Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலினுக்கு வந்த கோபம்? டாக்டர் ஐயாவை, ஏன் அப்படி சொன்னார்? இப்படியொரு கண்டிஷனா? பரபரக்கும் யூகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஸ்டாலின் – பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இடையே நடந்த வார்த்தை மோதல்கள் திமுக, பாமக கட்சிகளிடையே இன்னமும் ஓயவில்லை. டாக்டர் ராமதாசை சிறுமைப்படுத்தும் வகையில் ஸ்டாலின் பேசியது பற்றிய பின்னணி தகவல் ஒன்று நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது. என்ன தெரியுமா?

தொழிலதிபர் அதானியுடனான சந்திப்பு பற்றி முதல்வர் ஸ்டாலின் விளக்கவேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அவருக்கு வேற வேலை இல்லை" என்று பதிலளித்திருந்தார் ஸ்டாலின்.

dr ramadoss mk stalin pmk


கொந்தளிப்பு;
டாக்டர் ராமதாசை சிறுமைப்படுத்தும் தொணியில் ஸ்டாலினின் பேட்டி உள்ளாக கூறி, பாமகவினர் கொந்தளித்து வருகிறார்கள்.. அத்துடன் முதல்வர் ஸ்டாலினின் பேட்டி அரசியல் ரீதியாக சர்ச்சைகளையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்த துவங்கிவிட்டது.

இது குறித்து இதுநாள்வரையிலும் கருத்து தெரிவிக்காமல் இருந்த டாக்டர் ராமதாஸ், பத்திரிகையாளர் சந்திப்பின் போது, "அவரளவுக்கு எனக்கு ஞானம் இல்லை" என்கிற ரீதியில் பதில் சொல்லி கடந்து சென்றார். டாக்டர் ராமதாஸ் சொன்ன இந்த பதிலைத்தான், பாமக தரப்பில் வைரலாக்கி கொண்டிருக்கிறார்கள்.

தியாகிகள் விழா: இந்நிலையில், ராமதாசை சிறுமைப்படுத்தும் வகையில் ஸ்டாலின் ஏன் பேசினார் என்பதன் பின்னணி குறித்து ஒரு தகவல் நமக்கு பிரத்யேகமாக கிடைத்திருக்கிறது. அதாவது, பாமகவின் இட ஒதுக்கீடு தியாகிகளுக்கான மணி மண்டபத்தை 28-ந்தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விழாவில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொள்ள வேண்டும் என விரும்பியிருந்தார் முதல்வர் ஸ்டாலின். அதனால்தான் அமைச்சர் பொன்முடியும், ராமதாசை அழைப்போம் என சொல்லியிருந்தார்.

தான் கலந்து கொள்ளும் விழாவில் ராமதாஸ் கலந்துகொள்ள வேண்டும் என ஸ்டாலின் விரும்பியதற்கு பல அரசியல் காரணங்கள் உண்டு. ராமதாசை அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, சிவசங்கர் மற்றும் ஜெகத்ரட்சகன் ஆகியோர் நேரில் சென்று அழைக்கும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. இது குறித்து, ஜி.கே.மணி மூலமாக ராமதாசுக்கு தகவலும் தெரிவிக்கப்பட்டது.

மணிமண்ட விழா : அப்போது ராமதாஸ், "வன்னியர்களின் உள் இடஒதுக்கீடான 10.50 சதவீத உள் இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றுவதில் முட்டுக்கட்டைப் போட்டு வைத்திருக்கிறார் ஸ்டாலின். அதனை நடப்பு கல்வி ஆண்டிலேயே நிறைவேற்றுவோம்" என்று மணி மண்டப விழா நிகழ்ச்சியில் ஸ்டாலின் உறுதி தர வேண்டும்.

இந்த உறுதியை தந்தால், அவருடன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எனக்கும் சம்மதம். அதை தவிர்த்து, ஸ்டாலின் திட்டமிடும் அரசியலுக்கெல்லாம் நான் உட்படமாட்டேன்" என்று ஜி.கே.மணியிடம் கறாராக சொன்னாராம் ராமதாஸ்.

இந்த தகவல் முதல்வரின் கவனத்துக்கு சென்றிருக்கிறது. ராமதாசின் பதில் ஸ்டாலினை ரசிக்க வைக்கவில்லை போலும்.. அதை மனதுக்குள் அசை போட்டுக்கொண்டே இருந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

சட்டென வந்த கோபம்: இப்படிப்பட்ட சூழலில், ராமதாஸ் பற்றி செய்தியாளர்கள் கேள்வி கேட்கப்பட்டதும் சட்டென்று தனது கோபத்தை வெளிப்படுத்தும் முகமாக ராமதாசை சிறுமைப்படுத்தும் வார்த்தைகள் ஸ்டாலினிடம் வெடித்து விட்டது என்று நம்மிடம் கிசுகிசுக்கிறார்கள் மேலிடத்தில் தொடர்புடையவர்கள்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+