விஜய்யின் அடுத்த மக்கள் சந்திப்பு எங்கே? சின்னம் என்னது? சஸ்பென்சை உடைக்க போறாராம்.. குஷியில் தவெக

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் அடுத்த மக்கள் சந்திப்பு எங்கே நடக்கப்போகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தை விஜய் பிரமாண்டமாக நடத்த உள்ளார் என்றும், இந்த கூட்டத்தின் போது தவெகவின் சின்னம் என்ன என்பதையும் விஜய் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இது மட்டுமல்லாமல் விஜய்யின் தவெக நிர்வாகிகள் கூட்டணி குறித்து சில கட்சிகளிடம் பேசியுள்ளதாகவும், அந்த கட்சிகள் தவெகவில் இணைய விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில் இந்த பொதுக்கூட்டத்தில் அவர்களையும் மேடை ஏற்ற விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Vijay to Announce TVK Symbol at His Next Major Public Meeting in Tamil Nadu

தவெக பொதுக்கூட்டம்

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ளார் விஜய். தற்போது கட்சி பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். 2026 சட்டசபை தேர்தல் தான் இலக்கு என்று கூறிய அவர் திமுக தான் அரசியல் எதிரி என்றும், பாஜக கொள்கை எதிரி என்றும் கூறியுள்ளார்.

தன்னுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரப்படும் என்றும் அறிவித்தார். ஆனால் செங்கோட்டையனை தவிர பெரிய கட்சிகள் எதுவும் விஜய்யுடன் கூட்டணி வைக்கவில்லை. அடுத்த மக்கள் சந்திப்பு கூட்டமும் நடைபெறாமல் இருந்து வருகிறது. அண்மையில் ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதற்கு அடுத்ததாக விஜய் பொதுக்கூட்டங்கள் நடக்கவில்லை. ஜனநாயகன் படம் வரும் என கூறப்பட்டதால் அதற்கான வேலைகளில் விஜய் இருந்து வந்தார்.

விஜய்யின் கட்சி சின்னம்

ஜனநாயகன் படம் அரசியல் கலந்த கதை என்பதால் அதற்கு பிறகு அடுத்த கூட்டங்களை நடத்தலாம் என்றும் விஜய் நினைத்தார். ஆனால் ஜனநாயகன் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்சார் சான்றிதழ் வழங்கக்கோரி தொடுக்கப்பட்டுள்ள வழக்கு நீதிமன்றத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் விஜய்யின் அடுத்த கூட்டம் எங்கு நடத்தப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதேபோன்று விஜய் தனது கட்சி சின்னம் என்பதையும் அந்த கூட்டத்தில் அறிவிப்பார் என சொல்லப்படுகிறது. தேமுதிக, டிடிவி தினகரன், பாமக ராமதாஸ், ஓபிஎஸ், புதிய தமிழகம் தவெக பக்கம் வர இருப்பதாகவும் அப்படி அவர்கள் வரும் பட்சத்தில் கூட்டணி கட்சிகளையும் மேடை ஏற்றி அறிமுகம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காக இந்த கூட்டமானது மிகப்பெரிய அளவில் நடத்தப்படும் என்றும், தர்மபுரி அல்லது சேலத்தில் நடக்கும் என சொல்லப்படுகிறது.

சேலம் அல்லது தர்மபுரியில்

கடந்த டிசம்பர் மாதம் தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்திற்கான சின்னத்தை ஒதுக்கீடு செய்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த சின்னம் அறிவிப்பை பிரமாண்டமாக நடத்துவதற்காக இந்த பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரசை தன் பக்கம் சேர்க்க ஒரு பக்கம் முயற்சி மேற்கொள்ளும் நிலையில் தேமுதிக, அமமுக, ஓபிஎஸ், பாமக ராமதாஸ், புதிய தமிழகம் கட்சிகளையும் தன் பக்கம் கூட்டணி வைக்க பேச்சுவாரத்தை நடந்ததாகவும் கூறப்படுகிறது.

தேமுதிக, அமமுக, ஓபிஎஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி விவகாரத்தில் தை பிறந்தால் வழி பிறக்கும் என சொல்லி வருவதாலும், விஜய்யின் அடுத்த மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோன்று விஜய் தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்காக ஒரு குழு ஒன்றையும் அமைத்துள்ளார். விஜய் கூறுகையில், "தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தையும், மாநிலத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியையும் நோக்கமாக கொண்டு, நடைபெற உள்ள சட்டசபை தேர்தலையொட்டி தவெக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட இருக்கிறது.

தேர்தல் வாக்குறுதிகள்

இதற்காக சிறப்பு குழு அமைக்கப்படுகிறது. இந்த குழு, தமிழகம் முழுவதும் பொது மக்கள், சிறு, குறு, தொழில் அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், பொருளாதார மற்றும் தொழில் வல்லுனர்கள், வர்த்தக சபைகள், பல்வேறு ஊழியர் சங்கங்கள், விவசாய சங்கங்கள், கல்வியாளர்கள், டாக்டர்கள், நர்சுகள், மகளிர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் உள்பட பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும், தேவைகளையும் அறிந்து, தரவுகளை பெற உள்ளது.

அவர்களிடம் இருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டு மக்களையும், ஒட்டு மொத்த மாநிலத்தையும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் வகையில் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது. இந்த குழுவினருக்கு நிர்வாகிகள், தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அந்தந்த பகுதிகளில் சம்பந்தப்பட்ட அமைப்புகளை சந்திக்கும்போது தேவையான உதவிகளை செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+