Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இளைய கேப்டனுக்கு எதிர்ப்பு..அடுத்து விழுந்த விக்கெட்! அடுத்தடுத்து பிரேமலதாவுக்கு பறக்கும் கடிதங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் இளைஞரணி தலைவராக விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரன் தேர்வு செய்யப்பட்டது மூத்த நிர்வாகிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி தன்னைக் கட்சி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கடிதம் கொடுத்திருக்கும் நிலையில் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான அனகை முருகேசன் கட்சியிலிருந்து விலகிக் கொள்வதாக தலைமைக்கு கடிதம் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்த முக்கிய நிர்வாகிகள் விலகல் கடிதம் கொடுப்பது தேமுக தலைமையை நெருக்கடியில் ஆழ்த்தி உள்ளது.

தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய நாயகர்களில் ஒருவராக இருந்தவர் விஜயகாந்த். மதுரையைச் சேர்ந்த இளைஞரான விஜயகாந்த் சினிமாவில் நுழைந்து தொடர்ந்து நாயகனாக உயர்ந்தார். அந்த காலத்தில் ரஜினி கமலுக்கு போட்டியாக பல வெற்றி படங்களை கொடுத்தவர். ஒரு சில நேரங்களில் ரஜினியின் படங்கள் கூட விஜயகாந்தின் படங்களோடு போட்டி போட்டு தோல்வியை சந்தித்தது வரலாறு.

தொடர்ந்து தனது ரசிகர் மன்றம் மூலம் பல்வேறு நற்பணிகள் செய்து வந்த அவர் மதுரையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் எனும் கட்சியை ஆரம்பித்தார். ஆண்டவனோடும் மக்களோடும் மட்டும் தான் கூட்டணி என்ற முழக்கத்தோடு தேர்தல்களை சந்தித்து ஆளுங்கட்சியையும் எதிர்க்கட்சியையும் பயம் கொள்ள வைத்தார்.

Vijayakanth Vijay Prabhakaran DMDK

ஒரு கட்டத்தில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பினார். ஜெயலலிதாவுடன் சட்டமன்றத்தில் ஏற்பட்ட மோதல் போக்கை அடுத்து விஜயகாந்தின் நடவடிக்கைகள் சற்று விமர்சனத்தை ஏற்படுத்தியது. பொது இடங்களில் நிர்வாகிகளை அடிப்பது, அநாகரீகமாக நடந்து கொள்கிறார் என ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிய விஜயகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிர் இழந்தார். இதை அடுத்து தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளராக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் பொறுப்பேற்றார்.

தொடர்ந்து அதிமுகவுடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலை சந்தித்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தர்மபுரியில் தேமுதிக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் மீண்டும் நியமிக்கப்பட்டார். பொருளாளராக பிரேமலதா விஜயகாந்தின் தம்பி எல்கே சதீஷும், இளைஞர் அணி தலைவராக விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனும் தேர்வு செய்யப்பட்டனர். கட்சியில் மூத்தவர்கள் பலர் இருக்கும் போது சீனியர்களிடமிருந்து பதவியை பறித்து இளையவர்களுக்கு கொடுப்பதா என்ற கோபம் சில நிர்வாகிகளிடையே ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்து தன்னை நீக்க வேண்டும் என முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி தலைமைக்கு கடிதம் கொடுத்தார். அவர் கட்சியில் இருந்து விலகியதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தான் கட்சியிலிருந்து விலகவில்லை என நல்லதம்பி விளக்கம் அளித்து இருந்தார். இதற்கிடையே அடுத்த அதிர்ச்சி தகவலாக கட்சியின் முன்னாள் எம்எல்ஏவும் முக்கிய நிர்வாகிகளில் ஒருவருமான அனகை முருகேசன் கட்சிக்கு விலகல் கடிதம் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.

விஜயகாந்த் ரசிகர் மன்றம் ஆரம்பித்தபோது செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தவர் அனகை முருகேசன். தொடர்ந்து விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது பொருளாளர், தலைமை நிலைய செயலாளர் என பதவிகளுடன் உடன் பயணித்தவர். அதற்காக அவரை எம்எல்ஏ ஆக்கி அழகு பார்த்தார் விஜயகாந்த். ஒரு காலத்தில் ஒரு சில எம்எல்ஏக்கள் திமுகவில் இணைந்த போது விஜயகாந்த் உடன் நின்றவர். அவர் மறைவுக்குப் பிறகும் பிரேமலதா விஜயகாந்த் உடன் அரசியல் செய்து வந்தார். இந்த நிலையில் நடந்து முடிந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் அனகை முருகேசனை ரசிக்க வைக்கவில்லை.

மேலும் கட்சியின் முக்கிய பொறுப்புகளான பொதுச் செயலாளர், பொருளாளர், இளைஞர் அணி தலைவர் பதவிகள் ஒரே குடும்பத்திற்கு கொடுக்கப்பட்டதாக விமர்சனம் எழுந்து உள்ள நிலையில் அனகை முருகேசன் தற்போது விலகல் கடிதம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சில நிர்வாகிகளும் அடுத்தடுத்து தலைமைக்கு ராஜினாமா கடிதங்களை அனுப்பி வருவதாகவும் சொல்லப்படுகிறது. விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு பிரேமலதா விஜயகாந்த்-ஐ தொண்டர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

ஆனால் பொருளாளர், இளைஞர் அணி தலைவர் என கட்சியின் முக்கிய பதவிகள் அனைத்தையும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனுபவிப்பது பிற கட்சிகள் மற்றும் பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தும். மேலும் கட்சிக்காக உழைத்த பல நிர்வாகிகளுக்கு மாநில பதவி வழங்கப்படவில்லை. பார்த்தசாரதி உள்ளிட்ட சிலர் மட்டுமே பதவியை பெற்று இருக்கிறார்கள். விஜயகாந்த் இருந்த போதும் அவரது மறைவுக்கு பின்னும் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பதாலேயே நிர்வாகிகள் அதிர்ச்சியில் இருப்பதாகவும், விலகல் பட்டியல் இன்னும் நீளும் என்கின்றனர் விவரம் அறிந்த தேமுதிக வட்டாரத்தினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+