'ஜெயலலிதாவுக்கு செய்ய வேண்டிய கடமை இருக்கிறது.. இவங்களும் என்பக்கம்தான்'.. சசிகலா பரபரப்பு ஆடியோ!
சென்னை: 'தொண்டர்கள் என்னுடன் இருக்கிறார்கள். கட்டாயம் கட்சியை நல்லபடியாக வழிநடத்தி கொண்டு போக வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது' என்று முன்னாள் எம்.எல்.க்.களுடன் சசிகலா போனில் பேசினார்.
அ.தி.மு.க.வை கைப்பற்றும் முயற்சியில் சசிகலா மீண்டும் துடிப்பாக களமிறங்கி இருக்கிறார். பெங்களூரு ஜெயிலில் இருந்து விடுதலையான உடனேயே அ.தி.மு.க கொடி பொருத்தப்பட்ட காரில் வந்து பரபரப்பை உண்டாக்கினார்.
இதனால் அ.தி.மு.க தலைமையே பரபரத்தது. குழப்பத்தை ஏற்படுத்துவார் என்று சொல்லப்பட்ட நிலையில் சென்னை வந்ததும் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக கூறி மிகவும் அமைதியாக மாறினார். ஆனால் தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்கி இருக்கிறார் சசிகலா.

சசிகலாவின் அதிரடி
கடந்த ஒரு மாதமாக சசிகலா தினமும் அ.தி.மு.க தொண்டர்களுடன் போனில் பேசி வருகிறார். இது தொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அ.தி.மு.க.வுக்கு தலைமை ஏற்க வேண்டும் என்பதை மையமாக வைத்தே அவரது அனைத்து பேச்சுக்களும் அமைந்துள்ளன. அ.தி.மு.க.வின் ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும் சசிகலாவுடன் போனில் பேசுபவர்களை கட்சியில் இருந்து நீக்கி வருகின்றனர்.

முன்னாள் எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சு
ஆனாலும் தொண்டர்கள் பலரும் சசிகலாவுடன் தொடர்ந்து போனில் பேசி வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கோமுகி மணியன், கணபதி மற்றும் இளந்தமிழாவர்வன் ஆகியோருடன் சசிகலா நேற்று போனில் பேசினார். அப்போது சசிகலா கூறியதாவது:- தமிழ்நாட்டில் 12-ம் தேதியுடன் ஊரடங்கு முடிகிறது. ஊரடங்கு குறித்து அரசு அடுத்து என்ன முடிவு எடுக்கிறது என்று பாப்போம்.

கடமை எனக்கு இருக்கிறது
ஊரடங்கு முடிந்ததும் அம்மா நினைவிடம் சென்றுவிட்டு அங்கு இருந்து தொண்டர்கள் அனைவரையும் சந்திக்க வருவேன். கட்டாயம் கட்சியை நல்லபடியாக வழிநடத்தி கொண்டு வந்தாக வேண்டும். அந்த கடமை எனக்கு இருக்கிறது. இது தலைவருக்கும் அம்மாவுக்கும் நான் செய்ய வேண்டிய கடமையாகும். எனக்கு எவ்வளவோ கஷ்டங்கள் பலரும் கொடுத்து இருக்கிறார்கள்.
Recommended Video

தொண்டர்கள் என்னுடன்தான்
எல்லாவற்றையும் மீறி தான் நான் வந்தேன். எல்லா கஷ்டங்களையும் பார்த்து விட்டேன். எனவே இப்போது ஏற்பட்டு இருக்கும் நெருக்கடி நிலையை என்னால் சமாளிக்க முடியும். தொண்டர்கள் என்னுடன் இருக்கிறார்கள். இவ்வாறு சசிகலா பேசினார். தமிழ்நாட்டில் ஊரடங்கு முடிந்தவுடன் சசிகலா அ.தி.மு.க தொண்டர்களை சந்திக்கும் பணியை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க தலைமை எடுக்கபோகும் அடுத்தகட்ட முடிவு என்பது குறித்து இனிமேல்தான் தெரிய வரும்.












Click it and Unblock the Notifications