சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஏற்கவில்லை".. டெல்லியில் அண்ணாமலை இருக்கும் போதே.. எடப்பாடிக்கு போன அதிர்ச்சி தகவல்.. என்ன நடந்தது?

அண்ணாமலை நேற்று டெல்லியில் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டார்.

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லியில் இருக்கும் போது எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியமான அதிர்ச்சி தகவல் ஒன்று சென்றுள்ளது நேற்று மாலை. டெல்லியில் அண்ணாமலை முக்கியமான ஆலோசனை ஒன்றை நடத்திக்கொண்டு இருந்த நிலையில்தான் இந்த தகவல் சென்றுள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் சூடு பிடித்து உள்ளது. இந்த மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு ஓபிஎஸ், எடப்பாடி இருவரும் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளதால் சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலுக்காக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்:எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்:எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு

கூட்டணி

கூட்டணி

அதோடு இல்லாமல் ஈரோடு கிழக்கில் எடப்பாடி பாஜகவை கழற்றிவிட்டுவிட்டு புதிய கூட்டணியை உருவாக்கி இருந்தார். பாஜகவுடன் மோதினால், பாஜகவை விட்டு விலகி சென்றால் டெல்லி மூலம் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என்பதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் தேசிய ஜனநாயக "முற்போக்கு" கூட்டணியை உருவாக்கி உள்ளார் எடப்பாடி. இது பாஜக தரப்பில் பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாஜக - எடப்பாடி தரப்பின் பிளவை வெளிச்சம் போட்டு காட்டியது. இந்த நிலையில் அதே நாள் மாலை மீண்டும் இந்த கூட்டணி பெயர் மாற்றப்பட்டது. தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பெயர் நீக்கப்பட்டு புதிதாக அதிமுக தலைமையிலான கூட்டணி பணிமனை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அண்ணாமலை பயணம்

அண்ணாமலை பயணம்

இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு ஓ பன்னீர்செல்வம் சார்பாகவும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளார். அதிமுக ஓபிஎஸ் அணியின் வேட்பாளராக செந்தில் முருகன் என்பவரை அவர்கள் தரப்பு களமிறக்கி உள்ளது இதையடுத்தே அண்ணாமலை நேற்று டெல்லியில் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டார். ஜே பி நட்டாவுடன் அண்ணாமலை தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டார். ஈரோடு கிழக்கில் என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்யப்பட்டு இருக்கிறது. ஒன்று எடப்பாடி தரப்பை ஆதரித்து அவரை ஒற்றை தலைமையாக ஏற்பது. இரண்டாவதாக ஓபிஎஸ்ஸை ஆதரித்து, எடப்பாடியுடன் கூட்டணியை முறிப்பது. அல்லது தேர்தலில் தனியாக போட்டியிடுவது. அல்லது தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக்கொள்வது போன்ற முடிவுகளை பற்றி அண்ணாமலை தரப்பு ஆலோசனை செய்துள்ளது.

ஆலோசனை முடிவு

ஆலோசனை முடிவு

ஆலோசனையின் முடிவில் நாம் கூட்டணி வைத்து இருப்பது எடப்பாடி, ஓபிஎஸ்ஸுடன் இல்லை. இரட்டை இலையுடன்தான். நம்முடைய கூட்டணி எப்போதும் இரட்டை இலையுடன்தான். இந்த இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கிறதோ அவர்களுக்கே நமது ஆதரவு இருக்க வேண்டும். இரட்டை இலை சின்னம் முடங்கினால் இரண்டு தலைவருக்கும் ஆதரவு கொடுக்காதீர்கள். இரட்டை இலையில் தீர்வு கிடைக்கட்டும். அதன்பின் பார்க்கலாம் என்று டெல்லி அண்ணாமலைக்கு ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

டெல்லியில் அண்ணாமலை இருக்கும் போதே எடப்பாடிக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று சென்றுள்ளது. எடப்பாடி பழனிசாமி வழக்கில் தேர்தல் ஆணையம் செய்துள்ள பதிலில், அதிமுக சார்பாஜ் ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவை நாங்கள் இன்னும் ஏற்கவில்லை. இந்த பொதுக்குழு நடந்த விதத்தை நாங்கள் இன்னும் ஏற்கவில்லை. எடப்பாடியை இன்னும் நாங்கள் இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்கவில்லை. இரட்டை இலை சின்னம் தொடர்பாக வழக்கு எதுவும் நிலுவையில் இல்லை. இரட்டை இலை சின்னத்தை யாருக்கு கொடுப்பது என்று தேர்தல் நடத்தும் அலுவலர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அளித்த பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த பதில் எடப்பாடி தரப்பிற்கு பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது. எடப்பாடி இடைக்கால பொதுச்செயலாளர் இல்லை, இப்போதும் ஓ பன்னீர்செல்வம்தான் ஒருங்கிணைப்பாளர் என்ற நிலை இதனால் ஏற்பட்டு உள்ளது. இதனால் சின்னம் முடக்குவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

சின்னம் முடங்கும்

சின்னம் முடங்கும்

அதிமுக ஓபிஎஸ் அணியின் வேட்பாளராக செந்தில் முருகன் என்பவரை அவர்கள் தரப்பு களமிறக்கி உள்ளது. இன்னொரு பக்கம் ஈரோடு கிழக்கில் பாஜகவிற்கு காத்திருக்காமல் கே. எஸ் தென்னரசை எடப்பாடி பழனிசாமி தரப்பு தங்களின் அதிமுக அணி வேட்பளாரை அறிவித்து உள்ளது. இதனால் சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இரண்டு தரப்பும் வேட்பாளரை களமிறக்கி உள்ளது. இதனால் இரண்டு வேட்பாளருக்கும் பி பார்மில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் கையெழுத்து போட மாட்டார்கள். எனவே இரண்டு தரப்பிற்கும் சின்னம் முடங்கும் வாய்ப்புகள் உள்ளன. பெரும்பாலும் இரண்டு தரப்பிற்கும் பொதுவான சின்னம் தனி தனியாக வழங்கப்படலாம். பொது சின்னம் கிடைக்கும் பட்சத்தில் உண்மையில் யார் பலசாலி என்பதும் கொஞ்சம் தெரிந்துவிடும்.

அண்ணாமலை

அண்ணாமலை

இதையடுத்தே அண்ணாமலை இன்று எடப்பாடியை மற்றும் ஓ பன்னீர்செல்வத்தை சென்று சந்தித்து உள்ளார். அதில்.. சின்னம் யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு நாங்கள் சப்போர்ட் செய்வோம். சின்னம் முடங்கினால் யாருக்கும் சப்போர்ட் இல்லை. நாங்களும் தேர்தலில் போட்டியிட மாட்டோம். சின்னத்தை பெரும் நபர்களுக்கு நாங்கள் சப்போர்ட் செய்வோம் என்று முடிவு எடுத்துள்ளோம். இப்போது சின்னம் முடங்கும் நிலையில் இருப்பதால் எங்கள் ஆதரவை எதிர்பார்க்க வேண்டாம், என்று இரண்டு தரப்பிடமும் அண்ணாமலை சொன்னதாக கூறப்படுகிறது.

English summary
What did Annamalai speak with Delhi leaders? Why he is meeting O Panneerselvam and Edappadi Palanisamy?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X