சென்னை பெரம்பூரில் வீடு தேடி செய்வினை எடுப்பதாக வந்த பத்மா.. மாயமான தங்கம்.. உஷார் மக்களே
சென்னை: சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் ஜோதிடம் பார்ப்பதாக கூறி பெண்கள் உலா வருகிறார்கள்.. அப்படி வரும் பெண்கள், உங்களுக்கு செய்வினை வைத்திருக்கிறார்கள்.. உங்களுக்கு கஷ்டம் வரப்போகிறது.. உங்களுக்கு நல்ல காலம் வர இதை பண்ணுங்க என்று நம்பும் படியாக சில விஷயங்களை கூறுவார்கள்.. இதை நம்புவோரிடம் நகை பறிப்பது நடக்கிறது, அப்படித்தான் சென்னை பெரம்பூரில் செய்வினையை எடுப்பதாக கூறி வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து 3 பவுன் நகை, செல்போன் திருடிச்சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சிலர் ஜோதிடத்தின் மீதும், சிலர் மூட நம்பிக்கைகளின் மீதும் அதீத நம்பிக்கை வைக்கிறார்கள். அப்படிப்பட்ட நம்பிக்கைகளை சிலர் தவறாக பயன்படுத்துவது நடக்கிறது. ஆகவே செய்வினை வைத்திருக்கிறார்கள், உங்களுக்கு நேரம் சரியில்லை.. உங்களுக்கு இந்த பூஜை செய்தால் வாழ்க்கை சூப்பராக இருக்கும்.. உங்கள் வீட்டில் மகன்களுக்கு திருமணம் நடைபெற இந்த விஷயம் பண்ணுங்க, இந்த பூஜை செய்தால் வாழ்க்கையில் சிக்கல் உடனே சரியாகும், பணம் கொட்டும் என்று கூறுவார்கள். ஆனால் அதனை நம்பினால் உங்கள் பணம், நகை மற்றும் நிம்மதி பறிபோகும்.

சென்னை கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனி பக்தவச்சலம் தெருவில் 54 வயதாகும் மோகனா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகேஷ் (30), சதீஷ் (27) என 2 மகன்கள். இருவரும் மலேசியாவில் வேலை செய்து வருகிறார்கள். மோகனா மட்டுமே வீட்டில் தனியாக வசித்து வருகிறார். தனது 2 மகன்களுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, அதற்காக வரன் பார்த்து வந்திருக்கிறார். இதனை எப்படியே அறிந்த ஒரு பெண், மோகனா வீட்டுக்கு வந்தார்.
அந்த பெண் கூறுகையில், "நான் திருமண தரகர் எனவும், உங்கள் மகன்களுக்கு வரன் பார்த்து தருவதாகவும்" கூறினார். அப்போது வீட்டில் மோகனா மட்டும் தனியாக இருப்பதை அறிந்த பெண், "இந்த வீட்டில் யாரோ செய்வினை வைத்திருப்பதால்தான் உங்கள் மகன்களுக்கு இன்னும் திருமணம் கைகூடவில்லை. அதனை நான் சரி செய்கிறேன்" என்று நம்பும் படியாக கூறியிருக்கிறார்.
பின்னர் மோகனாவிடம் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி அதில் ஏதோ ஒரு கலர் பொடியை கலந்திருக்கிறார். அந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளித்துவிட்டு நீங்கள் குடிக்க வேண்டும் என்றார். அதன்படி வீடு முழுவதும் தண்ணீரை தெளித்துவிட்டு இறுதியில் அதனை குடித்த மோகனா மயங்கி விழுந்திருக்கிறார்.
இதையடுத்து அந்த பெண், மோகனா கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலி, செல்போன் ஆகியவற்றை திருடிக்கொண்டு மாயமானார். மோகனா மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தபோது அந்த பெண்ணை காணவில்லை. தான் அணிந்திருந்த தங்கச்சங்கிலி, செல்போன் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர்தான் தனது வீட்டுக்கு திருமண தரகர்போல் வந்த பெண் மயக்க மருந்து கொடுத்து தன்னிடம் நகை, செல்போனை திருடிச்சென்றுவிட்டதை அறிந்தார்.
இதையடுத்த சற்றும் தாமதிக்காமல் மோகனா உடனே கொடுங்கையூர் போலீசில் சென்று புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து நடத்திய விசாரணையில் இந்த நூதன திருட்டில் ஈடுபட்டது செங்கல்பட்டு மாவட்டம் ஒத்தியம்பாக்கம் ஸ்ரீசாய் நகரைச் சேர்ந்த பத்மாவதி என்ற 55 வயதாகும் பத்மா என்பது தெரியவந்தது.
பத்மாவதியை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 3 பவுன் தங்க சங்கிலி மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். கைதான பத்மாவதி ஏற்கனவே வண்ணாரப்பேட்டையில் குடியிருந்து வந்திருக்கிறார். அதன்பிறகுதான் ஒத்தியம்பாக்கத்தில் சொந்தமாக வீடு கட்டி குடியேறினாராம். இவர் மீது இதுபோன்ற 2 திருட்டு வழக்குகள் இருப்பதும் போலீஸ் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. கைதான பத்மாவதியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
தங்கம் 'டல்'.. 100 ஆண்டுகளில் நடக்காத மிக மோசமான சம்பவம்.. முதலீட்டை எல்லாம் முறியடித்த சரிவு! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அமெரிக்கா போரில் பிஸி.. சத்தமின்றி சீனா உருவாக்கும் 'தங்கக் கவசம்'.. ஆட்டம் காணும் உலகப் பொருளாதாரம் -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
தங்கத்தின் மீது நம்பிக்கையே போச்சு.. வரலாற்றிலேயே இப்படி நடந்தது இல்லை.. புலம்பும் முதலீட்டாளர்கள் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications