சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதெல்லாம் என்னா வெயிலு.. அடுத்த 3 நாளைக்கு வருது பாருங்க அனல் காற்று .. வானிலை மையம் அலார்ட்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்றைக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்றும். அடுத்த 3 நாளைக்கு அனல் காற்று வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    'Heat Will Increase' - Tamilnadu Weatherman and IMD Weather Update

    ஆம்பன் புயல் ஈரப்பதத்தை உறிஞ்சிக்கொண்டதால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே இருக்கும் என்று தெரிவித்துள்ளது. அடுத்த நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்றும் வட மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்றும் தெரிவத்துள்ளது.

    weather forecast tamil nadu : dry weather likely to prevail over tamilnadu

    22ம் தேதியும் தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. அதேநேரம் 23 மற்றும் 24ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது,.

    சென்னையை பொறுத்தவரை வறண்ட வானிலையே காணப்படும் என்று கூறியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் முதல் குறைந்த பட்சமாக 31 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்என்று கூறியுள்ளது. இதேபோல வட மாவட்டங்களில் இன்று வெப்பநிலை 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்பு உள்ளது.

    புயல் கரையை கடந்த போதிலும் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மன்னர் வளைகுடா மற்றும மத்திய மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.. தமிழகத்தில் 21ம் தேதி காலை நிலவரப்படி கடலூர் மாவட்டம் வனமாதேவியில் 4 செமீ மழையும், கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டையில் 3 செமீ மழையும், கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகத்தில் 3 செமீ மழையும் பெய்திருந்தது.

    பொருளாதார நெருக்கடி.. நீங்க எப்படி சமாளிக்கிறீங்க.. எங்களிடம் ஷேர் பண்ணுங்கபொருளாதார நெருக்கடி.. நீங்க எப்படி சமாளிக்கிறீங்க.. எங்களிடம் ஷேர் பண்ணுங்க

    இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம்சித்தார் பகுதியில் 2 செமீ மழையும், விருதுநகர் மாவட்டம் திருச்சூழியில் 2 செமீ மழையும், சிவகங்கை மற்றும் திருப்பத்தூர் (சிவகங்கை) ஆகிய பகுதிகளில் செமீ மழையும் பெய்திருந்தது. இதேபோல் பேச்சிப்பாறை(கன்னியாகுமரி), திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு செமீ மழை பெய்திருந்தது.

    English summary
    dry weather likely to previle over tamilnadu and puducherry . heat wave will be blowing next 3 days in Tamil Nadu
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X