உயிர்களைக் காவுவாங்கும் கட்சி பேனர்கள்.. நெஞ்சை அதிர வைக்கிறது.. கமல்ஹாசன் கொதிப்பு!
சென்னை: கொடிக்கம்பங்கள் நடும் பணிக்குச் சென்ற 13 வயது சிறுவன் பலியான சம்பவம் நெஞ்சை அதிர வைக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் - மாம்பழப்பட்டு சாலையில் கடந்த 20ம் தேதி பொன்குமார் என்பவரின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் பொன்முடியும் பல்வேறு திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இதில் திமுகவினரை வரவேற்பதற்காக சாலை ஓரங்களில் உயரமான கொடி கம்பங்கள் நடப்பட்டன. இந்த அலங்கார பணியில் ஈடுபட்டு வந்த 13 வயதான சிறுவன் தினேஷ் மின்சாரம் தாக்கி பலியானார்.

சாலை ஓரத்தில் தினேஷ் கொடியை நடும் போது மேலே சென்ற மின்சார வயரில் கொடி கம்பம் சிக்கி தினேஷ் உடலில் மின்சாரம் தாக்கி பலியானார். உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில் தூக்கியடிக்கப்பட்ட தினேஷ் உடலில் காயம்பட்டு பலியானார்.
இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ள நிலையில் தினேஷ் மரணத்திற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் செய்துள்ள டிவிட்டில், கொடிக்கம்பங்கள் நடும் பணிக்குச் சென்ற 13 வயது சிறுவன் பலியான சம்பவம் நெஞ்சை அதிர வைக்கிறது. கொடிக்கம்பங்களும், பேனர்களும், அலங்கார வளைவுகளும் தொடர்ந்து உயிர்களைக் காவுவாங்குகின்றன. இந்தக் கீழ்மையில் இருந்து அனைத்துக் கட்சிகளுமே விடுபட வேண்டும், என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தினேஷ் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், விழுப்புரத்தில் கொடி கம்பம் நடும் போது மின்சாரம் தாக்கி சிறுவன் தினேஷ் பலியானது அதிர்ச்சியை தருகிறது, தினேஷை இழந்து தவிக்கும் குடும்பத்தாரின் துயரில் பங்கேற்று துணைநிற்கிறேன். உயிரை குடிக்கும் பேனர் கலாச்சாரத்தை உடனே நிறுத்துங்கள். இனி யாரும் பேனர் கலாச்சாரத்தால் மரணிக்க கூடாது, என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
“உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம்.. சமூக நீதிக்கு எதிரானது” - உடைத்து பேசிய துரை வைகோ -
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications