Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வரி கட்டாமல் ஏமாற்றிய விஜய்! வருமான வரித்துறை விதித்த ரூ.1.50 கோடி அபராதம் செல்லும்: உயர்நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'புலி' படத்திற்கு விஜய் பெற்ற ரூ.15 கோடி சம்பளத்தை, வருமானமாக காட்டவில்லை என வருமான வரித்துறை அபராத நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனை எதிர்த்து விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. தீர்ப்பில், விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதம் செல்லும் என நீதிமன்றம் கூறியிருக்கிறது.

வருமானத்தை கணக்கில் காட்டாததால், ரூ.1.50 கோடி அபராதம் விதித்து வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனை எதிர்த்து கடந்த 2022ம் ஆண்டு விஜய் நீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்த வழக்கில் இன்று காலை நீதிபதி செந்தில்குமார் தீர்ப்பளித்துள்ளார்.

Vijay vs IT Department

பின்னணி என்ன?

கடந்த 2015 ஆம் ஆண்டு விஜய்யின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர். இந்த ரெய்டில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதனையடுத்து, 2015-16ஆம் ஆண்டில் விஜய் தனது வருமானம் ரூ.35.42 கோடி என வருமான வரித்துறை இடம் காட்டி இருந்தார். ரெய்டில் கைப்பற்ற ஆவணங்களுடன், அவர் தாக்கல் செய்த கணக்குகளை வருமான வரித்துறையினர் ஒப்பிட்டு பார்த்தனர்.

கணக்கில் வராத வருமானம்

அப்போதுதான் விஜய் ரூ.15 கோடியை கணக்கில் காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, 'புலி' திரைப்படத்தில் விஜய் நடித்திருந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட ரூ.15 கோடி பணத்தை அவர் தனது வருமான கணக்கில் காட்டாமல் மறைத்திருந்தார். இதனையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் போட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

நீதிமன்றம் போன விஜய்

எல்லாம் ஓகே தான்.. ஆனால், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி முன்னதாக அபராதம் விதித்திருக்க வேண்டும். ஆனால், 3 ஆண்டுகள் தாமதப்படுத்திவிட்டு 2022 ஆம் ஆண்டில் தான் வருமான வரித்துறையினர் அபராதம் விகித்திருக்கின்றனர். இது சட்டப்படி தவறு என்று, விஜய் வருமான வரித்துறையினரின் இந்த அபராத உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அபராதம் போட்டது தப்பு

எதிர்த் தரப்பில் ஆஜரான வருமான வரித்துறை, எங்கள் தரப்பில் உரிய காலத்தில் தான் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. விஜய் தக்கல் செய்திருந்த மனுவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.

இன்று வெளியான தீர்ப்பு

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், விஜய்க்கு அபராதம் விதித்த வருமான வரித்துறையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கை நீதிபதிகள் செந்தில்குமார் மற்றும் ராமமூர்த்தி ஆகியோர் வழங்கிய அமர்வு முன்பாக இறுதி விசாரணை நடைபெற்று, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை 10.30 மணி அளவில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

தீர்ப்பில், விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதம் செல்லும் என்றும், அபராத தொகையை செலுத்த வேண்டும் எனவும் கூறி, விஜய்யின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+