தமிழக பட்ஜெட்.. கல்லூரி சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ 1000.. யாரெல்லாம் தகுதியானவர்கள்?
சென்னை: உயர்கல்வி படிக்கும் மாணவிகள் இடைநிற்றலை தடுக்க கல்லூரியில் அவர்கள் சேரும் முதல் படிப்பு முடியும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2022- 2023 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
திமுக அரசு பொறுப்பேற்று முதல் முழு பட்ஜெட் இதுவாகும். இதனால் இந்த பட்ஜெட் மீது எதிர்பார்ப்புகள் இருந்தன. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர் கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருக்கிறது.

மூவலூர் ராமாமிர்தம் திட்டம்
இதை கருத்தில் கொண்டு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதி திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது. இதன் மூலம் பெண்கள் உயர்கல்வி இடைநிற்றலை தடுக்க கல்லூரிகளில் சேர்ந்து அவர்கள் படிப்பு முடியும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

என்ன தகுதி
அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வகையில் மாதம் ரூ 1000 அவர்களுடைய வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்.

1000 ரூபாய் யாருக்கு கிடைக்கும்
இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித் தொகை பெற்று வந்தாலும் இந்த திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம். இந்த திட்டத்தின் மூலம் சுமார் 6 லட்சம் மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் பயன் பெறுவார்கள். இதற்காக வரவு செலவு திட்டத்தில் ரூ 698 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பெண் கல்வி கட்டணம்
இதன் மூலம் பெண்கள் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் பாதியிலேயே படிப்பை விடும் நிலை மாறும். அரசின் இந்த திட்டத்தின் மூலம் ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த பெண்கள் அனைவருமே இளநிலை பட்டப்படிப்பையாவது படித்திருப்பர். இவர்கள் படிப்பதற்காக பெற்றோர் கடன் வாங்கும் சூழல் குறைய வாய்ப்பிருக்கிறது.
-
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications