Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நேரா போயி தரையில் உட்கார்ந்த விஜயகாந்த்.. "விஜி, விஜி"ன்னு பதறிய ரஜினி.. ஆஹா, மீசை ராஜேந்திரன் செம்ம

விஜயகாந்த் பெயரை நடிகர் சங்க கட்டிடத்துக்கு சூட்ட வேண்டும் என்று மீசை ராஜேந்திரன் கூறியுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன், நடிகர் சங்க கட்டிடம் குறித்து முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.. இந்த கோரிக்கையின் முக்கியத்துவத்தைதான் சோஷியல்மீடியாவில் பலரும் பகிர்ந்து, ஆதரவும் தந்து வருகிறார்கள். நடிகர் சங்க கட்டிடம் குறித்த செய்தி என்ன? அப்படி என்ன நடந்தது?

நடிகர் சங்க கட்டிடம் குறித்த செய்தி என்ன? அப்படி என்ன நடந்தது?

பல வருடங்களாகவே வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் விழிபிதுங்கயிருந்தது நடிகர் சங்கம்.. அனைத்து பிரபலங்களுமே நடிகர் சங்கத்தை கைவிடப்பட்ட துழலில் என்ன செய்வது என்று திகைத்து நின்றிருக்கிறார் அப்போதைய நடிகர் சங்க தலைவர் ராதாரவி.

அதனால், நடிகர் சங்கத்துக்குள் விஜயகாந்த்தை முதன்முறையாக அழைத்து வந்துள்ளார்.. கந்த 2000-ம் ஆண்டு நடிகர் சங்க தலைவராக விஜயகாந்த்தை அமரவைத்து பொறுப்பையும் தந்துள்ளார் ராதாரவி...

 பதறிய ரஜினி

பதறிய ரஜினி

இதற்கு பிறகுதான், விஜயகாந்த் கையில் சங்கம் சென்றதுமே, விறுவிறு பணிகள் ஆரம்பமாகி உள்ளன.. கடனை அடைப்பதற்கான முயற்சிகளையும் கையில் எடுத்துள்ளார் விஜயகாந்த்.. அதன்படி, இதற்காக மலேசியா சிங்கப்பூர் என்று நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.. இதற்காகவே ஒவ்வொரு நடிகர்களையும் நேரில் சென்று அழைத்திருக்கிறார்.. அப்போதுதான், ரஜினி வீட்டுக்குள் நேராக போய், அங்கு தரையில் உட்கார்ந்து கொண்டாராம் விஜயகாந்த்.. தர்ணாவையும் செய்தாராம். இதுகுறித்து, ஒரு பத்திரிக்கையாளர், சமீபத்தில் செய்திக்குறிப்பை ஒன்றையும் வெளியிட்டிருந்தாராம்..

 விஜி விஜி

விஜி விஜி

அதில், "நடிகர் சங்கம் நிதியுதவிக்காக மலேசியா சிங்கப்பூரில், கலை நிகழ்ச்சி நடத்த வேண்டியிருந்தது.. அதற்காக அழைப்பிதழ் கொண்டு முதலில் கமல் வீட்டுக்கு சென்றுவிட்டார்.. அடுத்து ரஜினி வீட்டிற்கு கொண்டு சென்று, அவர் வீட்டில் தரையில் அமர்ந்து "அண்ணே நீங்க கண்டிப்பாக வரவேண்டும் மறுக்க கூடாது" என்று தரையில் அமர்ந்து இவ்வாறு விஜயகாந்த் செய்ததும் பதறிப்போன, ரஜினி, "விஜி நான் கண்டிப்பா வரேன் நீ முதல்ல எழுந்திரு" என கூறி ஆசுவாசப்படுத்தியுள்ளார்.

 தரையில் தர்ணா

தரையில் தர்ணா

நீங்கள் கலைநிகழ்ச்சிக்கு வருவதாக சொன்னால்தான், சோபாவில் உட்காருவேன் என்று விஜயகாந்த் தர்ணா செய்து கோரிக்கை வைக்க, அதற்கு பிறகு ரஜினியின் ஒப்புதலை பெற்றுள்ளார்.. இப்படித்தான் ஒவ்வொரு முயற்சிகளையும் எடுத்து, கலைநிகழ்ச்சிகளை நடத்தி, நடிகர் சங்க கடனையும் அடைத்து, சங்கத்தில் வைப்பு தொகையையும் சேர்த்துவைத்துள்ளார்.. அதாவது நடிகர் சங்க பத்திரத்தை அடமானம் வைத்து வாங்கப்பட்ட கடன்களை கலை விழா நடத்தி, அதன் மூலம் வந்த பணத்தை கொண்டு கடனை அடைத்த நிலையில், நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்து வந்துள்ளார்.

 விஜயகாந்த்

விஜயகாந்த்

பிறகு திடீரென கட்சியை ஆரம்பித்துவிடவும், அரசியலில் இருந்து கொண்டு நடிகர் சங்க தலைவராக செயல்படுவது சரிவராது என்று தானாகவே முன்வந்து, அந்த பொறுப்பில் இருந்து விலகிவிட்டார் விஜயகாந்த். இதற்கு பிறகு நடந்த தேர்தலில் நடிகர் விஷால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிதாக நடிகர் சங்க கட்டிடத்தை கட்டும் பணியும் நடந்து கொண்டிருக்கிறது.. இந்நிலையில், செய்தியாளர்களிடம் நேற்று முன்தினம் பேசும்போது, நடிகர் சங்க கட்டிடம் சரியாக இன்னும் ஒரு வருடத்துக்குள் கட்டி முடிக்கப்படும். அதில் தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த்துக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்று மகிழ்ச்சியுடன் அறிவித்திருந்தார்.

 ஈரமனசு விஜயகாந்த்

ஈரமனசு விஜயகாந்த்

எனினும் வெறும் பாராட்டு விழாவுடன் முடித்துவிடக்கூடாது, இந்த நடிகர் சங்க கட்டிடத்திற்கு கேப்டன் விஜயகாந்தின் பெயரை வைக்க வேண்டும் என்று, பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் கோரிக்கை வைத்துள்ளார். விஜயகாந்த்தின் பல படங்களில் இணைந்து பணியாற்றியவர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் மீது தனிப்பட்ட மரியாதையும், அபரிமிதமான பற்றும் வைத்திருப்பவர் மீசை ராஜேந்திரன்.. தன்னுடைய எல்லா பேட்டிகளிலும் விஜயகாந்தின் ஈகை குணம் குறித்தும், ஈர மனசு குறித்தும் நெகிழ்ந்து பேசுவார்.. விஜயகாந்த் எத்தனையோ பேருக்கு உதவியது குறித்த பல நினைவுகளை உருக்கத்துடன் பகிர்ந்தும் கொள்வார்.

 கேப்டன் கேப்டன்

கேப்டன் கேப்டன்

இந்நிலையில், விஷால் பேசியது குறித்து மீசை ராஜேந்திரன் சொல்லும்போது, நடிகர் சங்க புதிய கட்டிடத்தில் விஜயகாந்த் அவர்களுக்கு பாராட்டு விழா எடுப்போம் என்று விஷால் கூறியிருந்தார். விஜயகாந்த் தமிழ் சினிமாவில் பல நடிகர்களை உருவாக்கியவர். பல இயக்குனர்களை உருவாக்கியவர். நடிகர் சங்க கடனை அடைந்தவர். எல்லோருடைய மனதிலும் இடம் பிடித்தவர். ஆகவே, பாராட்டு விழாவோடு நடிகர் சங்க புதிய கட்டிடத்திற்கு கேப்டன் விஜயகாந்த் பெயரை வைப்பதை சரியாக இருக்கும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த கோரிக்கைக்கு சோஷியல் மீடியாவில் பலரும் திரண்டு ஆதரவு தந்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+