"அண்ணன்" ஸ்டாலின்.. கனிமொழியை பார்த்தீங்களா.. "ஆனா அப்பா".. வலிகளை யார் அறிவார்.. நெகிழ்ச்சி
திமுக எம்பி கனிமொழி கருணாநிதி குறித்து எழுதிய கவிதைகள் நெகிழ்ச்சியை தந்து வருகிறது
சென்னை: தன் அப்பாவை மறக்க முடியாமல், திமுக எம்பி கனிமொழி எழுதிய கவிதை வரிகள், படிப்போர் இதயத்தை பிசைந்தெடுத்து வருகிறது.. அத்துடன் முதல்வர் ஸ்டாலினையும் விட்டுக்கொடுக்காத பண்பு கவனத்தை ஈர்த்து வருகிறது.
திமுக தலைவர் கருணாநிதியின் செல்லமகள் கனிமொழி.. தீவிரமான அரசியலில் நுழைவதற்கு முன்பாக மிக சிறந்த பத்திரிகையாளர் - கவிஞர் - எழுத்தாளர் என அடையாளங்களை தாங்கி கொண்டவர்.
அதாவது கருணாநிதியின் மகள் என்ற முகத்தை அவரிடம் காண முடியாது.. அப்படி வெளிப்படுத்தி கொள்வதையும், மிக கவனமுடன் தவிர்த்து வந்தவர்..!
திமுக தலைவர் கருணாநிதியின் செல்லமகள் கனிமொழி.. தீவிரமான அரசியலில் நுழைவதற்கு முன்பாக மிக சிறந்த பத்திரிகையாளர் - கவிஞர் - எழுத்தாளர் என அடையாளங்களை தாங்கி கொண்டவர். அதாவது கருணாநிதியின் மகள் என்ற முகத்தை அவரிடம் காண முடியாமு.. அப்படி வெளிப்படுத்தி கொள்வதையும், மிக கவனமுடன் தவிர்த்து வந்தவர்..!

எமர்ஜென்சி
அதேசமயம், ஒரு முதல்வரின் மகளாக வளர்ந்தபோதே கனிமொழி பார்த்தது எல்லாமே எமெர்ஜென்சி காலகட்ட நினைவுகள்தான். கைதுகளும், அடக்குமுறைகளும் மழலை கனிமொழியின் மனதில் பதிந்து போன ஒன்று. அதேபோல, அரசியல் சூழல் எதுவாக இருந்தாலும் கருணாநிதியின் ஆல் டைம் செல்லம் கனிமொழிதான். இதற்கு பிறகுதான், மகளிர் அணி தலைவி, எம்பி என்ற பொறுப்பு, பதவிகளை அடைந்து தமிழகத்தின் முக்கிய தலைவராக உயர்ந்துள்ளார்.. எனினும் தன் அப்பாவின் தொலைந்து போன பழைய நினைவுகளை இவரால் இன்னமும் மறக்க முடியவில்லை..!

நினைவுகள்
தனது ட்விட்டரில் கருணாநிதி பற்றின ஏதாவது தகவல்கள், நினைவுகளை அடிக்கடி சொல்லி கொண்டே ,இருப்பர்.. தன் மனசில் எப்போதெல்லாம் கவலை, வெறுமை, வருகிறதோ அப்போதெல்லாம் கனிமொழி பதிவிடுவது தன் அப்பாவின் நினைவுகளைதான்.. அதிலும் ஒவ்வொரு வருட பிறந்தநாளின்போதும், கருணாநிதி குறித்து கனிமொழி பதிவிடும் ட்வீட்கள் பெரிதும் கவனித்து பார்க்கப்படும்.. அந்த வகையில் ஒருமுறை,
"அறை முழுவதும் மகிழ்ச்சியும் நகைச்சுவையும் அறிவும் நிறையச் செய்யும் அப்பாக்களின் நாற்காலிகள் காலியாக இருந்தாலும் அவை நினைவுகளால் நிரம்பி வழிகின்றன" என்று கவலையுடன் தெரிவித்திருந்தார்.

தலைவன் - தந்தை
அதேபோல, கடந்த வருடம், "அப்பா! உங்களைப்போல் ஒரு தலைவனைத் தந்தையாகவும் பெற்றது மறுபிறவியற்ற இந்த வாழ்க்கையின் பெரும் பேறு" என கருணாநிதி குறித்து கனிமொழி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார்.. இன்று கருணாநிதியின் 99வது பிறந்தநாள்.. திமுகவினர் அவரது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் அதகளப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.. கனிமொழியோ, பாச உணர்வுகள் பீறிடும், கவிதை வரிகளை பகிர்ந்துள்ளார்.

அப்பா போட்டோக்கள்
தன் தந்தையின் முக்கிய விழாக்கள், நெகிழ்ச்சியான சந்திப்புகள், அப்பாவுடன் தான் எடுத்து கொண்ட போட்டோக்கள் போன்றவற்றை பதிவிட்டு, அதற்கு ஒரு கவிதை வடிவமும் தந்துள்ளார் கவிஞர் கனிமொழி.. படிக்கும்போதே நெஞ்சை அளவுக்கு அதிகமாக கனக்கச் செய்து விடுகிறது இந்த கவிதை வரிகள்.. ஒரு மகளின் அடக்க முடியாத துக்கமும், பரிதவிப்பும் இந்த வரிகளில் உணரவும் முடிகிறது. அந்த வலி நிறைந்த கவிதை இதுதான்..

ஆருயிர்த் தம்பி
பெரியாரின் தொண்டர்.. மானமிகு சுயமரியாதைக்காரர், முத்தமிழ் அறிஞர், அண்ணாவின் ஆரூயிர்த் தம்பி, உடன்பிறப்புகளின் தலைவர், ஓய்வறியா சூரியன், தமிழினத் தலைவர். ஆனால், எனக்கு அப்பா.. இசை நெகிழும் வீதிகளில் கனவுகளும், மீட்சிகளும் மறுக்கப்பட்ட குலத்தில் பிறந்த சிறுவன், நிர்ணயிக்கப்பட்ட தடங்களை நிராகரித்து ஆலயங்களின் நந்திகளை தகர்த்துப் பிரவேசித்தவன்.. தமிழினம் தனது அடையாளங்களை தேடிக் கொண்டிருந்த காலத்தில், போராளியாய் தன்னை இணைத்துக் கொண்டவன்..

இனப்புரட்சி
ஒரு இனப்புரட்சியின் வித்துக்களை துளிர்களை கிளைகளை வேர்களை இன்றுவரை பாதுகாப்பவன்.. தென்றலைவிட மென்மையாய், புயலைவிட வேகமாய் விழும் உன் வார்த்தைகள் எத்தனை மௌனங்களை கலைத்திருக்கின்றன.. வாழ்க்கையும் புறக்கணித்த விளிம்பு நிலை மனிதர்களின் மீட்பனாய் வந்தாய்.. தொழுநோயாளி ஒருவர் கலைஞர் இல்லையென்றால் நான் அநாதைப்பிணமாய் அகற்றவும் நாதியற்று போயிருப்பேன் என்றபோது தெரிந்தது, ஒரு தலைவனின் பெயர், போர்க்காலங்களில் மட்டுமே எழுதப்படுவதில்லை.. சாமானியர்களின் கண்களில் ததும்பும் மகிழ்ச்சி பூக்களால் வார்க்கப்படுகிறது
|
பொன்விழா
தோல்விகளில் துவளும் இருண்மை சூழ்ந்த கனப்பொழுதுகளை கூட வாடிக்கையான உன் வேடிக்கை பேச்சால், நம்பிக்கையின் ஊற்றுகளாய் மாற்றிவிட முடிகின்றது உன்னால்.. விரிந்து நீளும் பொன்விழா வழித்தடத்தில் உன் புன்னகைக்குப் பின்னால் ததும்பும் வலிகளை யார் அறிவார்?" என்று அந்த வரிகளை அந்த புகைப்படங்களுக்கு நடுவில் இழையோடவிட்டுள்ளார்.. இதைத்தவிர ஒரு ட்வீட் பதிவும் போட்டுள்ளார்.

அண்ணன் ஸ்டாலின்
அதில், "80 வருடங்களுக்கும் மேலாக, தமிழ் - தமிழர் என உழைத்து உயர்ந்தவர் தலைவர் கலைஞர். திராவிடக் கொள்கைகளுக்குச் செயல் வடிவம் கொடுத்த அவரது வாழ்க்கை, வருங்காலத் தலைமுறைக்கும் வழிகாட்டக் கூடிய வரலாறாகும்" என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி, கருணாநிதி ஆட்சியின் நீட்சி - தமிழ் மொழி, தமிழ் வளர்ச்சி, தமிழ்நாடு வளர்ச்சிக்கு வாழ்நாள் முழுவதும் உழைத்தவர் கருணாநிதி" என்று பதிவிட்டுள்ளார்.. அப்பாவை பாராட்டிய அதேசமயம், தன் அண்ணனின் ஆட்சியையும் மறக்காமல் பாராட்டிய கனிமொழியின் இந்த பரந்த குணம், கருணாநிதியின் மகளுக்கு இயல்பாக இருப்பதில் வியப்பில்லைதானே..!
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications