எடப்பாடி வீசிய 6 சரவெடிகள்.. ஒரே பாயிண்டில் பதிலடி தந்த ஓபிஎஸ்.. கோர்டில் நடந்தது என்ன? பின்னணி!
சென்னை: அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் இன்று எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு தரப்பும் மிக முக்கியமான வாதங்களை வைத்தனர்.
இந்த வழக்கில் இன்று இரண்டு தரப்பிற்கும் தலா ஒரு மணி நேரம் மட்டுமே வாதம் செய்ய கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி இரண்டரை மணி நேரம் வாதம் செய்தார். ஓ பன்னீர்செல்வம் 1 மணி நேரம் 45 நிமிடம் வாதம் செய்தார்.
அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் இன்று உயர் நீதிமன்ற விசாரணை நிறைவு பெற்றது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் வழக்கை விசாரணை செய்து தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

எடப்பாடி வாதம்
இன்று வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பு 5 முக்கியமான வாதங்களை வைத்தது.
வாதம் 1 - அதிமுகவில் ஒற்றை தலைமை கொண்டு வர வேண்டும் என பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் விரும்பியதால் தான், ஜூலை 11- ல் பொதுக்குழு கூட்டப்பட்டது. இதில் கட்சி விதிகள் ஏதும் மீறப்படவில்லை
வாதம் 2 - கட்சி விவகாரங்களில் தலையிடும் விதமாக தனி நீதிபதி தீர்ப்பளித்துள்ளதால், அதை ரத்து செய்ய வேண்டும்.

என்ன சொன்னார்
வாதம் 3 - ஒன்றரை கோடி உறுப்பினர்களின் எண்ணத்தை 2 ஆயிரத்து 500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தார்களா என தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளது யூகத்தின் அடிப்படையிலானது. அதிகாரம் பெற்றவர் பொதுக்குழுவை கூட்டவில்லை என தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளது தவறானது.
வாதம் 4- கட்சியில் ஒற்றை தலைமை கொண்டு வர வேண்டுமென 2 ஆயிரத்து 539 பொதுக்குழு உறுப்பினர்களும் ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டுள்ளனர். இதில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது நிரூபணம் ஆகியுள்ளது. பொதுக்குழுவிற்கே அதிகாரம் உள்ளது. தொண்டர்களுக்கு அதிகாரம் இல்லை. மனுதாரர்கள் தரப்பில் கோரப்படாத நிவாரணம் வழங்கியது அசாதாரணமானது.

முக்கிய வாதம்
வாதம் 5 - கட்சி விவகாரங்களை பொறுத்தவரை பொதுக்குழு முடிவே இறுதியானது. இதை ஏற்றுக் கொள்பவர்களே அடிப்படை உறுப்பினர்களாக இருக்க முடியும். பொதுக்குழு முடிவை எதிர்ப்பவர்கள் அடிப்படை உறுப்பினர்களாக இருக்க முடியாது.
வாதம் 6 - பொதுக்குழு நோட்டீஸ் கொடுக்கப்படவில்லை என எந்த பொதுக்குழு உறுப்பினரும் புகார் தெரிவிக்கவில்லை. பொதுக்குழுவிற்கு கட்டாயம் நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்று எந்த விதியும் சொல்லவில்லை.

ஓபிஎஸ் பதிலடி
இந்த வாதங்கள் அனைத்திற்கும் ஓபிஎஸ் ஒரே முக்கியமான வாதத்தின் மூலம் பதிலடி கொடுத்தார். நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்பது பொதுக்குழு விதி. பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே கூட்ட முடியும். அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கிய போதே தொண்டர்களுக்குத்தான் அதிக பவர் கொடுத்தார். தொண்டர்கள் தலைவர்களை தேர்வு செய்யும் ஒரே கட்சி அதிமுகதான். ஜெயலலிதா தொண்டர்கள் மூலம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. ஒருங்கிணைபாளர், இணை ஒருங்கிணைப்பாளரும் போட்டியின்றி தொண்டர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.பொதுக்குழுவை விட தொண்டர்களுக்கே அதிமுகவில் அதிக பலம் இருக்கிறது, என்று ஓ பன்னீர்செல்வம் பதில் வாதம் வைத்து இருக்கிறார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications