"வீட்டிலதான் இருப்பேன்.. வர சொல்லுங்க".. ஒரே போடு போட்ட சி.வி.சண்முகம்.. திண்டிவனமே அதிர்ந்து போச்சு

சிவி சண்முகம் மறுபடியும் கைது என பொய் தகவல் பரப்பப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் நாளுக்கு நாள் பரபரப்புகள், ட்விஸ்ட்கள் ஏற்பட்டு கொண்டிருக்கும் நிலையில், கட்சி 2 ஆக உடைய போகிறதா என்ற கவலை தொண்டர்களிடம் எழுந்துள்ளது.. மேலும் மாஜிக்கள் சசிகலா பக்கம் சாய்வார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுகிறது.

சசிகலாவின் தீவிர எதிர்ப்பாளர்களில் முக்கியமானவர் மாஜி அமைச்சர் சிவி சண்முகம்.. எடப்பாடி பழனிசாமியின் மிகமிக தீவிரமான விசுவாசி..

கடந்த 5 ஆண்டு காலத்தில், எடப்பாடியே அமைதி காத்தாலும் சசிகலாவின் பெயரை சொன்னால் கொந்தளித்தவர் சிவி சண்முகம்தான்.

 நடவடிக்கை

நடவடிக்கை

''கருவாடு மீனாகிவிட முடியாது என்று காளிமுத்து சொன்னாரே. ஆனால், கருவாடு கூட மீனாகிவிடலாம். சசிகலா ஒருநாளும் அதிமுகவுக்குள் வர முடியாது, ஓராயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது'' என்று சொன்னவரும் சண்முகம்தான்... இந்த இயக்கத்தில் சசிகலா எங்கே இருந்தார் என்பதே தெரியாது, அவருக்கும், அதிமுகவின் சரித்திரத்திற்கும் சம்பந்தமே இல்லை, அம்மா வீட்டில் வேலைக்காரராக இருந்தார். வேலை முடிந்தது அவர் சென்றுவிட்டார். அவ்வளவுதான். அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லி கொண்டே இருந்தவர்.

அதிமுக

அதிமுக

இந்நிலையில், அதிமுகவுக்குள் நிறைய பூசல்கள் வெடித்து வருகின்றன.. ஓபிஎஸ்ஸுக்கான முக்கியத்துவத்தை எடப்பாடி தருவதற்கு தவறவிட்டதன் விளைவு, கட்சி இன்றைக்கு 2ஆக பிரியுமோ என்ற கேள்வியையும் முன்னெடுத்து வருகிறது.. எனவே, ஓபிஎஸ் - எடப்பாடி என இரு ஆதரவாளர்கள் தனித்தனியாக பிரியக்கூடிய சூழலும் உருவாகிவிடும் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.. ஓபிஎஸ் சசிகலா பக்கம் சாய்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்தாலும், எடப்பாடியின் அதிதீவிர ஆதரவாளராக சொல்லப்படும் சிவி சண்முகமும், சசிகலா பக்கம் சாய்வதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு என்கிறார்கள்.

சசிகலா

சசிகலா

ஊழல் புகார்களில் சிக்கிய மாஜிக்கள் ஒவ்வொருவராக கைதாகி வரும் நிலையில், அந்த கைது நடவடிக்கையை இதுவரை அதிமுக மேலிடத்தால் தடுத்து நிறுத்த முடியவில்லை.. இனியும் கைது நடவடிக்கைகள் தொடரும் என்பதை அழுத்தம் திருத்தமாக திமுக தலைமை சொல்லி வருவதால், மற்ற மாஜிக்களுக்கும் கலக்கம் சூழ்ந்து வருகிறது.. அந்த வகையில் சிவி சண்முகத்தையும் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக ஒரு பீதி ஒரு வார காலமாகவே நிலவி கொண்டிருக்கிறது. அதனால்தான், 4 நாட்களுக்கு முன்பு அவர் வீட்டு முன்பாக தொண்டர்கள் கூடினர்.

 பின்னணி என்ன?

பின்னணி என்ன?

இதனால் சசிகலா வந்தால்தான் தங்களுக்கு பாதுகாப்பு என்று சண்முகம் நினைக்கத் தொடங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது... இந்நிலையில், சண்முகத்தை கைது செய்யப் போவதாக பரவிய தகவலால், மறுபடியும் அவரது வீட்டின் முன்பு ஏராளமாக தொண்டர்கள் குவிந்தனர்.. இதற்கு பின்னணி காரணமும் சொல்லப்பட்டது.. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கைதை கண்டித்து, பிப்ரவரி 28ம் தேதி விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது... அதில், முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசும்போது சொன்னதாவது:

 திண்டிவனம்

திண்டிவனம்

''என்னை கைது செய்யப் போவதாக தகவல் பரப்பி வருகின்றனர்.. ''வீட்டில் தான் இருப்பேன். எப்போது வேண்டுமானாலும் கைது செய்ய வரலாம்" என்று சொல்லியிருந்தார்.. அன்று இரவு 8:00 மணியளவில் சண்முகம் கைது செய்யப்பட்டு விட்டதாக வதந்தி பரவியது... நேற்றும் திண்டிவனத்தில் சண்முகத்தை கைது செய்ய, அவரது வீட்டின் அருகே போலீஸ் குவிக்கப்பட்டதாக மீண்டும் வதந்தி பரவியது. இதனால் விடிகாலையிலேயே தொண்டர்களும் ஆதரவாளர்களும் சண்முகம் வீட்டின் முன்பு திரண்டனர். எம்எல்ஏக்கள் சக்கரபாணி, அர்ஜுனன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் அங்கு விரைந்து வந்ததால் திண்டிவனமே பரபரப்புக்கு உள்ளாகிவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+