வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தம்! தலைநகரில் தண்ணீர் தட்டுப்பாடு?
சென்னை: நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது.
குடிநீர் ஆதாரம்: புழல், செம்பரம்பாக்கம், வீராணம் உள்ளிட்ட ஏரிகளிலிருந்து நாள்தோறும் சென்னை மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் தலைநகர் சென்னையில் சில இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு இன்னும் தீர்ந்தபாடில்லை. வெயில் காலம் இப்போது தான் ஆரம்பித்துள்ளது, இன்னும் போகப் போக ஏப்ரல், மே, ஜூன், மாதங்களில் சென்னை மக்களின் தண்ணீர் தேவை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீராணம் ஏரி: இதனிடையே நாள்தோறும் வீராணம் ஏரியிலிருந்து 76 கன அடி நீர் சென்னைக்கு குடிநீருக்காக அனுப்பப்பட்டு வந்தது. இந்தச் சூழலில் வீராணம் ஏரியின் நீர்மட்டமானது வெகுவாக குறையத் தொடங்கியுள்ளது. வீராணம் ஏரியின் மொத்த கன அளவு 1465 மில்லியன் கன அடி என்பது குறிப்பிடத்தக்கது. வீராணம் ஏரி எப்போது கடைசியாக முழு கொள்ளளவை எட்டியது என்றால், மேட்டூர் அணை திறக்கப்பட்டு வீராணம் ஏரிக்கு காவிரி நீர் முழுமையாக வந்த போது ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது.
குடிநீர் அனுப்புவது நிறுத்தம்: வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படுவதை போலவே 30,000 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதியை பெறவும் நீர் திறந்து விடப்பட்டது. இப்போது ஏரியின் நீர் கொள்ளளவு 2 மில்லியன் கன அடியாக குறைந்துவிட்டதால் சென்னைக்கு அனுப்பப்படும் நீரின் அளவு 76 கன அடியில் இருந்து 3 அடியாக குறைக்கப்பட்டு நேற்று வரை அனுப்பப்பட்டது. இன்று என்னவென்றால் மொத்தமாக சென்னைக்கு குடிநீர் அனுப்புவதே வீராணம் ஏரியில் நிறுத்தப்பட்டு விட்டது.
மாற்று நடவடிக்கை என்ன? : இதனால் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால் மாற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் வடலூர் வாலாஜா ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணிகள் தொடங்கியுள்ளன. இது தற்காலிமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையை பொறுத்தவரை நாளுக்கு நாள் மக்கள் தொகை கூடிக்கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இதனால் மக்களின் தண்ணீர் தேவையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் காலம் என்பதால் தண்ணீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடம் கொடுக்காதவாறு குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு தரப்பில் பல்வேறு கட்ட மாற்று முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications