SIR பணிகளால் இப்படியொரு பிரச்சனையா? போன் நம்பர், ஆதார் எண் பரவும் ஆபத்து.. வாக்காளர்கள் அச்சம்!
சென்னை: எஸ்.ஐ.ஆர் படிவங்களை அரசியல் கட்சிகளின் ஏஜெண்டுகள் பெற்று வருவதால், வாக்காளர்களின் தொலைபேசி எண்கள், ஆதார் எண்கள் பொதுவெளியில் பகிரப்படும் அபாயம் உள்ளதாக வாக்காளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். தேர்தல் ஆணையத்தின் அவசர அவசரமான SIR நடவடிக்கைகளால் பொதுமக்களின் தனியுரிமை பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அரசு அதிகாரிகளும், கட்சி சார்பில் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளும் இந்தப் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். வாக்காளர்கள் சமர்ப்பித்த எஸ்.ஐ.ஆர் படிவங்கள் அனைத்தும் பி.எல்.ஓக்கள் மூலம் வாக்காளர் சேவை பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான (SIR) கால அவகாசம் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் SIR படிவங்களை நிரப்பித் திரும்ப ஒப்படைப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 4 ஆம் தேதியுடன் முடிவடையும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்தக் கால அவகாசம் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டு, டிசம்பர் 11ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை வாக்காளர்கள் டிசம்பர் 11 வரை திருப்பி ஒப்படைக்கலாம். இந்தப் பணிகள் எல்லாம் முடிந்து டிசம்பர் 16 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். ஆட்சேபனைகள் இருந்தால் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான நாள் முதல் ஜனவரி 15 ஆம் தேதி வரை தெரிவிக்கலாம். இந்தப் பணிகள் அனைத்தும் முடிந்த பின்னர், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகும்.
இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி காரணமாக வாக்காளர்களின் ஆதார் எண், செல்போன் எண் ஆகியவை பொதுவெளியில் பலரின் கைகளுக்கும் சென்றுள்ளது குறித்து பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை அந்த பகுதியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக வந்து கொடுப்பார்கள் என்றும், அதனை நிரப்பி பொதுமக்கள் மீண்டும் அவர்களிடமே கொடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கூறி இருந்தது. மேலும் ஒரு வீடு பூட்டப்பட்டு படிவம் கொடுக்க முடியாத சூழ்நிலையில் பூத் லெவல் அலுவலர்கள் 3 முறை அந்த வீட்டுக்கு வருவார்கள் என்று கூறியிருந்தது.
ஆனால் பெரும்பாலான இடங்களில் பொதுமக்களே அலுவலர்கள் முகாமிட்டுள்ள இடத்திற்கு சென்றுதான் படிவங்களை பெற வேண்டி உள்ளது. அதே போல் படிவங்களை பூர்த்தி செய்து கொடுப்பதற்கும், மக்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இருக்கும் இடத்திற்கு தான் செல்ல வேண்டி உள்ளது என்று கூறப்படுகிறது. பல இடங்களிலும் இதுதான் நிலைமை.
மேலும், முக்கியமாக கணக்கெடுப்பு படிவம் கொடுக்கும் பணி மற்றும் அதனை திரும்பப் பெறும் பணிகளை, அதிக பணிச்சுமை காரணமாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் செய்வதில்லை. அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள்தான் செய்கின்றனர். அதனால் பொதுமக்கள் படிவத்தில் கொடுத்து இருக்கும் ஆதார், செல்போன் எண்கள் அவர்கள் வசம் சென்று விடுகிறது என்று பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
வாக்காளர்களின் செல்போன் எண்கள் தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர் பணிகள் காரணமாக பொதுவெளியில் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்துக்கு இந்த எண்களை பயன்படுத்தக்கூடும் என்றும், வாக்காளர்களின் செல்போன் எண்கள் தவறான நோக்கத்தோடு பயன்படுத்தப்படும் என்றும் வாக்காளர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
சில இடங்களில் பொதுமக்களுக்கு போன் செய்து, உங்களது கணக்கெடுப்பு படிவத்தில் சில தகவல்கள் வேண்டும் என்று சிலர் கேட்கின்றனர். பூத் அலுவலராக இல்லாதவர்கள் இதுபோன்ற விவரங்களைக் கேட்பதால், வாக்காளர்கள் அச்சமடைந்துள்ளனர். வாக்காளர்களின் செல்போன் எண்கள் தவறான நோக்கத்தோடு பயன்படுத்துவது தடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications