்டுல இருக்குற பெரியவங்களை விசிலுக்கு ஓட்டுப்போட வைங்க" இப்படிதான் தவெக தலைவர் விஜய் தனது நிறைவு நாள் பிரச்சாரத்தில் குழந்தைகளிடம் வாக்கு சேகரித்தார். விஜய் பேசிய வீடியோக்கள் சோசியல் மீடியாவில் அதிகளவில் டிரெண்ட் செய்யப்பட்டது.

இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் குழந்தைகள் பலரும் தங்களின் பெற்றோரை விஜய்க்கு வாக்களிக்க வேண்டும் என்று நச்சரித்தனர் என்றே சொல்லலாம். ஒவ்வொரு வீடுகளிலும் விஜய்க்கு ஆதரவாக குழந்தைகள் பேசிய வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேர்தல் ஆணைய விதிகளின்படி குழந்தைகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியல் செயல்பாடுகளில் பயன்படுத்த கூடாது,
ஆனால் விஜய் நேரடியாகவே குழந்தைகளிடம் வாக்கு சேகரித்து தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளார். இதனால் விஜய்க்கு எதிராக தேர்தல் முடிவுகள் வந்தால், அந்த பிஞ்சு குழந்தைகளால் தாங்கி கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. விஜய்யின் தோல்வி குழந்தைகளுக்கு உளவியல் சிக்கலை கூட ஏற்படுத்தும் என்று பலரும் அஞ்சத் தொடங்கியுள்ளனர்.
இதனால் விஜய் தேர்தல் தோற்றுப் போனால் குழந்தைகளை சமாளிப்பது எப்படி என்பதை பார்க்கலாம். எது சரி, எது தவறு என்பதையே முழுமையாக புரியாத குழந்தைகளுக்கு, தேர்தல் ஆணையம், பதவியேற்பு உள்ளிட்ட எந்த விஷயங்களையும் புரிந்து கொள்ள கூடிய அளவிற்கு விவரம் இருக்காது. இதனை பெற்றோர் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
அதாவது விஜய் வெற்றிபெற்றுவிட்டாரா என்று கேட்கும் குழந்தைகளிடம், நேரடியாக விஜய் தான் வென்றார்.. தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே விஜய் முதல்வராகிவிட்டார் என்று சொல்லிவிடுவது நல்லது.. செய்திகளை ஏதாவது பார்த்து குழந்தைகள் கேட்டால் கூட, அவை பொய்யான செய்தி என்றே சொல்வது நலம்.
குறிப்பாக இன்ஸ்டாகிராமில் விஜய் தோல்வி அடைந்த பின் வரும் ரீல்ஸ்களை குழந்தைகளுக்கு காட்டவே கூடாது. தவெக வெளியிடும் ரீல்ஸ்களை பிளாக் செய்து வைப்பது குழந்தைகளின் மனநிலைக்கு சரியானது. தாராளமான குழந்தைகளிடம் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் தான் என்று பொய் கூட சொல்லலாம்.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், விஜய் தோல்வி அடைந்ததால், குழந்தைகள் ஃபீல் செய்கிறார்கள் என்று சொல்லி சில இன்ஃபுளூயன்சர்கள் ரீல்ஸ் வெளியிடக் கூடும். அந்த மாதிரியான ரீல்ஸ்களை குழந்தைகளின் கண்களில் காட்டிவிடக் கூடாது. இந்த விஷயத்தில் பெட்டியை திறப்பதற்கு முன்பே விஜய் வென்றுவிட்டார் என்று சத்தியம் செய்து குழந்தைகளின் மனநலனை பாதுகாப்பதே பெற்றோரின் முதல் கடமை.
-
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி -
ஜூன் 15-ல் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை வருமா? விஜய் போட்ட பிளான்.. பலருக்கும் போன மெசேஜ் உண்மையா? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
ஜான் ஆரோக்கியசாமியின் டெல்லி லாபி.. திமுகவுக்கு தூதுவிட்ட சுனில்.. சபரீசனுக்கு வந்துச்சே கோபம் -
விஜய் அரசை தாண்டி.. பரந்தூர் விமான நிலையத்துக்கு புதிய சிக்கல்.. ஆந்திரா மூலம் வந்த புது பிரச்சனை! -
தமிழக அரசியலில் அடுத்த அதிரடி! 5 தொகுதிகளுக்கு ஆகஸ்டில் இடைத்தேர்தல்? ஜூலை கடைசியில் தேதி அறிவிப்பு -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
திமுக எதிர்த்த VB-GRAM திட்டத்தை.. அமல்படுத்தும் விஜய் அரசு! தமிழகத்துக்கு ₹5,000 கோடி கூடுதல் சுமை -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.. உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல் -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
அதே டெய்லர்.. அதே வாடகை.. மரு மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த ஏமாற்று வேலை! விஜய் மீது அண்ணாமலை அட்டாக்












Click it and Unblock the Notifications