சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இல.கணேசனின் உடல்நிலை சீராக உள்ளது..2 நாட்களில் வீடு திரும்புவார் - எம்.ஜி.எம். மருத்துவமனை

Google Oneindia Tamil News

சென்னை: உடல்நலக்குறைவினால் எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இல.கணேசன் 2 நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இல.கணேசனின் உடல்நிலை சீராக உள்ளதால் அவர் 2 நாட்களில் வீடு திரும்புவார் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

தஞ்சாவூரைச் சேர்ந்த இல. கணேசன் பாஜகவின் மூத்த தலைவர். இல.கணேசன் அரசியலுக்கு வருவதற்கு முன்பு அரசுப் பணியில் இருந்தவர். ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளில் ஈடுபாடு ஏற்படவே அரசுப் பணியைத் துறந்து விட்டு அதில் இணைந்தார்.

70களில் எமர்ஜென்ஸி கலவர காலக்கட்டத்தில் போலீசாரிடமிருந்து தப்பித்து சுமார் ஒருவருட காலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். அந்த நாட்களில் தற்போதைய தமிழ்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறனுடன் நட்புறவில் இருந்துள்ளார். பின்னர் 1991ல் பாஜகவின் மாநில அமைப்புச் செயலாளரானார்.

அரசுப் பள்ளியில் வாய்ப்பாடு ஒப்பித்த அமைச்சர் கணேசன்! வைத்த கண் வாங்காமல் பார்த்த திமுகவினர்! அரசுப் பள்ளியில் வாய்ப்பாடு ஒப்பித்த அமைச்சர் கணேசன்! வைத்த கண் வாங்காமல் பார்த்த திமுகவினர்!

இல. கணேசன்

இல. கணேசன்

கடந்ம 2002ம் ஆண்டு முதல் 2006 வரை பாஜக தேசிய செயலாளராகப் பணியாற்றினார். கட்சியின் தேசிய துணை தலைவராக இருந்தவர். பாஜக தமிழ் மாநில தலைவராக இருந்துள்ளார். தேசிய அளவில் சிறப்பாக பணியாற்றிய அவரை தமிழகத்தில் கட்சியை வலுவாக்கும் நோக்கில் மாநிலத் தலைவராக நியமித்தது பாஜக மேலிடம்.

நட்புறவு

நட்புறவு

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, மறைந்த அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா என இரு தலைவர்களிடமும் நெருங்கிப் பழகியவர். மாற்றுக் கட்சியினரிடமும் பண்போடு பழகக் கூடியவர். இனிமையாக பேசக் கூடியவர். தனது பதிவுகளை ஆழமான வார்த்தைளாலும், கருத்துக்களாலும் பதிவு செய்யத் தவறாதவர்.

ராஜ்யசபா உறுப்பினர்

ராஜ்யசபா உறுப்பினர்

2009 மக்களவைத் தேர்தலிலும், 2014 மக்களவைத் தேர்தலிலும் தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டார். இரண்டு முறையும் தோல்வியடைந்தாலும் பின்னர் மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு,கடந்த 2016 அன்று ராஜ்யசபா உறுப்பினராகப் பதவி ஏற்றுக்கொண்டார்.

 உடல்நலக்குறைவு

உடல்நலக்குறைவு

இந்த நிலையில் அவர் மணிப்பூர் ஆளுநராகவும் பின்னர் மேற்கு வங்க ஆளுநராகவும் நியமனம் செய்யப்பட்டார்.
மணிப்பூர் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு ஆளுநராக இருந்து வரும் இல.கணேஷனுக்கு இரு தினங்களுக்கு முன்பு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவருக்கு இதயத்துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 எம்ஜிஆர் மருத்துவமனை அறிக்கை

எம்ஜிஆர் மருத்துவமனை அறிக்கை

இந்த நிலையில் அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இல.கணேசன் 2 நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இல.கணேசனின் உடல்நிலை சீராக உள்ளதால் அவர் 2 நாட்களில் வீடு திரும்புவார் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

English summary
West bengal governor ila ganesan admitted hospital due to ill health. M.G.M.hospital administration informed that Mr. Ganesan, who is undergoing treatment at the hospital, will return home in 2 days. According to the hospital administration, Mr. Ganesan's health is stable and he will return home in 2 days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X