3 "தலைகள்".. எடப்பாடி பழனிசாமிக்கு எகிறும் பி.பி.. குறுக்கே நுழையும் "சாமி".. நாள் குறிச்சாச்சாமே..!
எடப்பாடி பழனிசாமியை 3 பிரச்சனைகள் சூழ்ந்து வருகின்றன
சென்னை: அதிமுகவில் நாளுக்கு நாள் உட்கட்சி பூசல் வெடித்து வருகிறது.. ஒருபக்கம் ஓபிஎஸ், மறுபக்கம் சசிகலா என இரு பக்க குடைச்சல், சிக்கலில் எடப்பாடி பழனிசாமி தவித்து வரும் நிலையில், அடுத்தடுத்த சிக்கல்கள் அவருக்கு பெருகி வருவதாக தெரிகிறது.
சசிகலாவை பொறுத்தவரை பொறுமையாக காய் நகர்த்தி வருகிறார்.. அதேசமயம் எடப்பாடி பழனிசாமியை சமாதானப்படுத்தும் முயற்சியையும் கைவிடவில்லை.
ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை எந்த கவலையும் இல்லை, எந்நேரம் வேண்டுமானாலும் தன் பக்கம் வரக்கூடும் என்று அதிகமாகவே சசிகலா நம்புகிறார் என்றாலும், எடப்பாடி ஆதரவுதான் அவருக்கு மிக முக்கியமான விஷயமாக தெரிகிறது.. எனவே தூது படலமும் விடாமல் நடக்கிறது.

திக் திக் சந்திப்புகள்
ஆனால், எடப்பாடியை பொறுத்தவரை, சசிகலா விஷயத்தில் இந்த நிமிடம் வரை கறாராக இருக்கிறார்.. எக்காரணம் கொண்டும் கட்சிக்குள் சேர்த்து கொள்ளக்கூடாது என்ற உறுதியும் உள்ளது.. ஓபிஎஸ் பற்றி எடப்பாடிக்கு தெரிந்தும்கூட, அதையும் சமாளிக்கும் யுக்தியில் இறங்கி வருகிறார்.. எனினும் போதுமான பலன் அவருக்கு தெரியவில்லை என்றே தெரிகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான் 2 விஷயங்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.. இத்தனை நாள் ஓபிஎஸ், சசிகலா என 2 பேரை சமாளித்து கொண்டிருந்த எடப்பாடிக்கு, 3வதாக ஒரு சிக்கல் கேபி முனுசாமி மூலம் எழுந்துள்ளதாக தெரிகிறது.

கேபி முனுசாமி
சசிகலா விஷயத்தில் கேபி முனுசாமிக்கும் ஆரம்பத்தில் இருந்தே உடன்பாடு இல்லை என்றாலும், இப்போது எடப்பாடியுடனும் லேசான அதிருப்தி இருப்பதாக கூறப்படுகிறது.. அதற்கு காரணமாக சமீபத்தில் அவர் நடத்திய தனிநபர் உண்ணாவிரத போராட்டத்தையும் உதாரணமாக கூறுகிறார்கள்.. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமி, திடீரென சூளகிரியில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்..

கல்வெட்டு ஆதாரங்கள்
விவசாயிகளை காப்பாற்றுவற்காக இந்த உண்ணாவிரதம் மேற்கொள்வதாக சொல்லப்பட்டாலும், இதுவெல்லாம் ஒரு நாடகம் என்றே கட்சிக்குள் முணுமுணுக்கிறார்கள்.. காரணம், கடந்த 2018ம் ஆண்டு, இந்த திட்டத்தை தொடங்கி வைத்ததே அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்.. அதற்கான கல்வெட்டு ஆதாரங்களும் உள்ளன.. ஆனால், இப்போது திமுக ஆட்சியில், விவசாயிகளுக்கு எதிராக அந்த திட்டம் கொண்டு வரப்படுவதாக, தவறான கருத்தை பரப்பி வருகிறார்கள்.

புகையும் நெருப்பு
அப்படியானால், கெலமங்கலம் பகுதியில் சாலை விரிவாக்கத்திற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தியது யார் என்ற கேள்வி எழுகிறது.. அதனால், முனுசாமி எதற்காக இப்படி ஒரு நாடகம் போடுகிறார் என்று தெரியவில்லை என்கிறார்கள். எனினும், எடப்பாடி கொண்டு வந்த திட்டத்துக்கு எதிராக இவர்ஏன் களமிறங்க வேண்டும்? தனக்கான ஆதரவை பெருக்க நினைக்கிறாரா? ஓபிஎஸ், இபிஎஸ் இருவருமே கட்சியை கட்டுக்கோப்பில் வைக்காத நிலையில், தலைமைப்பொறுப்பை ஏற்க, முனுசாமி கடிவாளம் போடுகிறாரா? என்ற சந்தேகங்களையும் அதிமுகவுக்குள்ளேயே புகைந்து வருகிறது..

எடப்பாடிக்கு சிக்கல்
இது எடப்பாடிக்கு தேவையில்லாத குடைச்சலையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகிறதாம்.. மற்றொருபக்கம், ஓபிஎஸ்ஸின் 2வது மகன் சசிகலாவை சந்தித்து பேசிய விஷயமும் எடப்பாடி காதில் எட்டிவிட்டதால், அந்த கடுப்பிலும் அவர் இருக்கிறாராம்.. இதற்கு நடுவில், போயஸ் கார்டன் வீட்டுக்கு சசிகலா விரைவில் குடிபோக போகிறாராம்..

நாள் குறிச்சாச்சு
அதாவது, அதிமுக பொதுச் செயலாளர் வழக்கின் தீர்ப்பு, வரும் 8ம் தேதி வெளியாக உள்ளது.. இந்த தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரப்போகிறது என்று தெரியவில்லை.. இருவருமே தங்களுக்கு சாதகமாக வரும் என்றே நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.. அந்த தீர்ப்பு வெளியானதுமே, போயஸ் கார்டனில் தயாராக கட்டி முடிக்கப்பட்டுள்ள புது வீட்டிற்கு செல்ல போகிறாம்.. குறிப்பாக, ஏப்ரல் 14-ம்தேதி சசிகலா அங்கு செல்லக்கூடும் என தெரிகிறது..

3 நெருக்கடிகள்
இந்த வீடு தொடர்பாகவும், சசிகலாவுக்கு ஏற்கனவே குடைச்சல் தந்த நிலையில், அதிலும் அதிமுக மேலிடத்துக்கு தோல்வியே சேர்ந்துள்ளது.. ஆக, ஒருபக்கம் ஓபிஎஸ், இன்னொருபக்கம் சசிகலா, இதற்கு நடுவில் முனுசாமி என 3 பக்க நெருக்கடிக்கும் ஆளாகி உள்ளாராம் எடப்பாடி பழனிசாமி.. எப்படி மற்ற பிரச்சனைகளில் இருந்து மீண்டு, தன் ஆளுமையை நிரூபித்தாரோ, அதுபோலவே இவைகளில் இருந்தும் மீண்டு வெளியே வருவார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.. பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications