திமுக கனவிலும் நினைக்காத சம்பவம் நடக்க போகுது.. அமித்ஷா எடப்பாடி சந்திப்பில் நடந்தது என்ன?
சென்னை: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அண்மையில் டெல்லியில் சந்தித்தார். அந்த சந்திப்பு குறித்து பல்வேறு வதந்திகள் மற்றும் ஊகத்தின் அடிப்படையில் தகவல்கள் வேகமாக பரவி வருகிறது. ஆனால் அமித்ஷா உடன் சந்திப்பில் உண்மையில் என்ன நடந்தது.. எடப்பாடி வைத்த டிமாண்ட் என்ன என்பது குறித்து அதிமுகவில் எடப்பாடிக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தோம். அந்த தகவலை இப்போது பார்ப்போம்.
2026 சட்டசபை தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. அதேநேரம் அதிமுகவில் செங்கோட்டையன் பிரச்சனை, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற டிடிவி தினகரன், நீக்கப்பட்ட ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகியோரை வைத்து ஊடகங்களில் பல்வேறு ஊகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. பாஜக தான் இவர்களின் பின்னணியில் உள்ளதாகவும் செய்திகள் பரவி வந்தன.

இதுபற்றி அதிமுக வட்டாரத்தில் கேட்ட போது, அதிமுக உடன் பாஜக கூட்டணி சேரும் போதே, எடப்பாடி பழனிசாமி தான் ஜெயித்தால் முதல்வர் என்று பாஜக உறுதியளித்தது. அதன்படியே முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. செங்கோட்டையனை அமித்ஷா சந்திக்கவே இல்லை. செங்கோட்டையன் மற்றும் ஓபிஎஸ், டிடிவி விஷயத்தில் தலையிட வேண்டாம் என பாஜகவிடம் எடப்பாடி பழனிசாமி கூறினாராம். அதனை பாஜக ஏற்றுக்கொண்டதாவும் சொல்லப்படுகிறது.
அதேபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அதிமுக பொதுச்சொல்லார் எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கைகள் பற்றியும் அதிமுக வட்டாரத்தில் விசாரித்தோம். அவர்கள் கூறிய தகவல்களின் படி, தமிழ்நாடு அமைச்சர்களுக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்குகள் தேக்க நிலையில் இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்தாராம்.. இந்த வழக்குகள் ஏன் தேக்க நிலையில் இருக்கின்றன? ஏன் அமலாக்கத்ததுறை விரைவாக நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறாராம்.
குறிப்பாக அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன், எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், கே என் நேரு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியவர் மீதான வழக்குகள் விசாரணை விறுவிறுப்படையாததற்கு காரணம் என்ன? அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்படவில்லை என்ற கேள்வியை எழுப்பினாராம்.
விரைவாக இந்த விவகாரங்களிலே அமலாக்கத்துறை செயல்பட வேண்டும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி இருக்கிறார். இதை தவிர உதயநிதி ஸ்டாலின் சொகுசு கார் இறக்குமதி செய்தது தொடர்பான வழக்கும் மிகுந்த தேக்க நிலையிலே இருக்கிறது. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டிருக்கிறாராம்.
ஏன் இந்த தேக்க நிலை தமிழக அமைச்சர்கள் அழுத்தத்தின் காரணமாக இத்தகைய தேக்க நிலை உள்ளதா? என்ற கேள்வியை எடப்பாடி பழனிச்சாமி எழுப்பி இதை உள்துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறாராம். இந்த தகவல்கள் மெல்ல மெல்ல இப்போது ஊடகங்களில் கசிந்து வருகிறது.
இதனிடையே அதிமுக எம்பி இன்பதுரை வெளியிட்ட ட்வீட் பதிவில், எடப்பாடியார் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்தார் என்பது ஒரு செய்தி! திமுக அரசு தொடர்பாக அதிர்ச்சி தகவல்கள் அங்கு பகிரப்பட்டது மற்றொரு செய்தி! இந்த செய்திகளை திசை திருப்ப எத்தனை மெனக்கெடல்கள்? எத்தனை பொய்ச் செய்திகள்? சபாஷ் ஸ்டாலின் மீடியா! என்று விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications