2 நாள்! நிர்வாகிகளிடம் நடிகர் விஜய் கூறியது இதுதான்! சீக்ரெட்டை உடைத்த புஸ்ஸி ஆனந்த்.. அடுத்து என்ன?
சென்னை: நடிகர் விஜய் நேற்று, இன்று என 2 நாட்கள் சென்னையில் தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்தார். 224 தொகுதிகளிலும் இரவு பாட சாலை திட்டத்தை நடிகர் விஜய் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் உண்மையில் 2 நாள் மீட்டிங்கில் நடந்தது என்ன? என்பது பற்றி விஜய் மக்கள் இயக்கத்தின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முக்கிய விளக்கமளித்துள்ளார்.
நடிகர் விஜயின் ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் செயல்பட்டு வருகின்றனர். இந்த இயக்கத்தின் பெயரில் பல்வேறு தரப்பு மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். நடிகர் விஜயின் அறிவுரைப்படி அன்னதானம், ரத்ததானம் உள்ளிட்டவற்றை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே தான் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன. இதன் ஒருபகுதியாக தான் விஜய் இயக்க நிர்வாகிகளிடம் தொகுதி வாரியாக பல்வேறு விபரங்களை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த ஆண்டு 10, 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை விஜய் சமீபத்தில் சந்தித்தார். தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் தொகுதிக்கு 3 மாணவர்கள் வீதம் 1200க்கும் அதிகமானவர்களை விஜய் சந்தித்து பரிசு, கல்வி உதவித் தொகை வழங்கினார். அப்போது சில மாணவ-மாணவிகள் அரசியலுக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.
அதேபோல் நடிகர் விஜயும், ‛‛பணம் வாங்கி கொண்டு யாரும் ஓட்டளிக்க கூடாது. எந்த காரணத்தை கொண்டும் ஓட்டை விற்பனை செய்யக்கூடாது. இதனை கடைப்பிடிப்பதோடு, பெற்றோர்களிடம் வலியுறுத்த வேண்டும்'' என தெரிவித்தார். இது நடிகர் விஜயின் அரசியல் பயணத்துக்கு வலு சேர்க்கும் விதமாக இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் நடிகர் விஜய் திடீரென தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நேற்றும், இன்றும் சென்னையில் ஆலோசனை நடத்தினர். விஜய் விரைவில் அரசியலுக்கு வரலாம் என கூறப்படும் நிலையில் இந்த சந்திப்பு அதிக முக்கியத்துவம் பெற்றது. இந்நிலையில் தான் நிர்வாகிகளுடனான நடிகர் விஜயின் 2 நாள் சந்திப்பு இன்றுடன் முடிவடைந்தது.
இந்நிலையில் தான் நடிகர் விஜய் இளம் வாக்காளர்களை குறிவைத்து இரவு நேர பாட சாலையை 234 தொகுதிகளிலும் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் 2 நாட்களில் நடந்தது என்ன? விஜய் கூறியது என்ன? என்பது பற்றிய முக்கிய தகவலை விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
நடிகர் விஜய் சமீபத்தில் மாணவ-மாணவிகளை சந்தித்தார். அப்போது மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை நிர்வாகிகள் அழைத்து வந்து பத்திரமாக அவர்களின் வீடுகளில் கொண்டு போய் சேர்த்தனர். இதுதொடர்பாக நேற்றும், இன்றும் நிர்வாகிகளை அழைத்து மதிய விருந்து கொடுத்தார். மேலும் தனிப்பட்ட முறையில் நிர்வாகிகளை சந்தித்து நன்றி தெரிவித்தார். அதோடு குடும்பத்தை பற்றி விசாரித்தவர், குடும்ப உறுப்பினர்களை பார்த்து கொள்ளும்படி கூறினார். இது எப்போதும் நடக்கும் ஒரு நிகழ்வு தான் இதில் வேறு ஒன்றும் இல்லை'' என்றார்.
இந்த வேளையில், ‛‛புதிதாக இரவு நேர பாட சாலை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறதே'' என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, ‛‛இது ஏற்கனவே கடலூர் மாவட்ட நிர்வாகிகளால் நடத்தப்பட்டு வருகிறது. இரவுநேர பாட சாலை திட்டம் விஜய் அனுமதி பெற்ற பிறகு அதுபற்றி தெரிவிப்போம்'' என்றார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications