Exclusive:எதுக்கு ரிஸ்க் எடுக்குறீங்கன்னு கேட்டாங்க! பார்வை மாற்றுத்திறனாளி CPI(M)மாவட்டச் செயலாளர்!
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் மாவட்டச் செயலாளராக கண் பார்வையற்ற ஒருவரை தேர்வு செய்து புதுமை படைத்திருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளராக தேர்வாகியுள்ள பாரதி அண்ணாவிடம் ஒன் இந்தியா தமிழ் சார்பாக பேசினோம்.
அப்போது அவர் பகிர்ந்துகொண்ட விவரம் பின்வருமாறு;

3-ம் வகுப்பு
''செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பாக்கம் கிராமம் தான் எனது சொந்த ஊர். அப்பா பலராமன் ஆசிரியராக இருந்தவர். நான் 3-ம் வகுப்பு படிக்கும் போதே பார்வை மெல்ல மங்கத் தொடங்கிவிட்டது. ஒரு கட்டத்தில் வகுப்பில் கரும்பலகையில் என்ன எழுதுகிறார்கள் என்பது கூட தெரியாததால், கண் பரிசோதனை செய்ததில் எனக்கு மைனஸ் 18 என்ற அளவில் பவர் கிளாஸ் கொடுக்கப்பட்டது. அதாவது சோடாபுட்டி என்பார்களே அதை 3-ம் வகுப்பு படிக்கும் போது அணியத் தொடங்கினேன்.''

கல்லூரிக் காலம்
''சென்னை ஜெயின் கல்லூரியில் படிக்கும் போது 1989-ல் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயலாற்றத் தொடங்கினேன். கட்சி நிகழ்ச்சிகள் ஒன்று விடாமல் கலந்துகொண்டதோடு எங்கள் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்க்க கிராமம் கிராமமாக பயணித்தேன். எனது மனைவி ஆசியராக இருப்பதால், நான் கட்சிப் பணிகளில் ஈடுபடுவதை அவரும் ஒன்றும் சொல்லமாட்டார். இந்தச் சூழலில் 2014-ம் ஆண்டு எனது மொத்தப் பார்வையும் பறிபோனது.''

பவர் கிளாஸ்
''அதுவரை பவர்கிளாஸ் அணிந்துகொண்டு சிகிச்சை எடுத்து வந்த நான், 2014-ல் ஏற்பட்ட கண் நரம்பு பாதிப்பு காரணமாக பார்வையை பறிகொடுத்தேன். ஆனாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காக தொடர்ந்து உழைத்து வந்தேன். நான் கட்சி நிகழ்ச்சிகளுக்கு வரும் போதும், கட்சிப்பணிகளை இழுத்துப்போட்டுக் கொண்டு பார்க்கும் போதும் பலரும் என்னிடம் எதுக்கு ரிஸ்க் எடுக்குறீங்க, பேசாம வீட்டில் ஓய்வாக இருக்க வேண்டியது தானே என்பார்கள்.''

எதுக்கு ரிஸ்க்
''அதாவது நேரடியாக என்னை வரவேண்டாம் என்பதற்கு பதில் கொஞ்சம் நாசுக்காக இப்படி கூறி ஒதுக்க முயற்சித்த நிகழ்வுகள் உண்டு. ஆனால் எனது கொள்கையில் நான் சமரசமே செய்துகொள்ளவில்லை. தொடர்ந்து கட்சிக்காக உழைத்ததன் பயனாக இன்று மாவட்டச் செயலாளர் பொறுப்பு கிடைத்திருக்கிறது. என்னை செங்கல்பட்டு மாவட்ட குழு தேர்வு செய்தவுடன் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் அழைத்து வாழ்த்துக் கூறினார். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.''

தன்னம்பிக்கை
''நாளிதழ்களை டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷன் செய்து வைத்திருக்கிறேன். அதை விரலால் தொட்டால் ஆடியோவாக கேட்கும் அளவுக்கு இப்போது நவீன வசதிகள் வந்துவிட்டதால் அதை பயன்படுத்திக்கொள்கிறேன். இப்போது உங்களிடம் நான் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கூட பேருந்தில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என தன்னம்பிக்கையும், சுறுசுறுப்பும் சேர்ந்த குரலில் கூறி முடித்தார் செங்கல்பட்டு மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பாரதி அண்ணா.''
-
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர்












Click it and Unblock the Notifications