சரியில்லை.. ஸ்டாலின் மேஜைக்கு வந்த அந்த ரிப்போர்ட்.. உள்ளே இருந்தது என்ன? பரபரப்பு பின்னணி
சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு உளவுத்துறை சார்பாக முக்கியமான ஒரு அறிக்கை சென்றுள்ளதாம். தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்த சில சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்று உள்ளதாம்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று அவ்வப்போது புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக கள்ளக்குறிச்சி சம்பவம், பகுஜன் சமாஜ் ஆம்ஸ்ட்ராங் கொலை காரணமாக தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கடுமையான புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

ஸ்டாலின் மாற்றம்: இப்படி தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடந்து வரும் சில சம்பவங்கள் அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. மக்களிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கும் ஒரு ரெட் நோட் சென்றுள்ளதாம். அதாவது தமிழக அரசு இது போன்ற விவகாரங்களை எதிர்கொள்ள உடனே சுதாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக சில முக்கியமான விஷயங்களை செய்ய வேண்டி உள்ளது. முக்கியமாக சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் முதல்வருக்கு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில்தான் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் ஐபிஎஸ் நியமிக்கப்படுகிறார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதேநேரம், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதத்தை நியமித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர்கள் இருவரும் திறமையான அதிகாரிகள். அதிலும் அருண் இளமையான துடிப்பான அதிகாரி. இன்னொரு பக்கம் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஏற்கனவே உளவுத்துறையில் நல்ல பெயர் எடுத்தவர்.
உளவுத்துறை:
ஸ்டாலின் மேற்கொண்ட இந்த மாற்றம் உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் அடிப்படையில் என்கிறார்கள். ஆம்.. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு உளவுத்துறை சார்பாக முக்கியமான ஒரு அறிக்கை சென்றுள்ளதாம். தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்த சில சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்று உள்ளதாம்.
உளவுத்துறை சார்பாக சட்டம் ஒழுங்கு தொடர்பாக முக்கிய ரிப்போர்ட் சென்றுள்ளது. மக்கள் மத்தியில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக புகார்கள் உள்ளன. முக்கியமாக சமூக வலைத்தளங்களில் புகார்கள் உள்ளன.
எதுவும் சரியில்லை. உடனே நிலைமையை சரியாக்க வேண்டும். அரசு களமிறங்கி சில பணிகளை வேகமாக மேற்கொள்ள வேண்டும். அதிகாரிகள் இடையே மாற்றங்களை செய்ய வேண்டும். சில ரவுடிகளை அடக்க வேண்டும் என்று ரிப்போர்ட் சென்றுள்ளதாம். சில ரவுடிகளின் லிஸ்ட்டும் போலிஸாருக்கு உளவுத்துறை மூலமாக சென்றுள்ளதாம்.
ஆக்சன்: இதன் அடிப்படையிலேயே ஸ்டாலின் அதிகாரிகளை மாற்றி உள்ளாராம். வரும் நாட்களில் இதனால் இனி சென்னையில் சினிமா பாணி ஆக்சன் சீன்களை பார்க்கலாம் என்கிறார்கள் அரசியல் தரப்பு வட்டாரத்தினர். இவர்களுக்கு ப்ரீ ஹேண்ட் கொடுக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு எடுத்துள்ளாராம். அதோடு இவர்களை தேர்வு செய்ய ஸ்டாலின் யாரிடமும் ஆலோசனை செய்யவில்லை. அவராகவே தேர்வு செய்தவர்கள்தான் இவர்கள் இருவரும் என்று தகவல்கள் வருகின்றன.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications