கவனிச்சீங்களா பிடிஆரை.. "அந்த" பேச்சையே எடுக்கலையே.. செம ஸ்மார்ட்.. நம்ம முதல்வர்தான் காரணம்
முதல்வர் ஸ்டாலினை பிடிஆர் புகழ்ந்து பாராட்டவே இல்லை
சென்னை: இன்று நடந்து முடிந்த பட்ஜெட் தாக்கல் எப்படி இருந்தது என்பது குறித்த விவாதங்கள் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும், 2 முக்கிய அம்சங்களை இன்றைய தினம் கவனிக்க முடிந்தது..
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. திருக்குறள் உடன் அவையை தொடக்கி வைத்தார் சபாநாயகர்.
தமிழகத்தின் 2022-23ம் நிதியாண்டுக்கான காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

2 விஷயங்கள்
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முழுமையாக தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் இதுவாகும். உரையாற்றி கொண்டே வந்த பிடிஆர் திடீரென ஆங்கிலத்தில் உரையை படித்தார். "இன்று இந்தியாவிலேயே முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது. இங்கு மாநிலத்தின் நிதிநிலை குறித்து சில குறிப்புகளை ஆங்கிலத்தில் உரையாற்றுகிறேன்.

சட்டசபை
இது தேசிய மற்றும் சர்வதேச பத்திரிக்கை மற்றும் முதலீட்டாளர்களிடம் சேரும் என்பதால் சில பத்திகளை மட்டும் ஆங்கிலத்தில் படிக்கிறேன்" என்று சொல்லி ஆங்கிலத்தில் பட்ஜெட்டை வாசித்தார்.. அப்போது அதன் தமிழாக்கம் சட்டசபையில் எம்எல்ஏக்களுக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த திரையில் வந்தது. இதில் அவர் மாநிலத்தின் நிதிநிலை குறித்து முக்கிய குறிப்புகளை குறிப்பிட்டார். கொரோனா பெருந்தொற்று, வரி வருமானம் குறைவு ஆகியவை குறித்தும் பிடிஆர் குறிப்பிட்டார்.

முக்கியத்துவம்
மாநிலத்தின் நிதி நிலை குறித்து ஆங்கிலத்தில் உரையாற்றினால், தேசிய மற்றும் உலகளாவிய பத்திரிகைகள், முதலீட்டாளர்கள் அனைவருக்கும் எளிமையாக போய் சேரும் என்ற காரணத்திற்காக சில பத்திகளை மட்டும் பிடிஆர் ஆங்கிலத்தில் வாசித்ததும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததுடன், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது.

ஸ்டாலின்
அதேபோல, பிடிஆர் இன்று பேரவையில் முதல்வரை புகழ்ந்து ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை.. வழக்கமாக எந்த ஆட்சியாக இருந்தாலும், பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிதியமைச்சர், முதல்வரை திருப்திப்படுத்தும் நோக்கில், மாண்புமிகு முதலமைச்சர் தலைமையின் கீழ் அல்லது மாண்புமிகு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க என்று சொல்லிவிட்டுதான் பட்ஜெட்டையே நிகழ்த்துவார்கள்.. சில சமயம், ஒவ்வொரு துறையை பற்றி படிக்கும்போதும், முதல்வர் பெயரை சொல்லிவிட்டே படிப்பது வழக்கம்.

முகஸ்துதி
ஆனால், பிடிஆரின் பட்ஜெட் தாக்கல் வித்தியாசமாக இருந்தது.. தேவையில்லாத முகஸ்துதி இன்றைய தினம் காணப்படவில்லை.. மொத்த பட்ஜெட்டையும், முதல்வர் பற்றின வார்த்தைகூட இல்லாமல் கடகடவென படித்து முடித்துவிட்டார்.. கடந்த வருடம் இதற்கு நேர்மாறாக சட்டசபை இருந்தது என்பதை மறுக்க முடியாது.. முதல்நாளே முதல்வரையும், உதயநிதியையும் திமுக தரப்பில் பாராட்ட ஆரம்பித்துவிட்டனர்.

எ.வ. வேலு
அதிலும் எ.வ வேலு பேசும்போது, "நம்ம முதல்வர் ஸ்டாலின் எப்ப தூங்குகிறார் என்றே தெரியவில்லை. அமைச்சர்களுக்கும் கூட தெரியவில்லை. இரவு 1 மணிக்கு, 3 மணிக்குலாம் முதல்வரிடமிருந்து போன் வருகிறது. அந்த அளவுக்கு முதல்வர் ஸ்டாலின் 24 மணி நேரமும் உழைக்கிறார்" என்றார்.. அதனால்தான் தன்னை புகழ வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
Recommended Video

கட்டளை
"உங்களின் உரைகளில் உங்களை ஆளாக்கிய, உங்களை உருவாக்கிய நமது முன்னோடிகளைக் குறிப்பிட்டுப் பேசுவது முறை. ஆனால், நேரத்தைக் கருத்தில்கொண்டு இதைக் கேள்வி நேரத்துக்கு முன் பயன்படுத்தக் கூடாது. ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இதுதான் எனது கட்டளை" என்று ஆர்டர் போட்ட பிறகுதான் இந்த பழக்கம் கைவிடப்பட்டுவிட்டது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் எப்படி இருக்க போகிறது என்று தெரியவில்லை என்றாலும், முதல்நாளே முதல்வரின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு இன்றைய பட்ஜெட் நகர்ந்துள்ளது பாராட்டத்தக்கது..!
-
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications