சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Vijayakanth: வருகிறார் விஜயகாந்த்.. எதிர்பார்ப்பில் தேமுதிக.. தயாராகும் கூட்டணி முஸ்தீபுகள்

அடுத்த வாரம் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்புகிறார் விஜயகாந்த்

Google Oneindia Tamil News

Recommended Video

    தேமுதிக-வுக்காக காத்துக்கிடக்கும் கட்சிகள்- வீடியோ

    சென்னை: சிங்கம் போல வர்ற போறாருன்னு விஜயபிரபாகரன் சொன்னது நடக்க போகுது.. அடுத்த வாரமே அமெரிக்காவில் இருந்து விஜயகாந்த் வர போகிறாராம்! இதனால் அதிமுக, அமமுக உட்பட பல கட்சிகள் அவரது வருகைக்காக ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றன.

    இன்னும் கொஞ்ச நாளில் தேர்தல் வர போகிறது. இதற்காக கூட்டணி சமாச்சாரங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் நடந்து வருகிறது.

    இந்த விஷயத்தில் திமுக ஓபனாக இருக்கிறது. ஆனால் அதிமுகவை கேட்டால், ". அது பரம ரகசியம். முடிச்சு அவிழ்க்கப்பட்டவுடன் ஊடகங்களுக்குத்தான் முதலில் தெரிவிக்கப்படும்" என்று துணை முதல்வர் சொல்லி விட்டார். இருந்தாலும், சிகிச்சை முடிந்து விஜயகாந்த் வருவதால், அரசியலில் பரபரப்பு சூழல் எட்டி உள்ளது.

    அடுத்தடுத்த சாய்ஸ்

    அடுத்தடுத்த சாய்ஸ்

    எப்படியும் கேப்டன் 2 பிளான்களில் களம் இறங்க வாய்ப்பு உள்ளது. ஒன்று அளவுக்கு அதிகமாகவே திட்டி தீர்த்துவிட்ட திமுகவிலிருந்து எப்படியும் அழைப்பு வரப்போவதில்லை. அதனால் அடுத்த சாய்ஸ் அதிமுகதான். திமுக-காங்கிரசுக்கு எதிரான ஒரு பலமான கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் அதிமுக இறங்கி உள்ளதால் கண்டிப்பாக நம்மை விட்டுவிடாது என்பதால் சீட்டுகளை தாராளமாக கேட்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

    சீட் ஒதுக்கீடு

    சீட் ஒதுக்கீடு

    ஒருவேளை விரும்பிய சீட்டை அதிமுக தரவில்லையானால், இருக்கவே இருக்கிறார் டிடிவி தினகரன். அதனால் தினகரன் பக்கம் போகவும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் தினகரன் பக்கம் விஜயகாந்த்தை அவ்வளவு சீக்கிரத்தில் அதிமுக விட்டுவிடாது என்றே தெரிகிறது.

    கூட்டணி பலம்

    கூட்டணி பலம்

    ஏனெனில் தன் பக்கம் விஜயகாந்த் வந்துவிட்டால், அதைவைத்து பாமகவை தன் பக்கம் இழுத்து கொள்ளலாம் என்பதே அதிமுகவின் பிளானாக உள்ளது. விஜயகாந்த், பாமக கூட்டணி மட்டும் உறுதியாகி விட்டால் அதிமுக வடமாவட்டங்களை பற்றி கவலையே படதேவையில்லை என நினைக்கிறது.

    அதிமுக, அமமுக?

    அதிமுக, அமமுக?

    ஆனால் எப்படி பார்த்தாலும் விஜயகாந்த் அதிமுக, அமமுக என இரு தரப்பையுமே ஒரு சுற்று சுற்றவிட்டுதான் விரும்பிய சீட்டை வாங்குவார் என்றும் அதே நேரத்தில் திமுகவுக்கு டஃப் கொடுப்பார் என்றும் சொல்லப்படுகிறது. அதிமுக கூட்டணி பலம் பெறப்போகிறதா? அல்லது தேமுதிகவை வைத்து பாமகவை இழுக்கும் முயற்சி நடக்க போகிறதா? அல்லது அமமுக தாராளம் காட்டி தேமுதிகவை வளைத்து போட போகிறதா? என்பதெல்லாம் கேப்டன் நடத்தும் பேச்சுவார்த்தையில்தான் அடங்கி உள்ளது.

    English summary
    DMDK President Vijayakanth returns from US in next week. Political Parties are preparing to keep up with Vijayakanth.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X