சென்னையில் எதுக்கு இந்தி பிரசார சபா? இழுத்து மூடக் கோரி நாம் திராவிடர்கள் போராட்டம்
சென்னை: இந்தி பேசாத தமிழ்நாட்டின் சென்னையில் செயல்படும் இந்தி பிரசார சபாவை இழுத்து மூட வலியுறுத்தி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த நாம் திராவிடர்கள் அமைப்பு நேற்று சென்னையில் போராட்டம் நடத்தினர்.

தென்னிந்திய மாநிலங்களில் திராவிடர்களை ஒருங்கிணைத்து செயல்படக் கூடிய அமைப்பு நாம் திராவிடர்கள். பொதுமக்களின் வரிப்பணத்தில் இந்தி என்ற ஒரே ஒரு மொழியின் வளர்ச்சிக்காக இந்தி பிரசார செயல்படுத்தப்பட்டு வருவது கண்டனத்துக்குரியது. சென்னையில் செயல்பட்டு வரும் இந்தி பிரசார சபாவை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி மே 13-ந் தேதி சென்னையில் நாம் திராவிடர்கள் அமைப்பின் சார்பாக போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் முன்பாக நேற்று இந்தி பிரசார சபாவை இழுத்து மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி நாம் திராவிடர்கள் அமைப்பினர் முழக்கப் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் எழுத்தாளர்கள் டான் அசோக், கோவி லெனின் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
சென்னையில் நாம் திராவிடர்கள் நடத்திய போராட்டத்தின் முழு வீடியோ:
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications