சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கேஸை முடிச்சு விடணும்".. இதான் அடுத்த பிளான்! புட்டு புட்டு வைத்த TTF வாசன்! நோட்டமிடும் போலீஸ்

Google Oneindia Tamil News

சென்னை: டிடிஎப் வாசன் மீது இரண்டு வழக்குகள் உள்ள நிலையில் தன்னுடைய அடுத்த திட்டம் என்ன என்று இவர் வீடியோ வெளியிட்டு உள்ளார்.

சமீபத்தில் யூ டியூப் பிரபலம் ஜிபி முத்துவுடன் டிடிஎப் வாசன் பைக்கில் வேகமாக சென்றார். 140 கிமீ வேகத்தை தாண்டி பைக் ஓட்டினார்.

அதோடு இல்லாமல் ஜிபி முத்து இதில் ஹெல்மெட் அணியவில்லை. மேலும் வாசன் இதில் இடை இடையே கையை விட்டும் ஊட்டினார். இதை பார்த்த சிலர் வாசன் மீது போலீசில் புகார் வைத்தனர்.

இவர் சாலையில் நடுவில் உள்ள மிட் லைனை தாண்டி வேகமாக ஓட்டி சென்றார். இது பெரிய அளவில் சர்ச்சையானது.

வேகமா போனது தப்புத்தான்.. இனி அப்படி செய்ய மாட்டேன்.. கைதுக்கு பின் டிடிஎப் வாசன் மனமாற்றம் வேகமா போனது தப்புத்தான்.. இனி அப்படி செய்ய மாட்டேன்.. கைதுக்கு பின் டிடிஎப் வாசன் மனமாற்றம்

 வீடியோ

வீடியோ

இந்த வீடியோ சர்ச்சையான நிலையில், போத்தனூர் காவல்நிலையம், சூலூர் காவல்நிலையம் ஆகிய இடங்களில் இவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. இதில் போத்தனூர் போலீசார் வழக்கில் அவரை கைது செய்ய போலீஸ் முயன்றது. ஆனால் அதற்கு முன் அவர் ஜாமீன் பெற்றார். மதுரைக்கரை நீதிமன்றத்தில் சரண் அடைந்த வாசன், காலையில் இருந்து மாலை வரை கூண்டில் அமர வைக்கப்பட்டார். ஆனால் சூலூர் போலீசார் வழக்கில் வாசன் ஜாமீன் பெறவில்லை. இதையடுத்து அவரை கைது செய்யும் திட்டத்தில் போலீஸ் இருந்தது.

பெங்களூர்

பெங்களூர்

இதற்கு இடையில் அவர் பெங்களூருக்கு செல்ல முயன்றார். ஆனால் அவரை செக் போஸ்டிலேயே சூலூர் போலீசார் பிடித்தனர். இதையடுத்து அவரை உடனே போலீசார் கைது செய்து சூலூர் காவல் நிலையம் அழைத்து சென்றனர். ஏற்கனவே நீதிமன்றம் இவருக்கு ஜாமீன் கொடுத்துள்ளது. இதனால் அதே பிரிவுகளில் மீண்டும் நடவடிக்கை எடுப்பது சிக்கல் என்பதால் போலீசார், அவருக்கு ஜாமீன் கொடுத்து உடனே விடுதலை செய்தனர். அவரை கைது செய்து 10 நிமிடங்களில் விடுதலை செய்தனர். ஊரை விட்டு எங்கும் செல்ல கூடாது என்றும் எச்சரித்தனர்.

கண்காணிப்பு

கண்காணிப்பு

அவர் ஊரை விட்டு எங்கும் செல்லாதபடி போலீசார் தற்போது அவரை கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில்தான் தற்போது வழக்கை வேகமாக முடிக்க வேண்டும் என்று டிடிஎப் வாசன் தெரிவித்துள்ளார். வீடியோ வெளியிட்டுள்ள அவர், இந்த வழக்கை வேகமாக முடிக்க வேண்டும். அக்டோபர் மாதத்திலேயே லடாக் செல்ல வேண்டும். லடாக் இந்த மாதத்தில் அழகாக இருக்கும். அதனால் அங்கே செல்ல வேண்டும்.

நவம்பர்

நவம்பர்

நவம்பர், டிசம்பர் மாதம் வந்தால் பனி அதிகமாக இருக்கும். இதனால் மக்கள் அங்கே செல்ல முடியாது. மிகவும் குளிராக இருக்கும். ஆனால் இந்த மாதத்தில் பனி இருந்தாலும் செல்ல முடியும். இந்த பயணம் சுவாரசியமாக இருக்கும். அதனால் உடனே வழக்கை முடித்துக்கொண்டு இங்கிருந்து கிளம்பலாம் என்று பார்க்கிறேன், என்று குறிப்பிட்டு உள்ளார்.

English summary
What are the two plans by the TTF Vasan as he as two cases already?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X