தங்கம் வாங்க போறீங்களா.. இந்த 6 விஷயத்தை மறக்காதீங்க.. பலரும் சொதப்புவது 5ஆவது பாயிண்டில் தான்!
சென்னை: ஆபத்தான காலங்களில் தங்கம் உதவுவது போல நமக்கு வேறு எதுவுமே உதவாது என்பார்கள். இதன் காரணமாகவே பொதுமக்கள் தங்கம் வாங்குவது தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதேநேரம் தங்கம் வாங்கும் போது சில முக்கிய விஷயங்களைக் கருத்தில் கொள்ளுங்கள். உங்கள் முதலீடு சரியாக இருப்பதை உறுதி செய்ய இந்த 6 மேட்டரை மறக்காமல் ஃபாலோ செய்யுங்கள்.
தங்கம் வாங்கும் போது பெரும்பாலானோர் எந்தவொரு விஷயத்தையும் கவனிப்பதில்லை. நேரடியாக ஒரு கடைக்குச் சென்று தங்கத்தை வாங்கிவிடுகிறார்கள். ஆனால், உண்மையில் தங்கம் வாங்கும் முன்பு சில விஷயங்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவை குறித்து நாம் இதில் பார்க்கலாம்.

ஹால்மார்க் முக்கியம்: முதலில் ஹால்மார்க் செய்யப்பட்ட தங்கத்தை மட்டுமே வாங்க வேண்டும்.. இப்போது நமது நாட்டில் விற்கப்படும் கிட்டதட்ட அனைத்து தங்கங்களும் ஹால்மார்க் செய்யப்பட்டவை தான். இது உங்கள் தங்கத்தின் தரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இந்தியாவில் 2000 ஆம் ஆண்டில் ஹால்மார்க் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இது தங்கத்தின் தரத்தை உறுதி செய்ய உதவுகிறது. சில சிறிய கடைகளில் விலை குறைவாகக் கிடைக்கிறது என்று ஹால்மார்க் இல்லாத தங்கத்தை வாங்கக் கூடாது. அதன் தரம் அல்லது ப்யூரிட்டியில் சிக்கல் இருக்கலாம்.
மேலும், ஹால்மார்க் செய்யப்பட்ட தங்கத்தைக் கண்டறிவதும் ரொம்பவே ஈஸி.. ஹால்மார்க் செய்யப்பட்ட தங்கத்தில் HUID எனப்படும் ஹால்மார்க் யூனிக் ஐடென்டிஃபிகேஷன் குறி இருக்கும்.. இது ஒரு ஆறு எழுத்து குறியீடாகும். இந்த எண்ணை நீங்கள் BIS கேர் செயலியில் பதிவிடுவதன் மூலம் தங்கத்தின் தரத்தை உறுதி செய்ய முடியும்.
கூகுள்பே, போன்பே-ல் தப்பான நம்பருக்கு பணம் அனுப்பிட்டீங்களா..டென்ஷன் வேண்டாம்..இதை மட்டும் செய்யுங்க
டிஜிட்டல் கோல்ட்: தங்கத்தைக் கடைகளில் சென்று மட்டுமே வாங்க வேண்டும் என்று இல்லை. நீங்கள் டிஜிட்டல் கோல்ட் முறையிலும் தங்கத்தை வாங்கலாம்.. அல்லது இடிஎஃப்கள், மியூச்சுவல் பண்டுகள், தங்கப் பத்திரங்கள் மூலமாகவும் தங்கத்தை வாங்கலாம்.. இவை அனைத்திலும் சில பிளஸ்கள் உள்ளன. சில மைனஸ்களும் உள்ளன. எனவே, எல்லாம் பார்த்து உங்களுக்கு எந்த தங்கம் எது சிறந்ததோ அந்த முறையில் நீங்கள் தங்கத்தை வாங்கலாம்.
நகையும் முக்கியம்: அதேநேரம் குறிப்பிட்ட அளவு தங்கத்தை நகை வாங்கி வையுங்கள். ஏனென்றால் எதாவது எமெர்ஜென்சி என்றால் தங்க நகைகளுக்கு மட்டுமே கடன் கிடைக்கும். டிஜிட்டல் அல்லது இடிஎஃப் மூலம் வாங்கும் தங்கத்தை விற்க மட்டுமே முடியும். அதுவும் கூட விடுமுறை நாட்களில் விற்க முடியாது உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் இருப்பதால் குறைந்தபட்ச அளவு தங்கத்தை நகைகளாக வாங்கி வைக்க வேண்டும். அதேநேரம் ஓவராகவும் வாங்கி வைக்காதீர்கள். ஏனென்றால் அதைப் பாதுகாப்பதே சிரமம்.
பில்: அடுத்து முக்கியமாக நகை வாங்கும் போது தவறாமல் பில் வாங்குங்கள். தங்கத்தின் மீதான ஜிஎஸ்டி வெறும் 3%.. அதைக் கட்ட மனமில்லாமல் பில் இல்லாமல் வாங்காதீர்கள். ஏனென்றால் வரியைச் செலுத்தி, பில் பெறுவதன் மூலம், நீங்கள் தங்கம் வாங்கியதை சட்டப்பூர்வமாக உறுதிசெய்கிறீர்கள். இது உங்கள் தங்கத்தின் தரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. மேலும், தங்கம் தொலைந்துபோவது உள்ளிட்ட நேரங்களில் காப்பீடு பெறுவதற்கு இந்த பில் ரொம்பவே முக்கியமாகும்.
ரொம்பவே அடிப்படை: இது ரொம்பவே அடிப்படை. ஆனால் பலரும் செய்ய மாட்டார்கள். அதாவது தங்கம் என்பது உலகெங்கும் ஒரே விலை தான். அதாவது நீங்க எங்குச் சென்றாலும் தங்கத்திற்கு ஒரே விலை தான். தங்க நகைக் கடைகளின் லாபம் என்பது செய்கூலி, சேதாரத்தில் தான் உள்ளது. எனவே, தங்கத்தை வாங்கும் முன்பு ஒரு 4, 5 கடைகளுக்குச் சென்று விசாரியுங்கள். எங்கே செய்கூலி குறைவு என்பதைக் கண்டறியுங்கள்.
அதேநேரம் ஒரு கடையில் செயினுக்கு செய்கூலி குறைவு என்றால் அதற்காக அனைத்து வகையான நகைகளுக்கும் அங்கே செய்கூலி குறைவாக இருக்கும் எனச் சொல்ல முடியாது. கம்மலுக்கு ஒரு கடையில் குறைவாக இருக்கலாம்.. ஒட்டியாணத்திற்கு மற்றொரு கடையில் குறைவாக இருக்கலாம். எனவே, அதை விசாரித்து வாங்குங்கள்.
தங்கக் காயின்: மேலும், சேமிப்பிற்காக மட்டுமே தங்கத்தை வாங்குகிறேன் என்றால் தங்கத்தை காயினாக வாங்குவது குறித்தும் நீங்கள் பரிசீலனை செய்யலாம். பல கடைகளில் தங்கத்தை காயின்களுக்கு செய்கூலி சேதாரம் இருக்காது. அதேநேரம், தங்கக் காயினுக்கு வங்கிகளில் கடன் வாங்குவதில் சில கட்டுப்பாடுகள் உள்ளன. எனவே, அதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
-
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications