உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்
சென்னை: தமிழக தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. இப்படிப்பட்ட சூழலில் மொத்த பேரையும் அதிரவைக்கும் வகையில் அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.. மொத்தம் 23 வேட்பாளர்கள் கொண்ட இந்த லிஸ்ட்டில் எடப்பாடி பழனிசாமியின் வியூக அரசியல் வெளிப்படுகிறது.. அதாவது 23 பேரில் 21 பேர் முன்னாள் அமைச்சர்கள் என்பதுதான் இதன் ஹைலைட்டே.. இதற்கு என்ன காரணம்?
முதல்கட்ட வேட்பாளர் லிஸ்ட்டை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.. தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் 8-வது முறையாகக் களம் காண்கிறார்.

இந்த பட்டியலின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், இதில் இடம்பெற்றுள்ள ராஜன் செல்லப்பா மற்றும் தாமரை எஸ்.ராஜேந்திரன் ஆகிய 2 பேரை தவிர மற்ற அனைவரும் ஏற்கனவே அமைச்சர்களாகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள்..
அதிமுக பாஜக
குறிப்பாக வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர், ஜெயக்குமார் போன்ற கட்சியின் மூத்த தூண்கள் மீண்டும் தங்களது பழைய கோட்டைகளிலேயே நிறுத்தப்பட்டுள்ளனர்..
கடந்த முறை தேர்தலைவிட, இந்த முறை இப்படியொரு மாற்றம் அதிமுக தலைமையிடம் தென்பட்டுள்ளது.. இந்த அதிரடி முடிவுக்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய அரசியல் கணக்கு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி லிஸ்ட்
சமீபத்தில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை சந்தித்துப் பேசினார்.. அப்போது எடப்பாடி தரப்பில் ஒரு ரகசிய சர்வே ரிப்போர்ட் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது..
அதில், அதிமுக கூட்டணிக்கு தமிழகம் முழுவதும் இப்போதைய நிலவரப்படி 143 முதல் 155 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதைப் பார்த்த அமித்ஷா தரப்பும், தங்களது கைவசம் இருந்த சில ரகசிய ரிப்போர்ட்களை எடப்பாடியிடம் காட்டியுள்ளனர்..
உளவுத்துறை சர்வே ரிப்போர்ட்
அதில் என்டிஏ கூட்டணி 152+ இடங்கள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்ததாம்.. இதை பார்த்து எடப்பாடி முகம் பிரகாசமாகிவிட்டதாம்.. அந்தவகையில் தற்போது 2 தரப்பு சர்வே முடிவுகளும் சாதகமாக இருப்பதால், ரிஸ்க் எடுக்க விரும்பாத எடப்பாடி, அனுபவம் வாய்ந்த பழைய முகங்களையே களமிறக்க துணிந்து விட்டதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள், அனுபவம் வாய்ந்த அமைச்சர்களை மீண்டும் நிறுத்துவதன் மூலம் வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய முடியும் என்று எடப்பாடி திடமாக நம்புகிறாராம்.
இருந்தாலும், இத்தனை முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியிருப்பது ஒருபுறம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.. பாஜகவின் நெருக்கடிக்கு ஆளாகிவிடுவோமோ என்ற பயத்திலோ அல்லது புதுமுகங்களை இறக்கினால் கோட்டை விட்டுவிடுவோம் என்ற கலக்கத்திலோ எடப்பாடி இந்த முடிவை எடுத்தாரா என்ற விவாதமும் கிளம்பியுள்ளது.
அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி
எனினும் இந்த முதற்கட்டப் பட்டியல் அதிமுக தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.. டெல்லி தலைமையின் ஆசி மற்றும் சாதகமான சர்வே முடிவுகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு புதிய தெம்பைக் கொடுத்துள்ளது.. 21 முன்னாள் அமைச்சர்களும் தங்களது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், இந்தத் தேர்தல் களம் இன்னும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுகவின் வியூகங்களை உடைக்க இந்த "பழைய படை" உதவுமா அல்லது புதிய வாக்காளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யுமா என்பது தேர்தல் முடிவில்தான் தெரியும்.. எனினும், எடப்பாடியின் இந்த திடீர் வேகம் அரசியல் எதிரிகளைச் சற்று யோசிக்க வைத்துள்ளது என்பது மட்டும் நிதர்சனம்..!!!












Click it and Unblock the Notifications