நடிகர் விவேக் விரைவில் குணமடைய வேண்டும்.. விஜயகாந்த், உதயநிதி ஸ்டாலின் உருக்கம்!
சென்னை: நடிகர் விவேக் விரைவில் குணடைய வேண்டி விஜயகாந்த், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் விவேக்குக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

விவேக் மருத்துவமனையில் அனுமதி
இதையடுத்து வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அவர் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு எக்மோ உதவியுடன் அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மீண்டு வர வேண்டும்
விவேக்கின் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், 24 மணி நேரம் அவரது உடல்நிலையை கண்காணிக்க வேண்டியதுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். நடிகர் விவேக் குணமடைய வேண்டிய பல்வேறு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் வேண்டி வருகின்றனர். இந்த நிலையில் நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறிஇருப்பதாவது:-

இறைவனை பிரார்த்திக்கிறேன்
நடிகர் விவேக் விரைவில் பூரண நலம்பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். நகைச்சுவை நடிகர் விவேக், நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். திரைப்படங்களில் சிந்திக்க வைக்கும் சமூக அக்கறை கொண்ட பல கருத்துக்களை மக்கள் மனதில் பதிய வைப்பதிலும், சமூக சேவைகள் செய்வதிலும் என்றும் முதலிடத்தில் திகழும் நடிகர் விவேக், விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

அண்ணன் சிந்திக்க வைக்க வேண்டும்
இதேபோல் நடிகரும், தி.மு.க இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ' உடல்நலம் குன்றி சிகிச்சையில் இருக்கும் சின்னக்கலைவாணர் அண்ணன் விவேக் அவர்கள் நலம்பெற்று விரைவில் வீடு திரும்ப விரும்புகிறேன். அன்போடு பழகுவதிலும்-சமூக சிந்தனையுடன் செயல்படுவதிலும் அண்ணனுக்கு நிகர் அவரே. அண்ணன் அவர்கள் மீண்டு வந்து தமிழக மக்களை சிரிக்க-சிந்திக்க வைக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications