நாட்டிலேயே பணக்கார நகரம் மும்பைதான்! அடுத்த இடங்களில் பெரிய சர்ப்ரைஸ்! சென்னையை காலி செய்த பெங்களூர்
சென்னை: உலகில் இப்போது வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. அப்படிப்பட்ட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அதிகம் பங்காற்றும் டாப் 10 பணக்கார நகரங்கள் குறித்து நாம் பார்க்கலாம். இந்த நகரங்கள் தொழில், வர்த்தகம், கல்வி, தொழில்நுட்பம் எனப் பல்வேறு துறைகளில் இந்தியாவின் முதுகெலும்பாக விளங்குகின்றன.
சர்வதேச அளவில் மிக வேகமாக வளரும் ஒரு நாடாக இந்தியா இருக்கிறது. தகவல் தொழில்நுட்பம், சயின்ஸ், மருத்துவம் என பல்வேறு துறைகளிலும் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. அப்படி வேகமாக வளரும் இந்தியப் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிக்கும் டாப் 10 நகரங்கள் குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

மும்பை
இதில் முதலிடத்தில் இந்தியாவின் பணக்கார நகரமான மும்பை இருக்கிறது. சுமார் 310 பில்லியன் டாலர் பொருளாதாரத்தை மும்பை கொண்டுள்ளது. இந்தியாவின் நுழைவாயிலாகக் கருதப்படும் மும்பை வணிகம், சினிமா உள்ளிட்ட துறைகளில் டாப் இடத்தில் இருக்கிறது. கப்பல் வர்த்தகத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. 603.4 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட மும்பையில் சுமார் 12.6 மில்லியன் மக்கள் வசித்து வருகிறார்கள். அங்குத் தனிநபர் ஆண்டு வருமானம் ₹4.13 லட்சமாக உள்ள நிலையில், நாட்டிலேயே மிக விலையுயர்ந்த ரியல் எஸ்டேட் மார்கெட்டாகவும் மும்பை உள்ளது.
டெல்லி
இந்தியாவின் தலைநகரான டெல்லி, 293.6 பில்லியன் டாலர் பொருளாதாரத்துடன் இதில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. உற்பத்தி மற்றும் வர்த்தகத்தின் முக்கிய மையமாக விளங்கும் டெல்லியின் பரப்பளவு 1483 சதுர கி.மீ ஆகும். இங்கு மொத்தம் 10.9 மில்லியன் மக்கள் வசிக்கும் சூழலில், தனிநபர் ஆண்டு வருமானம் ₹4.61 லட்சமாக உள்ளது. வங்கி, உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஆன்லைன் வர்த்தகம் ஆகியவை முக்கிய பிஸ்னஸ்களாக உள்ளன. உலகின் 13வது பெரிய மெட்ரோ ரயில் நெட்வொர்க்கையும் டெல்லி கொண்டுள்ளது.
கொல்கத்தா
150 பில்லியன் டாலர் பொருளாதாரத்துடன், டெல்ல இந்த லிஸ்டில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. கலாச்சாரம், கலை மற்றும் அறிவுசார் வளர்ச்சிக்குப் பெயர் பெற்ற கொல்கத்தாவின் மொத்தப் பரப்பளவு 185 சதுர கி.மீ. ஆகும். சுமார் 4.6 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட கொல்கத்தாவில் தனிநபர் ஆண்டு வருமானம் ₹1,54,000ஆக உள்ளது. இரும்பு உற்பத்தி, சுரங்கம், சணல் மற்றும் ஜவுளி ஆகியவை இங்கு முக்கியத் தொழில்களாக உள்ளன.
பெங்களூர்
அடுத்த இடத்தில் இந்தியாவின் "சிலிக்கான் வேலி" மற்றும் "தகவல் தொழில்நுட்பத் தலைநகரம்" என்று அழைக்கப்படும் பெங்களூர் இருக்கிறது. இந்த லிஸ்டில் இடம்பெறும் முதல் தென்னிந்திய நகராக பெங்களூர் இருக்கிறது. 110 பில்லியன் டாலர் பொருளாதாரத்தைக் கொண்ட பெங்களூரில் தகவல் தொழில்நுட்பம் தான் பிரதான பிஸ்னஸ் ஆகும். 741 சதுர கி.மீ பரப்பளவு மற்றும் 5.1 மில்லியன் மக்களைக் கொண்ட பெங்களூரில் தனிநபர் ஆண்டு வருமானம் ₹3,52,000ஆக உள்ளது.
சென்னை
அடுத்த இடத்தில் 78.6 பில்லியன் டாலர் பொருளாதாரத்துடன் நமது சென்னை 5வது இடத்தில் இருக்கிறது. ஆசியாவின் டெட்ராய்ட் மற்றும் இந்தியாவின் ஹெல்த் கேபிடல் என அழைக்கப்படும் சென்னையில் ஆட்டோமொபைல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரத் துறை சிறந்து விளங்குகிறது. 426 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட சென்னையின் மக்கள் தொகை சுமார் 4.3 மில்லியனாகும். இங்குத் தனிநபர் ஆண்டு வருமானம் ₹3,15,000ஆக உள்ளது. நாட்டின் மிகப் பெரிய செயற்கை துறைமுகத்தையும் சென்னை தான் கொண்டு இருக்கிறது.
ஹைதராபாத்
75 பில்லியன் டாலர் பொருளாதாரத்துடன், ஹைதராபாத் இதில் 6வது இடத்தில் இருக்கிறது. மருந்துகள் உற்பத்தி, சயின்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் ஹைதராபாத்தின் மொத்தப் பரப்பளவு 650 சதுர கி.மீ ஆகும். இங்கே மக்கள் தொகை சுமார் 11.2 மில்லியனாக உள்ள நிலையில், சராசரி தனிநபர் ஆண்டு வருமானம் ₹4 லட்சமாக உள்ளது.
அடுத்தடுத்த இடங்கள்
இந்த லிஸ்டில் 69 பில்லியன் டாலர் பொருளாதாரத்துடன் மற்றொரு மகாராஷ்டிரா நகரான புனே 7வது இடத்தில் இருக்கிறது. அங்குச் சராசரி தனிநபர் ஆண்டு வருமானம் ₹2,78,000ஆக உள்ளது. அதேபோல குஜராத்தின் அகமதாபாத்: 68 பில்லியன் டாலர் பொருளாதாரத்துடன் 8வது இடத்தில் இருக்கிறது. இங்குத் தனிநபர் ஆண்டு வருமானம் ₹3,89,332ஆக உள்ளது.
குஜராத்தின் மற்றொரு நகரமான சூரத் 59.8 பில்லியன் டாலர் பொருளாதாரத்துடன் 9வது இடத்தில் இருக்கிறது. அங்கு தனிநபர் ஆண்டு வருமானம் ₹3,89,332ஆக உள்ளது. ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம் 43.5 பில்லியன் டாலர் பொருளாதாரத்துடன் இந்த லிஸ்டில் 10வது இடத்தில் இருக்கிறது. அங்குத் தனிநபர் ஆண்டு வருமானம் ₹4,83,892ஆக உள்ளது.
-
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ












Click it and Unblock the Notifications