வில்லிவாக்கம்: ஸ்டாலினின் மொத்த குடும்பமும் இறங்கி வேலை பார்த்தும்.. கை கொடுக்கல! திமுக தோல்வி!
சென்னை: வில்லிவாக்கம் தொகுதியில் திமுக சார்பில் களமிறங்கியிருந்த கார்த்திக் மோகனுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் ஒட்டுமொத்த குடும்பமும் இறங்கி வேலை பார்த்திருந்தது. இருப்பினும் இந்த தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இவ்வளவு பேர் இறங்கி வேலை செய்தும் வில்லிவாக்கத்தில் திமுக தோல்வியடைந்திருப்பது, அக்கட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

துர்கா ஸ்டாலின் பிரச்சாரம்
மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வழக்கமாக அரசியல் களத்திற்கு வருவது கிடையாது. ஆனால், கார்த்திக் மோகனுக்காக வில்லிவாக்கத்தில் வீடு வீடாக சென்று வாக்கு கேட்டிருந்தார். இது மக்களிடையே கவனம் பெற்றிருந்தது. அது மட்டுமல்லாது அரசியல் களத்தில் விவாதங்களையும் ஏற்படுத்தியிருந்தது.
துர்கா ஸ்டாலினே நேரடியாக களத்திற்கு வந்திருக்கிறார் எனில், வில்லிவாக்கம் எவ்வளவு முக்கியமானது? என்பதை கட்சியினர் உணர்ந்திருந்தனர்.
அதேபோல ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின், கார்த்திக் மோகனுக்காகப் பிரம்மாண்ட வாகனப் பேரணி மற்றும் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தினார். இளைஞர்களின் பிரதிநிதியாகக் கார்த்திக் மோகனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
கார்த்திக் மோகன் திமுகவின் முக்கியமான இளைஞர் அணி நிர்வாகி என்பதாலும், வில்லிவாக்கம் சென்னை நகரின் மையப்பகுதியில் உள்ள முக்கியத் தொகுதி என்பதாலும், ஸ்டாலின் குடும்பம் இந்தத் தொகுதிக்கு அதிக முக்கியத்துவம் அளித்தது.
இது தவிர, கார்த்திக் மோகனுக்காக ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மிகத் தீவிரமாகத் திரைமறைவில் இருந்து வேலை பார்த்தார். கார்த்திக் மோகன் சபரீசனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால், இந்தத் தொகுதியைத் தனது கௌரவப் பிரச்சினையாகவே அவர் கருதினார்.
சபரீசன் தனது சொந்த 'டீம்' மூலம் வில்லிவாக்கம் தொகுதியில் வார்டு வாரியாக நிலவரங்களைக் கணித்து, எந்தெந்த பகுதிகளில் திமுக பலவீனமாக உள்ளது என்பதை அறிந்து அங்கெல்லாம் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தார். வாக்குச் சாவடிகளில் திமுக முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்களை ஒருங்கிணைப்பதில் சபரீசன் முக்கியப் பங்கு வகித்தார். நிதி மேலாண்மை மற்றும் களப்பணிகளை அவர் நேரடியாகக் கண்காணித்தார்.
ஆனால் இவ்வளவு செய்தும் ஆதவ் அர்ஜுனா வெற்றி பெற்றிருக்கிறார். இந்த தோல்வி திமுகவினரை கடுமையாக பாதித்திருக்கிறது.
-
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு! -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
அடித்து ஆடும் விஜய்! லஞ்சம் வாங்குனா காலி! சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் -
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு? -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்!












Click it and Unblock the Notifications