ஸ்பீக்கர் அப்பாவு தமிழ்ல என்ன சொல்றாரு? பிஏவிடம் கேட்ட ஆளுநர் ரவி.. அதுக்கு அப்பறம்தான் சம்பவமே!
சென்னை: சபாநாயகர் அப்பாவு ஆளுநர் ஆர். என் ரவிக்கு இன்று சட்டசபையிலேயே பதிலடி கொடுத்துள்ளார். அதுவரை அவையில் அமர்ந்து இருந்த ஆர். என் ரவி அப்பாவு பேசியதன் மொழிபெயரை தெரிந்து கொண்டதும் அவையில் இருந்து வெளியேறினார்.
தேசிய கீதத்திற்கு கூட காத்திருக்காமல் அவையில் இருந்து அவர் வெளியேறினார். அவையில் உண்மையில் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
அவையில் என்ன நடந்தது? : இன்று சட்டசபை ஆளுநர் ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ரவி தனது உரையில் தொடக்கத்தில் திருக்குறளை வாசித்தார். அதன்பின் பட்ஜெட் கூட்ட தொடரின் அறிமுகத்தை வாசித்தார். அதன்பின் உரையை பாதியில் நிறைவு செய்தார். 2 நிமிடங்கள் மட்டுமே மொத்தமாக பட்ஜெட் கூட்டத்தில் ஆர். என் ரவி உரை நிகழ்த்தினார்.
சட்டப்பேரவை தொடங்கியதும் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு வைத்தார். சட்டசபை நிகழ்விற்கு முன் மற்றும் பின் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதை ஏற்கவில்லை. உரையில் இருக்கும் சில கருத்துக்களுடன் முரண்படுகிறேன். அதனால் உரையை முடிக்கிறேன் என்று கூறி 2 நிமிடத்தில் உரையை நிறைவு செய்தார்.
அதாவது சட்டசபை நிகழ்விற்கு முன் மற்றும் பின் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதை ஏற்கவில்லை. உரையில் இருக்கும் சில கருத்துக்களுடன் முரண்படுகிறேன். அதனால் உரையை முடிக்கிறேன் என்று கூறி 2 நிமிடத்தில் உரையை நிறைவு செய்தார்.

அப்பாவு பதிலடி: தேசிய கீதத்தை இசைக்கவில்லை என்ற ஆளுநர் ரவி குற்றச்சாட்டுக்கு சபாநாயகர் அப்பாவு மறுப்பு வைத்துள்ளார். அதில், ஆளுநர் குறைவாக வாசித்ததை குறையாக சொல்லவில்லை, உங்கள் மனதில் உள்ளதை சொன்னீர்கள். எங்கள் மனதில் உள்ளதை நாங்களும் சொல்கிறோம்.
இந்த அவையில் அவரவர் தங்களுக்கு விருப்பமானதை, மனதில் தோன்றியதை எல்லாம் பேச முடியாது. 1 பைசாவையும் மத்திய அரசு தரவில்லை. சாவர்க்கர் வழியில் வந்தவர்களுக்கு நாங்கள் குறைந்தவர்கள் இல்லை. இவ்வளவு பெரிய வெள்ளம், புயல் ஏற்பட்டிருக்கிறது ஒரு பைசா கூட தரவில்லை, பல லட்சம் கோடி ரூபாய் PM CARE FUND-ல் உள்ளது. இந்திய மக்களால் கணக்கிடப்படாத, கணக்கு கேட்க முடியாத பணத்தில் இருந்தாவது ₹50,000 கோடி ரூபாயை ஆளுநர் வாங்கி தந்தால் நன்றாக இருக்கும்.
ஆளுநர் ரவியிடம் முழு உரையும் முன்பே கொடுக்கப்பட்டது. அவரின் ஒப்புதல் பெற்றுத்தான் உரை அவைக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் அதை அவர் முழுமையாக படிக்கவில்லை. இங்கே ஆளுநரை மாண்புடன் நடத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
ஆளுநரை மாண்புடன் நடத்த வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலினும் உத்தரவிட்டு இருக்கிறார். இதையடுத்து ஆளுநர் உரையை நான் வாசித்தேன். சட்டசபையில் தேசிய கீதம் ஆளுநர் உரைக்கு பின் பாடப்படும் என்பதே மரபு. அதை மாற்றும்படி ஆளுநர் ரவி கூறினார். அதை ஏற்றுக்கொள்ள முடியாது, என்று சபாநாயகர் அப்பாவு ஆளுநர் ஆர். என் ரவிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
விளக்கம் கேட்ட ஆர். என் ரவி; சபாநாயகர் பேசிக்கொண்டு இருக்கும் போதே.. சாவக்கார் என்ற வார்த்தையை கேட்டதும் ஆளுநர் ஆர். என் ரவி தனது உதவியாளரிடம் .. ஸ்பீக்கர் அப்பாவு தமிழ்ல என்ன சொல்றாரு? என்று கேட்டார். இதற்கு பிஏ தமிழில் விளக்கம் கொடுத்தார்.
சாவர்க்கர் வழியில் வந்தவர்களுக்கு நாங்கள் குறைந்தவர்கள் இல்லை, என்று அப்பாவு சொன்னதை பற்றி ரவியிடம் அவரின் பிஏ விளக்கம் கொடுத்தார். அதுவரை அவையில் அமர்ந்து இருந்த ஆர். என் ரவி அப்பாவு பேசியதன் மொழிபெயர்ப்பை தெரிந்து கொண்டதும் அவையில் இருந்து வெளியேறினார்.
தேசிய கீதத்திற்கு கூட காத்திருக்காமல் அவையில் இருந்து அவர் வெளியேறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications