3 காரணங்கள்.. உதயநிதி ஸ்டாலினுக்கு ஸ்டாலின் துணை முதல்வர் பதவி தராதது ஏன்? இதுதான் பின்னணி
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஏன் துணை முதல்வர் பதவி கொடுக்கப்படவில்லை என்பதற்கான காரணங்கள் வெளியாகி உள்ளன.
முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் நிலையில், விரைவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வந்தன. இந்த நிலையில்தான் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்படவிருப்பதாக கூறப்படுவது வதந்தி என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஸ்டாலின் ஏன் துணை முதல்வர் பதவி கொடுக்கவில்லை என்பதற்கான 3 காரணங்கள் வெளியாகி உள்ளன.
காரணம் 1 - லோக்சபா தேர்தலுக்கு முன் கொடுத்தால் தேர்தல் நேரத்தில் அது பெரிய பிரச்சனை ஆகும். முக்கியமாக பாஜகவிற்கு அவல் கொடுத்தது போல ஆகிவிடும். அதிலும் சனாதன விவகாரத்தில் ஏற்கனவே பாஜக உதயநிதி மீது கோபத்தில் உள்ளது.
காரணம் 2 - திமுகவில் பொதுவாக ஒரு வழக்கம் உண்டு. மேல் பதவிக்கு வர வாரிசாக இருந்தாலும் ஒரு டாஸ்க் கொடுக்கப்படும். அந்த வகையில் உதயநிதிக்கு லோக்சபா தேர்தலில் வெல்ல வாய்ப்பும் டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளதாம். அதை நிறைவேற்றினால் பதவி கிடைக்கும் என்கிறார்கள்.
காரணம் 3 - அமைச்சர்கள் மீதான வழக்குகள் பிப்ரவரி மாதம் வரும் அப்போது பல விமர்சனங்கள் வைக்கப்படும். அதோடு இந்த விமர்சனமும் வைக்கப்பட வேண்டாம் என்பதால் இப்போதைக்கு உதயநிதியை துணை முதல்வருக்கும் முடிவை எடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர்.
உதயநிதி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: சமீபத்தில் பிறந்தநாளை கொண்டாடிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், துணை முதல்வர் பொறுப்பு குறித்து அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ''நான் எப்படி அதைச் சொல்ல முடியும் ? முதல்வர்தான் முடிவு எடுப்பார் '' என்று கூறினார் உதயநிதி ஸ்டாலின். இதே போன்ற கேள்வி இதற்கு முன்பும் பல முறை அவரிடம் கேட்கப்பட்டிருக்கிறது.
அப்போதெல்லாம், எனக்கே தெரியாத விசயங்கள் எல்லாம் உங்களுக்குத் தெரிகிறது. இதையெல்லாம் உங்களுக்கு யார் சொல்கிறார்கள்.. எனக்கு அப்படி எதுவும் தகவல் வரவில்லையே.. உங்களுக்கு யார் இது போன்ற தகவல்கள் வருகின்றன.. எனக்கு அப்படி தெரியவில்லையே ? '' என்கிற ரீதியில் மறுத்தே வந்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
துணை முதல்வர் : ஆனால், இந்த முறை அப்படி எதுவும் மறுக்காமல், அதை எல்லாம் முதல்வர் முடிவெடுப்பார் என்று சொல்லி உள்ளார். அதாவது துணை முதல்வர் பற்றி முதல்வர் முடிவு எடுக்கட்டும் என்று உதயநிதி சொல்லாமல் சொல்லி இருக்கிறார். இப்படி சொல்லியிருப்பதன் மூலம், துணை முதல்வராக்க ஸ்டாலின் முடிவு செய்து விட்டார். அதனை எப்போது அறிவிக்க வேண்டும் என்பது மட்டும் தான் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று இளைஞரணி மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.
முக்கியமாக பிறந்தநாள் விழாவில் உதயநிதி ஸ்டாலினுக்கு நிர்வாகிகள் கொடுத்த முக்கியத்துவம் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. கடந்த பிறந்த நாளை விட இந்த பிறந்த நாளில் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு பின்பும் உதயநிதி ஸ்டாலினின் துணை முதல்வர் பதவி திட்டங்கள் இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
பதவி: இதை மனதில் வைத்தே டிசம்பரில் இளைஞர் மாநாடு வைத்தார்கள். ஜனவரியில் அவர் பொறுப்பு ஏற்பதாக இருந்தது. அங்கே அவருக்கு பொறுப்பு அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் இந்த மாநாடு மழையால் தள்ளிப் போய்விட்டது. இதனால் அப்போது அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில்தான் இந்த மாத இறுதியில் முதல்வர் ஸ்டாலின் விரைவில் வெளிநாடு பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜன.28ஆம் தேதி ஸ்பெயின் நாட்டுக்கு செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்பெயினை தொடர்ந்து ஆஸ்திரேலியா, அமெரிக்காவுக்கு செல்கிறார்; 600க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட உள்ளன. தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.
முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் நிலையில், விரைவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வந்தன. இந்த நிலையில்தான் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்படவிருப்பதாக கூறப்படுவது வதந்தி என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications