கேஎன் நேரு vs தவெக.. விஜய்யை விமர்சித்த அமைச்சருக்கு எதிராக வரிந்து கட்டி வந்த நாஞ்சில் சம்பத்
சென்னை: ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்றவர்தான் இன்றைக்கு வீர வசனம் பேசுகிறார் என திமுக அமைச்சர் கேஎன் நேரு தவெக தலைவர் விஜய்யை விமர்சித்த நிலையில், அமைச்சர் நேருவுக்கு தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பதில் கொடுத்துள்ளார்.
எந்த அழுத்தத்திற்கும் அடிபணிகிறவன் நான் இல்லை என்று முழங்கிய எங்கள் தலைவரை பார்த்து அமைச்சர் கேஎன் நேருவுக்கு ஏன் ஆத்திரம்? என தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில, மாவட்ட அளவிலான செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் கடந்த 25ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அக்கட்சித் தலைவர் விஜய், "நமது அரசியல் பயணத்தில் இது மிக மிக முக்கியமான காலகட்டம். நான் ஏன் இதை அழுத்தமாக சொல்கிறேன் என்றால் அழுத்தத்துக்கு அடங்கி போகும் ஆட்கள் நாம் இல்லை. இது நம்மிடம் நடக்கவே நடக்காது. 'அழுத்தம் இருக்கிறதா என்று கேட்டீர்கள்?' என்றால், 'அழுத்தம் இருக்கிறது'. ஆனால் அது நமக்கு இல்லை மக்களுக்குதான்" எனத் தெரிவித்திருந்தார்.
விஜய்யின் இந்தப் பேச்சை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கேஎன் நேரு விமர்சித்திருந்தார். நேற்று திருச்சியில் நடைபெற்ற மொழிப் போர் தியாகிகள் நாள் வீரவணக்க பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய விஜய், 'அழுத்தத்துக்கு நானா பயப்படுவேன்? ஒரு காலத்திலும் பயப்பட மாட்டேன்' என்றெல்லாம் வீர வசனம் பேசியிருக்கிறார்.
இதே விஜய், ஜெயலலிதாவிடம் எப்படி கை கட்டி நின்றார் என்பதை இந்த நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். ஒரு சினிமா படம் வெளியிட முடியாமல் போனதற்காக, ஜெயலலிதாவை சந்தித்து, "உங்களுக்கு என்றைக்கும் நாங்கள் எதிரி இல்லை" என்று அழுத்தத்துக்கு பயந்து தந்தையுடன் கை கட்டி நின்றவர்தான் விஜய். அவர்தான் இன்று வீரவசனம் பேசுகிறார்" எனப் பேசினார்.
கேஎன் நேருவின் இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தலைவர் விஜய்யை குறைகாணும் நேரு, முதலில் தன் முகத்தை கண்ணாடியில் காணட்டும்..! எந்த அழுத்தத்திற்கும் அடிபணிகிறவன் நான் இல்லை என்று முழங்கிய எங்கள் தலைவரை பார்த்து அமைச்சர் நேருவுக்கு ஏன் ஆத்திரம்? ஒரு படம் வெளிவருவதில் வரும் இடையூறை அதிகாரத்தில் இருக்கிற முதலமைச்சரை சந்தித்து தீர்வு காண கேட்டால் அது என்ன பஞ்சமா பாதகமா?
தவெகவை பற்றி கவலைப்படுகின்ற நேரு தன்னுடைய துறையில் ரூபாய் 2000 கோடிக்கு மேல் நடந்த முறைகேடுக்கு ED விடுத்த நோட்டீசுக்கு எங்கெல்லாம் ஓடி ஒளிந்தார்? கிழிவது ஒரு இடம்? தைப்பது ஒரு இடமா? முதலில் உங்கள் கிழிசலை தைத்துக்கொள்ளுங்கள்..!" எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
நாளை மறுநாள் தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் விஜய்.. புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பு! -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
பாஜக பெயரை சொல்லவே சாகிறார்.. இவரா முதலமைச்சர்.. விஜய்யை வெளுத்து வாங்கிய கீதா ஜீவன்












Click it and Unblock the Notifications