ஒரே நாளில் எடப்பாடிக்கு காத்திருக்கும் 2 சவால்கள்.. உள்ளே புகுந்த சசிகலா.. சமாளிப்பாரா ஈபிஎஸ்?
சென்னை : அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து சவால்கள் காத்திருக்கின்றன. வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி இரட்டை சவால்களை எதிர்கொள்கிறார் ஈபிஎஸ்.
ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டி, கட்சியைக் கைப்பற்றி இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்குகள் வரிசைகட்டி நிற்கின்றன.
சசிகலாவும் தற்போது கோதாவில் குதித்துள்ளார். அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சசிகலா மேல்முறையீடு செய்துள்ள வழக்கும் ஆகஸ்ட் 2ல் விசாரணைக்கு வர உள்ளது.

எடப்பாடி
எடப்பாடி பழனிசாமி தனக்கு குடைச்சல் கொடுத்து வந்த ஓ.பன்னீர்செல்வத்தை மொத்தமாக கட்டம் கட்டி கூண்டோடு தூக்கிவிட்டு, தனது ஆதரவாளர்களை எல்லா பொறுப்புகளுக்கும் நியமித்து வருகிறார். கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள ஈபிஎஸ்ஸுக்கு, கட்சி அலுவலகமும் கை மேல் கிடைத்துள்ளது. பொதுக்குழு தொடர்பான வழக்குகளில் ஈபிஎஸ்ஸுக்கு சாதகமான தீர்ப்புகள் வந்ததால் தான் இவை அனைத்தும் சாத்தியமாகியுள்ளது.

டெண்டர் முறைகேடு வழக்கு
ஆனால், இனி வரவிருக்கும் வழக்குகள் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர் வெற்றிகளைத் தராது என்கிறார்கள் எதிர் தரப்பினர். ரூ.4,800 கோடி நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் அளித்த உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ள வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இறங்கிய சசிகலா
இந்நிலையில், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக பதவி வகித்த என்னை கட்சியில் இருந்து நீக்கியது கட்சி விதிகளுக்கு எதிரானது. கீழ் நீதிமன்றம் முழுமையாக விசாரணை நடத்தவில்லை. எனது தரப்பு வாதங்களையும் முழுமையாக கேட்கவில்லை. எனது வழக்கை நிராகரித்தது தவறு. உரிமையியல் வழக்கை ஆரம்பநிலையிலேயே நிராகரிக்க முடியாது எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் சசிகலாமேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கும் ஆகஸ்ட் 2ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

பொதுச் செயலாளர்
அ.தி.மு.க பொதுச்செயலாளராக பதவி வகித்த ஜெயலலிதாவின் மரணத்துக்குப்பிறகு, அந்தப் பதவிக்கு சசிகலா தேர்வு செய்யப்பட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்ற நிலையில் நடந்த அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டனர்.
Recommended Video

ஆகஸ்ட் 2
அதனை எதிர்த்து சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த 4-வது சிவில் கோர்ட்டு நீதிபதி சசிகலாவை நீக்கியது செல்லும் என்று தீர்ப்பு அளித்தார். சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரித்து கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்துத்தான் சென்னை ஐகோர்ட்டில் சசிகலா மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கும் ஆகஸ்ட் 2ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

ஓபிஎஸ்ஸுக்கு துணையாக
சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்த கருத்து வெளிப்படும் போதெல்லாம், கட்சியின் மூத்த நிர்வாகிகள் பேசி எடுக்கும் முடிவை நான் ஏற்றுக்கொள்வேன் என்று தான் ஓ.பி.எஸ் கூறி வந்தார். சசிகலாவை கடுமையாக ஒரு வார்த்தையும் பேசவில்லை. ஈபிஎஸ் - ஓபிஎஸ் மோதல் விவகாரத்தில் சசிகலா எடப்பாடி பழனிசாமியையே கடுமையாக தாக்கி வருகிறார். இதன் மூலம் சசிகலா, ஓபிஎஸ் இருவரும் ஓரணியில் திரளும் சூழலும் உருவாகியுள்ளது.

ஒரே நாளில்
எடப்பாடி பழனிசாமியின் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை தொடர்பான வழக்கும், அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என சசிகலா தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கும் ஒரே நாளில் விசாரணைக்கு வரவிருக்கிறது. 2 நீதிமன்றங்களிலும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்குமா அல்லது ஈபிஎஸ் சிக்கிக் கொள்வாரா என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications