விஜய் குறித்த கேள்வி! வாய்விட்டு சிரித்த செல்லூர் ராஜு! "சின்ன பிள்ளைங்க அவங்க!" இப்படி சொல்லிட்டாரே

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் ஆரம்பித்துள்ள நிலையில், விஜய் குறித்த கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பரபர பதிலை அளித்துள்ளார்.

நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தேசியளவில் பாஜகவுக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் போட்டி,

What ADMK Ex minister Sellur Raju says about Vijay politics in tamilnadu

அதிமுக தலைவர்கள் லோக்சபா தேர்தல் பணிகளை ஆரம்பித்துவிட்டன. இதற்கிடையே இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

விஜய் உடன் கூட்டணி? விஜய்யின் அரசியல் கட்சியுடன் எதிர்காலத்தில் திமுக, அதிமுக கூட கூட்டணி வைக்கும் நிலைமை ஏற்படும் என அவரது கட்சிக்காரர்கள் சொல்கிறார்களே என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு டக்கென சிரித்த செல்லூர் ராஜு, "ஏங்க.. அவங்க சின்னப் பிள்ளைங்க. அப்படி தான் பேசுவாங்க,.. பேசனு பேச்சிட்டு போகட்டும்.. 2026இல் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடக்க இன்னும் ரொம்ப காலம் இருக்கு.. 2026இல் களம் எப்படி இருக்குனு அப்போ தான் தெரியும். அதை அப்போது பார்ப்போம்" என்றார்.

அப்போது செய்தியாளர் ஒருவர், உங்களுக்கு விஜய் கட்சியைக் கண்டு பயம் இல்லையா? என்று கேட்க உடனே பொங்கிய செல்லூர் ராஜு, "எது பயமா.. அதுவும் எங்களுக்கா.. ஏங்க நீங்க வேற.. ஆனால் உண்மையில் விஜய் கட்சியைப் பார்த்து இங்கு ஒரு கட்சி பயப்பட்டுவிட்டுத் தான் இருக்கு. அது திமுக தான். விஜய் ரசிகர்கள் தான் பெரும்பாலும் திமுகவுக்கு வாக்களித்தவர்கள். இப்போது விஜய் கட்சியை ஆரம்பித்ததால் அவர் மீது கோபத்தில் இருக்கிறார்கள்.

எங்க ரூட் க்ளீயர்: ஆனால், இதனால் எங்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை.. சொல்லப்போனால், விஜய் அரசியலுக்கு வந்து கட்சியை ஆரம்பித்தால் அதிமுகவின ரூட் இன்னும் க்ளீயர் ஆகி இருக்கு என்று தான் சொல்ல வேண்டும்" என்று அவர் மளமளவென பேசினார்.

அண்ணமலை மீது தாக்கு: தொடர்ந்து அண்ணாமலை குறித்து பேசிய அவர், "அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி.. அவருக்கு அரசியலில் என்ன தெரியும்? தேர்தல் நடக்கட்டும்.. வாக்குப் பெட்டியை உடைத்த பிறகு அண்ணாமலை யார் என்பது தெரியும். அதன் பிறகு அண்ணாமலை தொடருவாரா இல்லையா என்பதை பார்க்கலாம். எந்தவொரு அரசியல் கட்சியாக இருந்தாலும் அது அனைத்து மதங்களையும் சமூகங்களை அரவணைத்துப் செல்ல வேண்டும், ஆனால் பாஜக அப்படி செய்யாமல் ஒரே ஒரு மதத்தை மட்டுமே முன்னிறுத்துகிறது.

மோடிக்குக் கூடியது தானாகச் சேர்ந்த கூட்டமா இல்லை அழைத்துவரப்பட்ட கூட்டமா என்பது தேர்தலில் தெரிந்துவிடும். அங்கே திரண்ட கூட்டத்தைப் பார்த்த மிதப்பில் அண்ணாமலை பேசி வருகிறார். தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் அவருக்கு நல்ல பதிலை அளிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைத் தரக்குறைவாகப் பேசியதை ஏற்கவே முடியாது.

அதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர் மீண்டும் அதேபோல பேசினால் தக்க பதிலடி தருவோம். அண்ணாமலைக்கு அரசியல் தகுதியே இல்லை. அவரது பேச்சு இதைத்தான் காட்டுகிறது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+