வாட் ப்ரோ! இட்ஸ் வெரி ராங் ப்ரோ! ஆங்கில கவிஞரின் பெயரை மாற்றி கூறிய தவெக விஜய்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் குழு கூட்டத்தில் நடிகரும் கட்சியின் தலைவருமான விஜய், ஒரு ஆங்கில கவிதையை சொன்ன போது அந்த கவிதையை எழுதியவர் பெயரை தவறாக சொல்லிவிட்டார். இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. திருவான்மியூரில் ராமசந்திரா கன்வென்ஷன் ஹாலில் நடந்தது. இந்த முதல் பொதுக் குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த விழாவில் சுமார் 2000 நிர்வாகிகள் பங்கேற்றனர். அந்த தீர்மானத்தில் மத்திய மாநில அரசுகளை எதிர்த்தும் இருந்தன. இதில் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பேசினர்.
அவர்களை தொடர்ந்து விஜய் பேசுகையில், தமிழுக்கு அமுதென்று பெயர். தமிழ்நாடு இருக்கும் சூழலில் நாம் புதிய வரலாறு படைக்க தயாராக வேண்டிய அவசியத்தை புரிந்து வைத்திருப்பீர்கள் என நினைக்கிறேன். எல்லா குடும்பமும் நன்றாக வாழுறதுதான் தேவை. ஆனால் ஒரே ஒரு குடும்பம் மட்டும் சுரண்டி சுரண்டி நல்லா வாழுறது அரசியலா?
கட்சிக்கு திராவிடம், ஆட்சிக்கு திராவிட மாடல். மடைமாற்றி மக்கள் விரோத ஆட்சி நமக்கு எதிராக செய்யும் ஒன்றா, இரண்டா? புத்தக வெளியீட்டு விழா, பரந்தூர், பொதுக் குழுவுக்கு தடைகள் என மாற்றி மாற்றி குடைச்சல் கொடுத்தீங்க.
ஏற்கெனவே அர்ஜுன், நிர்மல்குமார், ரமேஷ் உள்ளிட்டோர் நல்லா அடித்துவிட்டார்கள். நாமும் அடிக்கணுமானு யோசனையா இருக்கு. (திமுக, பாஜகவை விமர்சிப்பதை குறித்து கூறுகிறார்). மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே, மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, பேர மட்டும் வீராப்பா சொன்ன பத்தாது, செயலிலும் ஆட்சியிலும் காட்டணும் என்றார்.
மேலும் இந்த விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் பெயர்களை வெளிப்படையாகவே குறிப்பிட்டு விஜய் விமர்சனம் செய்திருந்தார். விஜய்யின் பேச்சுக்கு நிர்வாகிகள் கை தட்டியபடியே இருந்தனர். இந்த நிலையில் விஜய் தனது உரையை முடிக்கும் போது ஆங்கில வரிகளை மேற்கோள் காட்டி பேசியிருந்தார்.
அப்போது திருக்குறளையும் சொல்லி முடித்தார். அது பேசுபொருளாகியுள்ளது. "Men may come and Men may go , but I go on forever" என்ற வில்லியம் பிளேக் எழுதிய கவிதையுடன் தனது உரையை முடிப்பதாக விஜய் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த கவிதையை எழுதியது பிளேக் இல்லை, ஆல்பிரட் லார்டு டென்னிசன்.
மனிதர்கள் வருவார்கள், போவார்கள், நான் எப்போதும் இருப்பேன் என்ற பொருள்படும்படியான கவிதையை தனது அரசியல் பயணத்துடன் ஒப்பிட்டு பேசியிருந்தார். மேலும் அவர்
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாய் செயின்
என்ற குறளையும் கூறியிருந்தார். ஒரு செயலை செய்யத் தேவையான காலம், இடம் ஆகிய இரண்டையும் கருதிச் செயல்பட்டால் எத்தகைய பெரிய காரியத்தை செய்தாலும் அது கை கூடும் என்பதே இதன் அர்த்தமாகும்.
-
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications