திரும்பிய சபரிமலை பக்தர்கள்.. தமிழ்நாட்டிலும் வேகம் எடுத்த கொரோனா.. இந்த அறிகுறிகள் ரொம்ப முக்கியம்
சென்னை: கேரளாவில் பரவும் கொரோனா.. ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டிலும் வரும் நாட்களில் பரவும் வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.
கேரளாவில் கொரோனா கேஸ்களில் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கேரளாவில் தற்போது 1,324 பேர் கோவிட் பாசிட்டிவ் நோயாளிகள் உள்ளனர். இது நாட்டிலேயே அதிக விகிதமாகும். தினசரி 700 முதல் 1,000 கோவிட் சோதனைகள் நடத்தப்படுவதால், இந்தியாவிலேயே அதிக சோதனை விகிதத்தையும் கேரளா மாநிலம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், கடந்த இரண்டு நாட்களில் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் இரண்டு கோவிட் -19 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதைத் தொடர்ந்து கண்ணூர் மாவட்டம் பானூரில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அதிலும் அங்கே கோவிட்-19 வேரியண்ட் JN அங்கே கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சனிக்கிழமையன்று வேரியண்ட் JN வகை வைரஸ் மூலம் ஒருவர் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது . திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 79 வயதான பெண்ணுக்கு இன்ஃப்ளூயன்ஸா லைக் நோயின் (ஐஎல்ஐ) லேசான அறிகுறிகள் இருந்தன, பின்னர் அவரிடம் செய்யப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா இருந்தது.. அது கொரோனாவின் கிளை வகையான ஜேஎன் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.;
சபரிமலை: கேரளாவில் சபரிமலை சீசன் உச்சத்தில் உள்ளது . இதனால் கேரளாவில் பரவும் கொரோனா.. ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டிலும் வரும் நாட்களில் பரவும் வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 48 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்; நேற்று 309 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
அதிகபட்சமாக சென்னை 18, கோவை 7, திருவாரூர், திருவள்ளூர் தலா 4, குமரியில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று தமிழ்நாடு மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.
அறிகுறிகள் என்னென்ன?: தற்போது ஏற்படும் கொரோனா காரணமாக அதிக எண்ணிக்கையில் யாரும் மரணம் அடையவில்லை. தற்போது மிகவும் லேசான கொரோனாவே மக்களுக்கு ஏற்பட்டு வருகிறது. முக்கியமாக கடுமையான உடல் வலிதான் இதன் முக்கியமான அறிகுறி ஆகும். வயதானவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுத்துவதாகவும், பலருக்கும் மூச்சு விடுவதில் கூட சிரமம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
அதாவது சளி கடுமையாக இதயத்தை நெருக்கி உள்ளதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் யாருக்கும் ஆக்சிஜன் லெவல் குறையவில்லை. அதேபோல் யாருக்கும் செயற்கை சுவாசம் அளிக்கும் அளவிற்கு நிலை ஏற்படவில்லை.
கவனிக்க வேண்டிய அறிகுறிகள்: இதற்கான அறிகுறிகள் பின்வருமாறு, சளி, இருமல், அதிக காய்ச்சல், உடல்வலி, தலைவலி, தும்மல், மூக்கு அடைப்பு , தொண்டை புண், கண்களில் நீர் வடிதல், மூக்கிலிருந்து தொண்டைக்குள் சளி செல்லுதல் ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகளாகும்.
சமீபத்தில் நாடு முழுக்க ப்ளூ காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இந்தியாவில் இருக்கும் மக்கள் இடையே திடீரென ப்ளூ காய்ச்சல் ஒன்று பரவிக்கொண்டு இருக்கிறது. இது Influenza A subtype H3N2 வைரஸ் என்று இந்திய மருத்துவ கழகம் தெரிவித்து உள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் மக்கள் இந்த காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனுடைய அறிகுறிகளும் இதுவே ஆகும்.
இதனால் எது என்ற குழப்பம் வராமல் இருக்க உடனே கொரோனா டெஸ்ட் எடுப்பதே சரியானதாக இருக்கும். உங்கள் உறவினர்கள் சபரிமலை போய்விட்டு வந்திருந்தால் டெஸ்ட் எடுப்பது சரியான முடிவாக இருக்கும்.












Click it and Unblock the Notifications