எதிர்க்க உட்காரட்டும்! நைசாக எடப்பாடி செய்த "வேலை"! எகிறிய மாஜிஸ்.. அதிமுக ஆபிஸ் உள்ளே நடந்தது என்ன?
சென்னை: அதிமுக அலுவலகத்தில் நடந்த சம்பவம் ஒன்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆசிய கோப்பை தொடரில் இருந்து இந்தியா வெளியேறிவிட்டது.. 3 வருடமாக செஞ்சுரி அடிக்காத கோலி செஞ்சுரி அடித்துவிட்டார்.. ஆரோக்கியமாக இருந்த ராணி எலிசபெத் இறந்துவிட்டார்.. கடந்த சில நாட்களில் உலகம் முழுக்க இப்படி எதிர்பார்க்காத மாற்றங்கள் நடத்துவிட்டன.
இத்தனையும் நடந்தாலும் மாறாத ஒரே விஷயம் என்றால் அது அதிமுகவில் நடக்கும் உட்கட்சி மோதல் ஒன்றுதான். மாற்றம் மட்டுமே மாறாதது என்பார்கள்.. அதிமுகவில் மோதல் மட்டுமே முடியாதது என்றுதான் கூற வேண்டும்.
அந்த அளவிற்கு அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சம் பெற்றுள்ளது. மாறி மாறி நிர்வாகிகள் ஒருவருடன் ஒருவர் மோதி சண்டை போட்டு வருகின்றனர்.

என்ன நடக்கிறது?
அதிமுக பொதுக்குழு வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டாலும் இன்னும் மோதல் முடியவில்லை. ஓ பன்னீர்செல்வம் இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். வரும் வாரம் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கடந்த வாரம் 72 நாட்களுக்கு பின் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை புரிந்தார். தொண்டர்கள் வெள்ளம் சூழ, பெரும் வரவேற்பிற்கு இடையில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அலுவலகம் வந்தார்.

எடப்பாடி பழனிசாமி
இந்த நிலையில்தான் அதிமுக அலுவலகத்தில் நடந்த சம்பவம் ஒன்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி அதிமுக அலுவலகத்தில் அன்று எடப்பாடி அமர்ந்த இருந்த போது மேடையில் அவருக்கு மட்டுமே இருக்காய் போடப்பட்டதாக கூறப்படுகிறது. மற்ற அதிமுக நிர்வாகிகளுக்கு எதிர் பக்கம் இருக்கை போடப்பட்டு உள்ளது. எடப்பாடி இணை ஒருங்கிணைப்பாளராக இருண்டஹ் வரை மூத்த நிர்வாகிகளுக்கு அவருக்கு அருகிலேயே இடம் இருக்கும்.

மோசம்
ஆனால் இப்போது அவர் இடைக்கால பொதுச்செயலாளர். இந்த நிலையில்தான் அவருக்கு எதிர் பக்கம் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் போன்றவர்களுக்கு இருக்காய் போடப்பட்டு உள்ளது. இதுதான் அதிமுகவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடி மாறிவிட்டார் என்று மூத்த தலைவர்களின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். அவர் மற்ற தலைவர்களை தன் அருகில் அமர வைக்கவில்லை. இது தவறு என்று விமர்சனம் செய்கின்றனர்.

மாஜி
முக்கியமாக மாஜி அமைச்சர்கள் இந்த சம்பவம் காரணமாக அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை பற்றி அதே நாள் நிர்வாகிகளிடம் இவர்கள் ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் எடப்பாடி ஆதரவாளர்களோ.. எடப்பாடி இடைக்கால பொதுச்செயலாளர் ஆகிவிட்டார். அப்படி என்றால் அவர் தானே மேடையில் இருக்க வேண்டும். இது பொதுக்குழு முடிவு தானே. இதை எப்படி மாற்ற முடியும். அவர் தானே கட்சியின் ஒற்றை தலைமை என்று நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
-
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
லட்டு மாதிரி கிடைத்த வாய்ப்பு.. கையில் இருந்த தங்கத்தை மிஸ் பண்ணிட்டாரே.. எடப்பாடி பழனிசாமி! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
அசைக்க முடியாத அதிமுகவின் எஃகு கோட்டை..50 ஆண்டுகளாக திமுக வெல்லாத நிலக்கோட்டை! மல்லிகை ஊர் யாருக்கு? -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்.. பாஜக வாக்குறுதியை சொல்லி வாக்கு சேகரித்த ராஜன் செல்லப்பா! -
எடப்பாடியில் குமுறும் "குக்கர்.." கடைசி நேரத்தில் விஐபி தொகுதியில் விரிசல்? அதிர்ச்சியில் இபிஎஸ் -
5 பவுன் தங்கம்.. ஒரு லட்சம் ரொக்கம்! பரிசு மழை அறிவித்த ஓபிஎஸ்.. போடி தொகுதி திமுகவினர் உற்சாகம் -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக்












Click it and Unblock the Notifications