'அழகென்ற சொல்லுக்கு முருகா..' கொலுவில் டி.எம்.எஸ் பாடலை.. பாடி அசத்திய சீக்கியர்.. செம வைரல்!
சென்னை: தனது வீட்டுக் கொலு நிகழ்ச்சியில் டி.எம்.எஸ்.சின் 'அழகென்ற சொல்லுக்கு முருகா..' என்ற முருகன் பாடலை சீக்கியர் ஒருவர் ரசித்துப் பாடியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
Recommended Video
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி புரட்டாசி மாதம் வரும் அமாவாசைக்குப் பிறகு 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
அலைமகள், மலைமகள், கலைமகள் ஆகிய முப்பெரும் தேவியர்களை வணங்கும் வகையில் இந்த நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி பண்டிகை
பெண்ணால் மட்டுமே தனக்கு மரணம் நேர வேண்டும் என்று பிரம்மனிடம் வரம் பெற்ற மகிஷாசூரன் தேவர்கள் துன்புறுத்தி வந்தார். அந்த மகிஷனை அழிக்க அன்னை மகிஷாசூரமர்த்தினி அவதரித்தார். மகிஷாசூரனை வதம் செய்ய அன்னை மகிஷாசூரமர்த்தினி 9 நாட்கள் கொலுவிருந்து போரிட்டு 10ஆவது அவரை கொல்கிறார் என்று இந்துக்கள் மத்தியில் நம்பப்படுகிறது. மகிஷாசூரை வதம் செய்த இந்த நாள் விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது.

சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை
அதற்கு முன் 9 நாட்கள் கொலு வைக்கப்படும். இந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கி கொலு நிகழ்ச்சி இன்றுடன் (அக். 15) முடிகிறது. நவராத்திரியில் முதல் 3 நாட்கள் லட்சுமிக்கும் அடுத்த 3 நாட்கள் சக்திக்கு உகந்தவை. மீதமிருக்கும் கடைசி மூன்று நாட்களும் சரஸ்வதியின் நாட்கள் உகந்தவை. நேற்றைய (அக். 14) சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. கல்விக்கடவுளாக கருதப்படும் சரஸ்வதியை வணங்கும் வகையில், சரஸ்வதி பூஜை நடத்தப்படும். அதேபோல தொழில் செய்யும் அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடப்படும்.

சீக்கியர்
இந்நிலையில், தனது வீட்டு நடைபெற்ற கொலு நிகழ்ச்சியில் டி.எம்.எஸ்.சின் 'அழகென்ற சொல்லுக்கு முருகா..' என்ற முருகன் பாடலை கோவையைச் சேர்ந்த சீக்கியர் ஒருவர் ரசித்துப் பாடினார். பஞ்சாப் மாநிலத்தைச் இந்த சீக்கியர் தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு, தமிழைக் கற்றுக்கொண்டு, கொலு நிகழ்ச்சியில் டி.எம்.எஸ்.சின் முருகன் பாடலை அட்டகாசமாகப் பாடியுள்ளார்.

ஆர்வம்
தமிழ் மீது உள்ள ஆர்வம் காரணமாக இவர் தமிழை கற்றுக்கொண்டு உள்ளார். இவர் அழகு தமிழில் பாடும் வீடியோ பலரையும் கவர்ந்து உள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications