'இங்க நின்னுட்டு இருந்தாரு தள்ளி விட்டுட்டேன்'.. மயிலாப்பூர் ரயில் நிலையத்தை அதிர வைத்த போதை ஆசாமி
சென்னை: எதற்காக தள்ளிவிட்டேன் என்று எனக்கே தெரியவில்லை..." "இங்க நின்னுட்டு இருந்தாரு அப்படியே தள்ளி விட்டுட்டேன்..." என்று கூறியுள்ளார் 64 வயது போதை ஆசாமி.. சென்னை மயிலாப்பூரில் பறக்கும் ரயில் நிலையத்தில் இருந்து ஒருவரை கீழே தள்ளிவிட்டு கொலை செய்த அந்த போதை ஆசாமி அளித்த வாக்குமூலம் பலரையும் ஆடிப்போக வைத்துள்ளது. மயிலாப்பூர் ரயில் நிலையத்திற்கு கீழ் இனியும் அந்த டாஸ்மாக் கடைகள் தேவையா என்று பொதுமக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.
சென்னை மயிலாப்பூர் பிடாரி கோயில் தெரு பகுதியை சேர்ந்த லூயிஸ் மத்தியாஸ் ஆரோக்கியராஜ் என்பவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 10 ஆண்டுகளாக சாலையிலும், கோவில் வாசல்களிலும் தங்கி வந்திருக்கிறார். அந்த பகுதியில் சில கூலி வேலைக்கு செல்லும் அவர், அதில் கிடைக்கும் பணத்தில் மது அருந்திக்கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், ஆரோக்கியராஜ் நேற்று முன்தினம் இரவு சென்னை மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையத்தில் அடிப்பட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார். ரயில் நிலைய மேலாளரிடம் ரயில் பயணி ஒருவர் இது குறித்து தகவல் தெரிவித்தார். ரயில் நிலைய மேலாளர் இதுபற்றி திருவான்மியூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவான்மியூர் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ரயில் நிலையத்தில் மதுபோதையில் இருந்த இரண்டு நபர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, அதன் மூலம் நடை பாதையில் இருந்த ஒருவர் லூயிசை தள்ளி உள்ளார் என்பதும் இதில் நகரும் படிக்கட்டுகளில் மேலிருந்து விழுந்த அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து லூயிஸ் உடன் பயணித்த நபர்கள் யார்? எதற்காக இங்கு வந்தார்கள் என்றும் ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும், அந்த நேரத்திற்கு ரயில் நிலையத்திற்கு வந்து சென்ற நபர்கள் யார் என்பது குறித்து விசாரனை நடத்தினார்கள். சிசிடிவி கேமராவில் மதுபோதையில் அவருடன் தள்ளாடியபடி சென்ற விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சேர்ந்த சேட்டு (60) என்பவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். அவர் தான் மது போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல், தள்ளிவிட்டு கொன்றதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். எதற்காக தள்ளிவிட்டேன் என்றே எனக்கு தெரியாது என்று கூறி போலீஸை அதிர வைத்துள்ளார் சேட்டு என்ற போதை முதியவர்.
இங்க நின்னுட்டு இருந்தாரு.. அப்படியே தள்ளி விட்டுட்டேன் என்று அவர் நடந்தவற்றை எல்லாம், மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையத்தில் போலீசாரிடம் விளக்கம் அளித்து வாக்குமூலம் கொடுத்துள்ளார். அப்போது தான் எதற்காக அவரை தள்ளிவிட்டேன் என்பதை சேட்டு தெளிவாக போலீசிடம் கூறினார். மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் தூங்கி கொண்டிருந்த லூயிஸை போதையில் முதியவர் சேட்டு எழுப்பியுள்ளார். அப்போது போதையில் இருந்த லூயில் அவரை அசிங்கமாக பேசினாராம். இந்த ஆத்திரத்தில் தான் லூயிஸை தள்ளிவிட்டதாக கூறியிருக்கிறார் சேட்டு. தள்ளிவிட்டவரை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறியிருக்கிறார்.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications