"சூர்யா குடும்பத்தின் உணர்வை பாராட்டுகிறோம், அசெளகரியங்களை பெரிதுபடுத்துவது சரியானது இல்லை".. மாசு
சென்னை: "சூர்யா குடும்பத்தின் உணர்வை பாராட்டுகிறோம்.. அசெளகரியங்களை பெரிதுபடுத்துவது சரியானது இல்லை" என அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடிகர் சூர்யாவை பாராட்டி உள்ளார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைகளில் முககவசம் அணிவதை கட்டாயப்படுத்தி இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறும் போது, கொரோனாவால் ஏற்படும் இறப்புகளை பொறுத்தவரை, இணை நோய் உள்ளவர்கள் தான் அந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஒமிக்ரானில் இருந்து உருமாற்றமான வைரஸ் xbb 1.16 தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பரவி வருகிறது.

இரண்டாவதாக இந்த கொரோனா வைரஸ், கொத்துக்கொத்தாக பரவுவது இல்லை.. ஆனாலும் கூட ஜாக்கிரதையாக இருப்பது என்பது அவசியம். முன்னெச்சரிக்கை நடவடிக்கை போதிய அளவு எடுத்துள்ளோம். பெரிய அளவில் கட்டுப்பாடுகள் தேவையில்லை என்றார்.
இதனிடையே சூர்யா குடும்பத்தினர் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட போது பொதுமக்களுக்கு அசவுகரியம் ஏற்பட்டதாக கூறப்படுகிறதே என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் மா சுப்பிரமணியன், சூர்யாவாக இருந்தாலும்,அவரது தந்தை சிவக்குமாராக இருந்தாலும் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது பாராட்டுக்குரியது.
நேரடியாக வந்து பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் அவர்களின் உணர்வை பாராட்டுகிறேன். அந்த நேரத்திலே சின்ன சின்ன அசவுகரியங்கள் ஏற்பட்டிருக்கலாம், அதனை பெரிதுப்படுத்துவது சரியானது இல்லை என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications