சென்னை மேற்கு திமுக மா.செ. பதவி- கலைராஜனுக்காக படுதீவிரமாக களமிறங்கிய மாஜி அதிமுக பிரமுகர்கள் லாபி
சென்னை: கொரோனாவால் ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ. காலமான நிலையில் அவர் வகித்து வந்த திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு வி.பி. கலைராஜனை முன்னிறுத்தி வருகின்றனர் திமுகவுக்கு தாவிய அதிமுக மாஜி பிரமுகர்கள் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த ஜெ. அன்பழகன், கொரோனாவால் உயிரிழந்தார். இது திமுகவினரை பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்த நிலையில் ஜெ. அன்பழகன் வகித்து வந்த பதவி யாருக்கு போகப் போகிறது? என்பதுதான் திமுகவில் நடந்துவரும் முதன்மை விவாதம். தொடக்கத்தில் இந்த பட்டியலில் கு.க. செல்வம், வி.பி. கலைராஜன் பெயர் அடிபட்டது.

மாஜி அதிமுகவினரிடம் ஒப்படைப்பு?
இருவருமே அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்கள். ஏற்கனவே சென்னை கிழக்கு மாவட்டத்தை அதிமுகவில் இருந்து வந்த சேகர்பாபுவிடம் ஒப்படைத்திருக்கின்றனர். இந்த நிலையில் மேற்கு மாவட்டத்தையும் அதிமுகவிடம் இருந்து வந்த நபரிடமே ஒப்படைக்கப் போகிறதா? திமுக தலைமை என்கிற கேள்வி எழுந்தது.

அன்பழகன் தம்பி கருணாநிதி
அதேநேரத்தில் ஜெ. அன்பழகன் குடும்பத்தில் அவரது தம்பி ஜெ. கருணாநிதியும் பெயரும் அடிபட்டு வருகிறது. அன்பழகனின் நிழலாகவே வலம்வந்தவர். அதனால் அன்பழகனிம் இடத்தை எளிதாக கருணாநிதியால் நிரப்பிவிட முடியும் என்கின்றனர் சில சீனியர்கள்.

கே.கே.நகர் தனசேகரன்
இந்த பட்டியலில் கே.கே.நகர் தனசேகரன் பெயரும் அடிபடுகிறது. திமுகவில் நீண்டகாலம் முக்கிய பதவி கிடைக்கும் என பேசப்பட்டு வருகிறவர்களில் தனசேகரனும் ஒருவர். அவருக்குத்தான் நிச்சயம் இம்முறை திமுக தலைமை வாய்ப்பு கொடுத்துவிடும் என்றே நம்புகின்றனர் அப்பகுதி திமுகவினர். மேலும் மயிலை வேலுவின் பெயரும் மாவட்ட செயலாளர் பதவிக்கு அடிபடுகிறது.

அதிமுக பிரமுகர்கள்
ஆனால் வி.பி. கலைராஜனுக்கு எப்படியும் மாவட்ட் செயலாளர் பதவியை வாங்கித் தந்துவிடுவது என்பதில் திமுகவில் ஐக்கியமான மாஜி அதிமுக பிரமுகர்கள் லாபி படுதீவிரமாக இருக்கிறதாம். அதுவும் நடிகர் கட்சியின் கொள்கை பரப்பு செயலராக இருந்தவர்தான் இந்த லாபியின் லீடராக பரபரத்துக் கொண்டிருக்கிறாராம்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications