விஜய்க்கு செக் வைக்கும் திமுக இளைஞரணி.. ஸ்கெட்ச் போட்டு காய் நகர்த்தும் உதயநிதி ஸ்டாலின்!
சென்னை: தவெக தலைவர் விஜய்க்கு செக் வைக்கும் வகையில் திமுக தரப்பில் நாளை திருவண்ணாமலையில் வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. 92 சட்டசபைத் தொகுதிகளில் இருந்து கிளை, வார்டு அளவில் நியமனம் செய்யப்பட்டுள்ள 1.3 லட்சம் இளைஞர்கள் பங்கேற்க இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், திமுக தேர்தல் பணிகளை ஒவ்வொரு நாளும் அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்கிறது. இம்முறை அதிமுக, சீமான் ஆகியோர் மட்டுமல்லாமல் தவெகவையும் எதிர்கொள்ள திமுக தயாராகி வருகிறது. அந்த வகையில் தவெக தலைவர் விஜய்க்கு இளைஞர்கள் ஆதரவு அதிகம் இருப்பதாக பிம்பம் கட்டமைக்கப்பட்டு வருகிறது.

அதனை உடைக்கும் வகையில் திமுக அடுத்தக் கட்ட திட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. திருவண்ணாமலையில் நாளை திமுக தரப்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வடக்கு மண்டல இளைஞரணி மாநாட்டை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிரம், சென்னை மாவட்டங்களின் இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
இதற்காக 1.25 லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இதற்கு முக்கியக் காரணமாக இளைஞரணியில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்களே காரணமாக அமைந்துள்ளது. அதாவது அனைத்து பூத் கமிட்டிகள் மற்றும் கட்சி அமைப்பு ரீதியாக உள்ள அனைத்து மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை போன்ற நிர்வாகத்தில் இளைஞரணிக்கு புதிதாக 5 லட்சம் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
அதன்படி இந்த மாநாட்டில் மட்டும் 1.3 லட்சம் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். இதன் மூலமாக இளைஞர்களின் வாக்குகளை திமுக பக்கம் திருப்பவும், அவர்களை இளம் தலைமுறையினரிடம் திமுகவை கொண்டு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் விஜய்க்கு மாவட்ட அளவில் இளைஞர்கள் கூட்டினாலும், திமுக தொகுதி வாரியாக இளைஞரணியை கட்டமைக்க உள்ளது ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications