சென்னைக்கு மழை இருக்காதுன்னு சொன்னாங்க.. செம மழை! சென்னை மக்கள் ஹேப்பி!
சென்னை: சென்னையில் அடுத்த இரண்டு நாளைக்கு வறண்ட வானிலையே காணப்படும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்று அறிவிக்கப்படிருந்த நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாளைக்கு தமிழகத்தின் உள் மற்றும் தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
மேலும் நெல்லை, ராமநாதபுரம், மதுரை, தேனி, சேலம், நீலகிரி, தருமபுரி, நாமக்கல், கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் நேற்று தனது அறிவிப்பில் குறிப்பிட்டு இருந்தது.

சென்னையில் வானிலை
அதேநேரம் சென்னையில் அடுத்த இரண்டு நாளைக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்றும்மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் மழை
இந்நிலையில் கணிப்புகளை மீறி இன்று சென்னையில் பரவலாக மழை பெய்தது. அசோக்நகர், வடபழனி, கே.கே.நகர், திருவல்லிக்கேணி, தாம்பரம், பல்லாவரம், மடிப்பாக்கம், வேளச்சேரி, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கலில் மழை பெய்தது. இதேபோல் ஆதம்பாக்கம், ஆலந்தூர், தரமணி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

காற்று மாசு
இந்த மழையால் சென்னையில் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் காற்று மாசு குறையும் என்று சென்னைவாசிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

நீண்ட நாளுக்கு பிறகு
அண்மைக்காலத்தில் சென்னையில் மழை பெய்யாமல் இருந்து வருகிறது. நீண்ட நாள்களுக்கு பிறகு மழை பெய்து வருவது சென்னை நகரத்தை மட்டுமல்ல, சென்னைவாசிகளையும் இந்த மழை குளிரவைத்துள்ளது. இந்த மழைக்கு மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்
-
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications