“சென்னையில் எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் எதிர்கொள்ள அரசு தயார்" - அமைச்சர் கேஎன் நேரு திட்டவட்டம்
சென்னை: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் கே.என்.நேரு இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, "சென்னையில் எவ்வளவு பெரிய மழை வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். தண்ணீர் தேங்கும் இடங்களில் நீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது." எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் சென்னை உட்பட வட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், மழை பெய்து வருகிறது மேலும், தமிழ்நாட்டில் 28 ஆம் தேதி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கேஎன் நேரு, செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார்.
அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், "குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளோடு பேசி இருக்கிறோம். பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் வெகு விரைவில் திறந்து வைக்கப்பட உள்ளது. அந்த திட்டங்களை விரைந்து முடிப்பது தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது." எனத் தெரிவித்தார்.
27 ஆம் தேதி புதிய புயல் சின்னம் உருவாக உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கேஎன் நேரு, "எவ்வளவு பெரிய மழை வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என முதல்வர் கூறியுள்ளார். தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டதன் பேரில் எங்கெல்லாம் தண்ணீர் தேங்குமோ அங்கெல்லாம் தண்ணீரை அகற்ற மோட்டார்கள், டிராக்டர்கள் தயாராக உள்ளன.
சென்னையில் எவ்வளவு பெரிய மழை வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். தண்ணீர் தேங்கும் இடங்களில் நீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை மேற்கொள்ளவும் தயாராக இருக்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications