தமிழ்நாட்டில் கூட குண்டு விழலாம்.. அதுக்குதான் இந்த போர் ஒத்திகை.. ரெடியா இருக்கணும்: கர்னல் கணேசன்
சென்னை: தூங்கி கொண்டிருப்பவர்களை தட்டி எழுப்புவதுபோல, போர்க்கால ஒத்திகை நிகழ்வு மேற்கொள்ளப்படுகிறது.. தமிழ்நாட்டில் கூட நாளைக்கு குண்டு விழலாம்.. ஆனால், இதை பற்றின உணர்வு மக்களுக்கு வேண்டும் என்பதற்காகவே, ஒத்திகை பயிற்சி குறித்து பிரதமர் உத்தரவிட்டிருக்கிறார். இதனால் ஒரு அற்புதமான அனுபவம் கிடைக்கும் என்று ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி கர்னல் கணேசன் தெரிவித்துள்ளார்..
ஜம்மு காஷ்மீரில் கடந்த ஏப்ரல் 22 ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவிகள் அநியாயமாக உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள் ஆவார்.. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் உலகையே உலுக்கிவிட்டது..

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அதிரடி நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான் மீது இந்தியா ராணுவ தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருகிறது.
நாளை ஒத்திகை
அதேபோல 2 நாடுகளும் ஏவுகணை சோதனை, எல்லையில் பாதுகாப்பு குவிப்பு உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.. இந்த சூழ்நிலையில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, நாளைய தினம் நாடு முழுவதும் 259 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடக்க உள்ளன.. இது முழுக்க முழுக்க பொதுமக்களின் பாதுகாப்பை உள்ளடக்கிய ஒத்திகையாகும்.. கல்பாக்கம் அணுமின் நிலையம், சென்னை விமான நிலையம், ஆவடி ராணுவ தளவாடம், மணலி பெட்ரோலிய நிறுவனம் ஆகிய நான்கு இடங்களில் போர் ஒத்திகை நடத்தப்பட உள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இந்திய எல்லைப் பகுதிகளில் வான்வழித் தாக்குதல், போர் மற்றும் ஏவுகணை தாக்குதல் எதிரிகள் தாக்கும்போது பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் எப்படி தங்களைப் பாதுகாத்து கொள்வது? எதிரி நாட்டினர் திடீரென எல்லைக்குள் நுழைந்தால் சைரன் ஒலிப்பது, மின் தடை ஏற்பட்டால் எப்படி? என்பது குறித்தெல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன..
அதுமட்டுமல்ல, ஒருவேளை குடியிருப்பு பகுதிகளில் திடீர் தாக்குதல் நடத்தப்பட்டால், பொதுமக்கள் தங்களை எப்படி தற்காத்து கொள்வது? என்பது குறித்த பயிற்சி தரப்படுகிறது.. போர் பதற்ற சூழலின்போது மக்களை எப்படி பாதுகாப்பது? எப்படி வெளியேற்றுவது? என்பது குறித்தும் ஒத்திகைகள் நடத்தப்பட உள்ளது.
அற்புதமான அனுபவம்
இந்த போர் ஒத்திகை குறித்து ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி கர்னல் கணேசன், நம்முடைய ஒன் இந்தியா சேனலுக்கு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், "நம்முடைய இந்தியாவை பொறுத்தவரைக்கும், போர் என்றாலே அது பார்டரில்தான் நடக்கும் என்பது பதிந்துவிட்ட ஒன்று.. அதிலும் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு அதை பற்றின எந்த ஐடியாவும் இருக்க வாய்ப்பில்லை..
ஆனால், இன்றுள்ள தொழில்நட்ப வளர்ச்சியில் போர் என்றாலே, அது ஜம்மு காஷ்மீர், லடாக்கில் மட்டுமே நடக்கும் என்று நினைக்கக்கூடாது. எங்கே வேண்டுமானாலும் நடக்கும்.. ஏன், தமிழ்நாட்டில் கூட நாளைக்கு குண்டு விழலாம்.. ஆனால், இதை பற்றின உணர்வு மக்களுக்கு வேண்டும் என்பதற்காகவே, ஒத்திகை பயிற்சி குறித்து பிரதமர் உத்தரவிட்டிருக்கிறார். இதனால் ஒரு அற்புதமான அனுபவம் கிடைக்கும்.
மருத்துவமனையில் படுக்கைகள் உள்ளனவா
தூங்கி கொண்டிருப்பவர்களை தட்டி எழுப்புவதுபோல, இந்த போர் ஒத்திகை நிகழ்வு மேற்கொள்ளப்படுகிறது.. உதாரணத்துக்கு ஒரு கட்டிடம் இடிந்து விழுகிறது என்றாலோ, ஒரு வண்டி விபத்தில் சிக்குகிறது என்றாலோ எப்படி தங்களை பாதுகாத்து கொள்வது? என்பதை தெரிந்து வைத்திருப்பது நல்லது.
அதுபோல ஒரு குண்டு திடீரென விழுகிறது என்றால், அதற்கான கேஷூவலாட்டி இருக்கிறதா? டாக்டர்கள் தயார் நிலையில் உள்ளார்களா? மருத்துவமனையில் படுக்கை வசதிகள் உள்ளனவா? என்பதையெல்லாம் முன்கூட்டியே தயாரித்து வைத்து கொள்வது நமது கடமையாகும்.
அணுமின் நிலையம் - தாக்குதல்
விமான நிலையம், குறிப்பாக அணுமின் நிலையம் அருகில் உள்ளவர்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தாக்குதல் நடக்கும்போது, முதலில் மக்கள் தங்களை தற்காத்து கொள்ள வேண்டும்.
அடுத்ததாக இந்த நாட்டின் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும். சகமனிதர்கள் காயம்பட்டால், அவர்களையும் சேர்த்து காப்பாற்ற வேண்டும்.. ஆனால், ஒரு ஸ்கூட்டர் விபத்து சாலையில் நடந்துவிட்டால், யாருமே அருகில் சென்று விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற முயல்வதில்லை.. காரணம், சமுதாயத்தில் மனித நேயம் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் போர் யுத்த காலத்தில், இப்படி இருக்கக்கூடாது.
மனித சக்தி ஆக்கப்பூர்வமானது
பாகிஸ்தான் - இந்தியா போர் என்பது சரியான செயல் இல்லை.. ஆனால், இந்த பதட்டமான சூழலில் பிரதமர் மோடி எடுத்துவரும் செயல்பாடுகள், இந்தியாவுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்..
மனித சக்தி மகத்தான வரப்பிரசாதம்.. இதை ஆக்கப்பூர்வமான வேலைக்கு பயன்படுத்துவதே அறிவார்ந்த செயல். இந்த சண்டையில், நம்முடைய வீடுகள் உள்ளிட்டவைகள் சேதமடையக்கூடாது. முடிந்தவரையில், மத்தியஸ்தம் செய்து கொள்ள வேண்டும்.. பாகிஸ்தான் செய்தது தவறுதான். அதற்காக சின்ன அளவில் தாக்குதல் நடத்தலாம்.. இப்போது உலகம் முழுவதுமே பதட்டமான சூழ்நிலையில் உள்ள சூழலில், மாபெரும் யுத்தமாக இதை கொண்டு வந்துவிடக்கூடாது என்கிறார்கள்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
கோடை மழைக்கு எண்ட் கார்டு.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்! இனிதான் சம்பவம் இருக்கு -
1-9ம் வகுப்பு மாணவர்களுக்கு.. முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு! கோடை விடுமுறை தேதி அறிவிப்பு -
அசத்தி காட்டிய தமிழ்நாடு.. ஐடியா கேட்டு வந்த உத்தரப் பிரதேசம்! வழிகாட்ட நம்ம ரெடி! -
பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
தமிழ்நாட்டில் வெப்பநிலை அடியோடு குறையப்போகுது.. வானிலை மையம் குட்நியூஸ் -
நாளை மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.. தலைமை ஹாஜி அறிவிப்பு! -
இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! -
முடியல.. கொளுத்துது வெயில்! வெளியே போகாதீங்க! தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய வார்னிங்! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications